மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரத்தில் ஒரு சிறிய தையல் கடை நடத்தி வந்தார் எழுத்தாளர் கர்ணன். கடந்த 55 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்திற்கு பெரும் கொடைகளை வழங்கியிருக்கிறார்.
எழுத்தாளர் கர்ணணில் எழுத்துக்கள் கல்கி, அமுதசுரபி, தாமரை, செம்மலர், கலைமகள், தீபம், தினமணிக் கதிர், கனணயாழி, விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. மணிக் கொடி காலம் தொட்டு சமகாலம் வரை அனைவரையும் அறிந்து வைத்திருந்தார். அனைவரையும் வாசித்தார். பலருக்கு அவரது விமர்சனங்களை போஸ்ட் கார்டிலும் கடிதமாகவும் எழுதிவும் செய்தார்.
இலக்கிய கூட்டங்கள் – தையல் கடை
1990-களில், மதுரையில் இலக்கிய கூட்டங்கள் அனைத்திற்கு தனது துணைவியாருடன் தான் வருவார். அப்படி வாழ்வு இலக்கியமும் ஒன்றேன வாழ்ந்தவர். இலக்கிய கூட்டங்கள் மட்டுமின்றி காந்திய் மியுசியத்தில் நடக்கும் எல்லா நிகழ்விலும் அவர் இருப்பார்.
அவரது தையல் கடையில் தமிழ் சூழலில் வெளியாகு அனைத்து சஞ்சிகைகளையும் பார்க்கலாம். நாம் பார்த்ததும் அவர் நமக்கு அளிப்பது அவரது புன்னகையை. புன்னகையால் நம்மை அப்படியே அனைத்துக் கொள்வார். புன்னகையின் வழியே பெரும் உறவையும் ஈரத்தையும் நம் மீது பாய்ச்சுவார். நாம் ஏதேனும் ஒரு சஞ்சிகையை, புத்தகத்தை உற்று பார்த்தால் போது இதை உடன் எடுத்துச் செல்லுங்கள், கிடைப்பதை எல்லாம் வாசியுங்கள் என்பார்.
வாழ்க்கை அவர் மீது எந்த கருனையையும் காட்டாமல் தொடர்ச்சியாக வறுமையில் தான் வைத்திருந்தது. வறுமையின் பிடியில் வாழ்நாள் முழுவதும் சிக்கித்தவித்தார். தையல் கடையை அவர் மூடிய பிறகு இன்னும் வறுமை அவர் மீது தன் அன்பை பெருக்கியது.
எழுத்தாளர் ஜி.நாகராஜனின் மிக நெருங்கிய நண்பர் என்றால் அவரது நிழல் இவர் மீதும் படிந்திருக்கும் தானே. கடந்த பத்து ஆண்டுகளாகவே அவர் பேச்சில் ஒரு பெரும் சோர்வு இருந்தது. இலக்கிய சூழல் வணிகமாக மாறிவிட்டது குறித்து மிகவும் சங்கடப்படுவார். மனதில் பெரும் சங்கடங்களை சுமந்தபடி எழுத்தாளர் கர்ணன் இன்று மதுரையில் காலமானார்.
நாளை ஜூலை 21 மதியம் அவரது இறுதிப் பயணம் மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் இல்லத்தில் இருந்து தொடங்கும்.
நாவல்
1) உள்ளங்கள் 1980
2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978
3) மயங்காத மனசுகள் 2003
4) ஊமை இரவு 2009
5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008
6) மறுபடியும் விடியும் 2008
7) திவ்யதாரிணி 2011.
சிறுகதைகள்
1) கனவுப்பறவை 1964
2) கல்மனம் 1965
3) மோகமுக்தி 1967
4) மறுபடியும் விடியும் 1968
5) புலரும் முன்… 1974
6) வசந்தகால வைகறை 1977
7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994
8) இந்த மண்ணின் உருவம் 1999
9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002
10) இசைக்க மறந்த பாடல் 2004
11) முகமற்ற மனிதர்கள் 2004
12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009
13) பொழுது புலர்ந்தது 2013
14) வாழ்ந்ததின் மிச்சம் 2015
கட்டுரைகள்
1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன் வரை 2011
2) அகம் பொதிந்தவர்கள் 2012
3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014
4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015
வரலாறு
1) அவர்கள் எங்கே போனார்கள் 2005
2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011
3) இன்று இவர்கள் 2013
4) இந்தியாவின் எரிமலை 1979
5) விடிவை நோக்கி 1980
6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981
7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981