நாடு முழுவதும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ’பாலவதிகா-3’ என்று அழைக்கப்படும் பிரி-பிரைமரி வகுப்புகள் (Pree Primary Class) (பால்வாடி) மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜூலை 6-ம் தேதியில் இருந்து ஜூலை 18-ம் தேதி வரை சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி அறிவிப்பில், ‘2023-2024 கல்வி ஆண்டில் பாலவதிகா-3 சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு 6.7.2023 அன்று தொடங்கி, 18.07.2023 அன்று நிறைவடையும். சேர்க்கை விபரங்களை அந்தந்த கேந்திர வித்யாலயா பள்ளி இணையதளத்தைப் பார்க்க வேண்டும். பள்ளி நோட்டிஸ் போர்டில் விபரம் அறிவிப்பு வெளியிடப்படும். 31.03.2023 அன்றைய நிலவரப்படி மாணவ, மாணவியின் வயது 5 முடிந்திருக்க வேண்டும். ஆனால், 6 வயது பூர்த்தி ஆகி இருக்க கூடாது. கட்டாய கல்வி சட்டத்தின் படி உள்ள விதிகள், பாலவதிகா சேர்க்கைக்கும் பொருந்தும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சேர்க்கை ஆவணங்கள்:
பிறந்த சான்றிதழ், சமூக வகைச் சான்றிதழ் (எஸ்சி., எஸ்டி., ஓபிசி., பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர்), குடியிருப்பு சான்றிதழ்,
இரத்த வகை அறிக்கை, இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், சேவை சான்றிதழ் (அரசு ஊழியர்களுக்கு மட்டும்).
பள்ளி நேரம்: வாரத்தில் ஐந்து நாட்கள் வகுப்பு. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வகுப்பு. சீருடைகள் கிடையாது.
சேர்க்கை முறை: மொத்தம் 40 இடம். மத்திய அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். கூடுதல் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் பள்ளியின் நோட்டிஸ் போர்டில் ஒட்டப்படும்.
புதிய தேசிய கல்விக் கொள்கை:
திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது ஒவ்வொரு குழந்தையும் “ஆயத்த வகுப்பு” அல்லது “பாலவதிகா” க்கு மாற்றப்படும் என்று முன்மொழிந்துள்ளது. “ஆயத்த வகுப்பில் கற்றல் முதன்மையாக விளையாட்டு அடிப்படையிலான கற்றலை அடிப்படையாகக் கொண்டது. அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் மனோதத்துவ திறன்கள் மற்றும் ஆரம்பகால கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற்றை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேர்க்கை குறித்த முழு விபரங்களுக்கும் பாலவதிகா வகுப்பு இருக்கும் பள்ளிகள் குறித்த விபரங்களை முழுமையாக அறிய https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தைப் பார்க்கவும்.