தமிழ்நாட்டில் என் மண் என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு பல்வேறு கல்லூரிகள் ஏற்பாடு செய்திருந்தன. நாடு முழுவதும் நடைபெறும் என் மண் எனது தேசம் அமிர்த கலச யாத்திரையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மண் மற்றும் அரிசியை சேகரித்து அதனை டெல்லிக்கு அனுப்பும் பயணத்தின் ஒரு பகுதியாக பின்வரும் கல்லூரிகள் அமிர்த கலச யாத்திரைகளை நடத்தின.
நாட்டிற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமூகத்தின் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை விதைக்கவும் இந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கான தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற உறுதிமொழி ஏற்றனர்.
பானையில் இருந்து அரிசியை எடுத்து, நமது உணவளிக்கும் விவசாயிகளை நினைவுகூர்வதில் இந்த உறுதிமொழி தொடங்கியது.
மதுரை என்.எம்.எஸ்.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப்பிரிவு மற்றும் மதுரை காமராஜ் பல்கலை நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து சாமநத்தம், அஞ்சுகுடி கிராமங்களில் என் மண் என் தேசம் இயக்கத்தின் மண் சேகரிப்பு முகாமை நடத்தின.
மதுரை புனித இருதயனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுக கேந்திரா இணைந்து நாட்டின் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் வகையில் என் மண் என் தேசம் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் சார்பில் வாழவந்தான்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமிர்த கலச யாத்திரை நடைபெற்றது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவ்டியா கல்லூரி, சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) ஆகியவற்றிலும் என் மண் என் தேசம் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.