எம்.ஆர்.பி மூலம் (மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்) ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரியும் 499 பேருக்கு வரும் 13 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி விரைவில் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், எம்.ஆர்.பி செவிலியர்கள் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டுவரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய எம்.சின்னதுரை,“ தொடர்ந்து போராடும் ஒப்பந்த செவிலியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் செய்ய அமைச்சரும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதிமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின.
இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது:
காலியாக உள்ள 499 நிரந்தர செவிலியர்கள் பணியிடங்களில் எம்.ஆர்.பி செவிலியர்களை வைத்தே நிரப் பிட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதற்கிணங்க வருகின்ற 13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் இனச்சுழற்சி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப் பட்டு எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் பணியாற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமை ஏறத்தாழ 499 பேருக்கு வாழ்வு கிடைக்கவிருக்கிறது. அதுமட்டு மல்லாமல் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 300 செவிலியர் பணியிடங்களை புதிய தாக தோற்றுவித்து அதிலும் தொகுப் பூதிய செவிலியர் தற்காலிக செவிலியர் களை கொண்டு நிரப்பிட வேண்டும் என்று முதலமைச்சர், அறிவுறுத்தியுள்ளார்.
எனவே இந்த 499 பணி யிடங்களுக்கு பிறகு இந்த 300 பணி யிடங்களும் நிரப்புவதற்கு முதல மைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களை நிரந்தர காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்யப்படும்போது ஏற்படுகின்ற தொகுப்பூதிய செவிலியர் காலிப்பணியிடங்களை இனசுழற்சி முறையில் பணிநியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். நிரந்தர செவிலியர்களுக்கு தரப்படுகின்ற விடுப்பு அதாவது மகப்பேறு விடுப்பு மற்றும் அதற்கான பணப்பயன்களும் தங்களுக்கும் தர வேண்டும் என்றும், ஒப்பந்த பணியிலிருந்து நிரந்தர பணியிடத் திற்கு மாற்ற வேண்டும் என்றும் 3 கோரிக்கைகளை எம்ஆர்பி செவிலியர்கள் வைத்துள்ளார்கள்.
முதலமைச்சர் கவனத்திற்கு இந்த 3 கோரிக்கைகளும் கொண்டு சென்ற போது செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டாலும் பரவாயில்லை, கருணை உள்ளத்தோடு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நிதித்துறையுடன் கலந்து பேசி அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் பணப்பயன்களை பெற்று தருவதற்கும் அரசிடம் கலந்தா லோசித்து ஊதிய உயர்வு குறித்து பேசு வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.