இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது 10+2 (B.TECH) CADET ENTRY SCHEME (PERMANENT COMMISSION) COURSE COMMENCING – JAN 2024. ஜுன் 30 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தகாலியிடம்: 30 (பெண்களுக்கு 09 இடம்)
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்து பிளஸ் டூ தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவிகிதத்துக்கு குறையாத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?: பி.இ., பி.டெக்., படிப்பில் சேர ஜெஇஇ மெயின் தேர்வு -2023-ல் எழுதியவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத்தகுதி: இந்திய கடற்படை பரிந்துரை செய்துள்ள உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். எனவே, அதுபற்றி இந்திய கடற்படை இணையத்தளத்தை பார்க்க வேண்டும்.
தேர்வு முறை: ஜெஇஇ-2023 (மெயின்) தேர்வு அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாராகும். அதன்படி, ஒரு பட்டியல் தயாராகும். அவர்கள் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
பணி: தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள், பிடெக் படிப்பில் சேக்கப்படுவர். Applied Electronics & Communication Engineering, Mechanical Engineering or Electronics &
Communication Engineering படிப்பு சொல்லித்தரப்படும். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் இந்த சான்றிதழைத் கொடுக்கும். படிப்பு முடிந்தவுடன் இந்திய கடற்படையில் Executive and Technical Branch (Engineering & Electrical) சேர்த்துக் கொள்ளப்படுவர்.
விண்ணப்பம்: www.joinindiannavy.gov.in. என்ற இணையத்தில் ஆன்லைனில் ஜுன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.