இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டை புழக்கத்தில் இருந்து எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, திடீரென்று நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை:
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்