Home செய்திகள் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

0
சுதந்திர தின விழா கொண்டாட்டம் – போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சென்னையில் உள்ள கோட்டையில் சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சியானது நடைப்பெறவுள்ளது.

காலை 6 மணி முதல் இந்நிகழ்வானது தொடங்கும் மற்றும் இந்நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலைகள் பின்வருமாறு:

காமராசர் சாலை :

நேப்பியர் பாலம் தொடங்கி போர் நினைவு சின்னம் வரை.

இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை:

போர் நினைவுச் சின்னம் தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை.

மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்தானது தடை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காமராசர் மற்றும் இராஜாஜி சாலையின் மூலம் பாரிமுனையை வந்தடையும் வழி:

1.சுவாமி சிவானந்தா சாலை
2.அண்ணா சாலை 3.முத்துசாமி பாலம் 4.முத்துசாமி சாலை 5.ராஜா அண்ணாமலை மன்றம்
6.வடக்கு கோட்டை

பாரிமுனை மற்றும் இராஜாஜி சாலையின் மூலம் காமராஜர் சாலையை வந்தடையும் வழி:

1. வடக்கு கோட்டை பக்கசாலை (NFS ROAD)
2. ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு 3.முத்து சாமி சாலை 4.ஈ.வி.ஆர் சாலை 5.பல்லவன் சாலை 6.அண்ணா சாலை 7.வாலஜா சாலை

அண்ணா சாலை மற்றும் கொடிமர சாலை மூலம் பாரிமுனையை வந்தடையும் வழி:

1. வாலஜா சிக்னல் சந்திப்பு
2.முத்துசாமி பாலம் 3.ராஜா அண்ணாமலை மன்றம்
4.NFS சாலை

போன்ற சாலைகள் வழியாக சென்றடையலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தே. சுகன்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here