Home செய்திகள் ’’கோவையில் ரூபாய் 1 கோடி மதிப்பில் உருவாகும் “ஃபுட் ஸ்ட்ரீட்..!”

’’கோவையில் ரூபாய் 1 கோடி மதிப்பில் உருவாகும் “ஃபுட் ஸ்ட்ரீட்..!”

0
’’கோவையில் ரூபாய் 1 கோடி மதிப்பில் உருவாகும் “ஃபுட் ஸ்ட்ரீட்..!”

கோவையில் உள்ள வஉசி மைதானம் சாலையில் ரூபாய் 1 கோடி மதிப்பில் “ஃபுட் ஸ்ட்ரீட்” அமைக்க மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

வஉசி மைதானம் சாலையில் சிறுவர் பூங்கா, தாவரவியல் பூங்கா, உயிரியல் பூங்கா என மக்கள் அதிக அளவில் கூடும் பல்வேறு பொழுதுபோக்கு தளங்கள் இருப்பதால், இங்கு “ஃபுட் ஸ்ட்ரீட்” அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்பாடு செய்யவுள்ளனர்.

இந்த “ஃபுட் ஸ்ட்ரீட்” மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு, தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழலும் உருவாக்கப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோ. தீபா புவனேஸ்வரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here