அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஜுலை 3-ம் தேதி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கை:
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.Sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி. இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்திறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் பார்க்கலாம். ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886/044-22502267).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞசல் வழியாக www.ovemclmohsa2021@gmail.com சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை உடனடியாக அனுப்பி வைக்கலாம்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தப்பணிக்கு தேர்வுபொறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

