’’சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்.
ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?’’
இவ்வாறு, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை தனது முகநூலில் தெரிவித்துள்ளார்கள்.