மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கி-யானது Junior Assistant Manager, Executives – Sales and Operations ஆகிய காலிப் பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
என்ஜினியரிங் முடித்தவர்கள், கலை அறிவியல் பட்டதாரிகள், இந்த வேலைக்கு நவம்பர் 22 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்களின் வயது 20 -ல் இருந்து 25 -க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, சாதி வாரியாக வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. SC, ST, OBC (NCL) and EWS ஆகிய பிரிவினருக்கு மத்திய அரசின் விதிகளின் படி இட ஒதுக்கீடு உண்டு.
Visually Impaired, Orthopedically Handicapped, Hearing Impairment, Multiple Disability, intellectual Disability ஆகிய பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Logical Reasoning, Data Analysis & Interpretation, English Language, Quantitative Aptitude, General / Economy / Banking Awareness / Computer /IT ஆகிய பிரிவுகளில் இருந்து கொள்குறிவகையில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றிபெறுவோர் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணியில் நியமிக்கபடுவர்.
எனவே, இந்த ஐடிபிஐ வங்கியில் அதிகாரி பணிக்கு பொறியியல் பட்டதாரிகள், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கலாம். https://www.idbibank.in/ என்ற தளம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை திறந்திருக்கும். எழுத்து தேர்வுகள், December 30 ஆம் தேதி Executive – Sales and Operations (ESO) என்ற பதவிக்கும் December 31 ஆம் தேதி Junior Assistant Manager பதவிக்கும் தேர்வு நடைபெறுகிறது.
எனவே, பட்டதாரிகள் உடனே விண்ணப்பித்து வங்கிப் பணியில் சேருங்க.. கடைசி தேதி டிசம்பர் 6. வெப்சைட் www.idbibank.in