கடலில் தொலைதூர நீச்சல் போட்டியில், ஆசிய சாதனைகள் புத்தகத்தில் (Asian Book of Records) இடம் பிடித்த 11 வயது சென்னை சிறுவன்.
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதிகளின் 11 வயது மகனான லக்ஷய் கிருஷ்ணகுமார், கடலில் 15 கிலோமீட்டர் தூரம் நீச்சல் செய்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஆசிய கண்டத்திலேயே, 15 கிலோமீட்டர் தொலைவை, 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நீலாங்கரை முதல் மெரினா வரையிலான கடலில் 15 கிலோமீட்டர் தொலைவை, அவர் மூன்று மணி நேரம் பதினெட்டு நிமிடங்களில் கடந்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பின்னர் நடந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு நீச்சல் ஆணையச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, சாதனை படைத்த சிறுவனைப் பாராட்டினார்கள்.