இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிய திருமணமாகாத ஆண் – பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN INDIAN ARMY NCC SPECIAL ENTRY SCHEME 57TH COURSE (APR 2025): SHORT SERVICE COMMISSION (NT) FOR MEN & WOMEN (INCLUDING WARDS OF BATTLE CASUALTIES OF ARMY PERSONNEL).
என்.சி.சி சான்றிதழ் வைத்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ராணுவ நடவடிக்கைகளில் மரணமடைந்த, காணாமல் போன, ஊனமுற்றோரின் வாரிசுகளும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு என்.சி.சி சான்றிதழ் தேவையில்லை என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள் : ஏதாவது ஒரு பட்டப்படிப்பினை 50 சதவிகித மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். இறுதியாண்டு படித்து ரிசல்ட்-க்கு காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். ராணுவத்துக்கு தேர்வு பெறுவோர் ஏப்ரல் 1, 2025 அன்று பட்டதாரி சான்றிதழை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். என்.சி.சி-யில் ’பி’ அல்லது ’சி’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ராணுவ நடவடிக்கைகளின் போது உயிரிழந்த, காணாமல் போன, ஊனமுற்ற (Killed in action, Died of wound or injuries (Other than self-inflicted), Wounded or Injured (Other than self-inflicted), Missing, presumed dead) ஆகியோரின் வாரிசுகளும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு என்.சி.சி சான்றிதழ் தேவையில்லை.
குறைந்தபட்சம் வயது 19 இருக்க வேண்டும். அதிகபட்சம் 25 வயது தாண்டி இருக்க கூடாது. For National Cadet Corps (NCC) candidates (including wards of Battle Casualties) 19 to 25 years as on 01 Jan 2025 (born not earlier than 02 Jan 2000 and not later than 01 Jan 2006; both dates inclusive).

என்.சி.சி ஆண்கள் பிரிவில் மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களுக்கு என்.சி.சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 7 இடங்களுக்கு ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் மொத்தமுள்ள 6 இடங்கள் என்.சி.சி பட்டதாரிகளுக்கும் 1 இடம் வாரிசு பிரிவிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Vacancies.
(a) NCC Men. 70 (63 for General Category and 07 for Wards of Battle Casualties of
Indian Army personnel only).
(b) NCC Women.06 (05 for General Category and 01 for Wards of Battle Casualties of
Indian Army personnel only).
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சென்னையில் மீனம்பாக்கம் அருகே உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். 14 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். இந்த, சார்ட் சர்வீஸ் கமிஷன் பிரிவில் வந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் வெற்றிபெறுவோர் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்படுவர்.
பின்னர், பணி நியமனம் நடைபெறும்.
ஜுலை 11 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை www.joinindianarmy.nic.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். Aadhar number and /or class 10 certificate number is mandatory for registration on the website www.joinindianarmy.nic.in. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு அறிவிக்கையை FINAL_NOFTN_FOR_NCC_SPL_ENTRY_57 இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

