’’காமராசர் கதிர் – மு. அப்பாவு, பெரியார் ஒளி – டி.ராஜா, மார்க்ஸ் மாமணி – கே.பாலகிருஷ்ணன்..!’’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் அறிவிப்பு!

’’காமராசர் கதிர் - மு. அப்பாவு, பெரியார் ஒளி - டி.ராஜா, மார்க்ஸ் மாமணி - கே.பாலகிருஷ்ணன்..!’’ என்று 7 சான்றோர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அறிவித்துள்ளார்.

0
398

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை :

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். கடந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்குகிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதல்வர் சித்தாரமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா அவர்களுக்கும், “பெரியார் ஒளி” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜா அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

2023-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:

1) அம்பேத்கர் சுடர்: திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர், சிபிஐ (எம்.எல்).
2) பெரியார் ஒளி: – து.ராஜா, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3) காமராசர் கதிர்:-. மு. அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.
4) அயோத்திதாசர் ஆதவன்:- இராஜேந்திரபால் கௌதம், மேனாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.
5) மார்க்ஸ் மாமணி – கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ (எம்)
6) காயிதேமில்லத் பிறை: முனைவர் மோகன் கோபால், மேனாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.
7) செம்மொழி ஞாயிறு : தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.

விசிக விருதுகள் வழங்கும் விழா, மே 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்