Home செய்திகள் ”ஐசிஎப் சென்னையில் 3 மாதங்கள் தொழில் பயிற்சி..!” 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

”ஐசிஎப் சென்னையில் 3 மாதங்கள் தொழில் பயிற்சி..!” 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
”ஐசிஎப் சென்னையில் 3 மாதங்கள் தொழில் பயிற்சி..!” 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரயில் கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2023-24 ம் ஆண்டின் வரவிருக்கும் தொகுதிக்கு இளைஞர்கள், பெண்களுக்கு ஐசிஎப் சென்னையில் குறுகிய கால (3 மாதங்கள்) தொழில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சியில் எலெக்ட்ரிஷியன், மெஷினிஸ்ட், வெல்டர், டெக்னிசியன் மெக்கட்ரானிக்ஸ், கம்யூட்டர் பேசிக்ஸ் மற்றும் பிட்டர் டிரேடர்கள் அடங்கும்.

இந்த பயிற்சி திட்டத்தில் எலெக்ட்ரிஷியன் 25 பேர், மெஷினிஸ்ட் 25 பேர், வெல்டர் 25 பேர், டெக்னிசியன் மெக்கட்ரானிக்ஸ் 25 பேர், கம்பியூட்டர் பேசிக்ஸ் 30 பேர், பிட்டர் 25 பேர் என தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சிக்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், உணவு – தங்கும் இடத்தை விண்ணப்பத்தாரரே சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தகுதி -10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது -18 முதல் 35 வரை
விண்ணப்பிக்கும் காலம் -20.06.2023 வரை
பயிற்சி தொடக்கம்: 11.07.2023

பயிற்சிக்காக விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள், பயிற்சி மற்றும் விரிவான தகவல்களுக்கு க்ஶ www.railkvy.indianrailways.gov.in என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும். மேலும் விபரங்களுக்கு 044-2614 7671, 044-2614 7672, 044-2614 7674 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த பயிற்சியின் மூலம் தொழில் திறன் பெறலாம். சொந்தமாக தொழில் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here