இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெக்னிக்கல் பிரிவுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ஜுன் 30 கடைசி நாள் ஆகும்.
காலியிடம்: ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளையிங் பிரிவுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு பி.இ., நான் டெக்னிக்கல் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் பிளையிங் பிரிவுக்கு 20 – 24, கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 – 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதிதேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.
தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பிக்கும் முறை : https://afcat.cdac.in/AFCAT/
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250
கடைசிநாள் : 30.6.2023
விவரங்களுக்கு : www.afcat.cdac.in/AFCAT