பட்டதாரிகளுக்கு இந்தியன் வங்கியில் 1500 வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 10 ஆம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி விட்டது. ஜுலை 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறும் என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியன் வங்கி செயல்படுகிறது. மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை வங்கியான, இந்தியன் வங்கியில் தொழில் பழகுநர் என்கிற அப்ரண்டீஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் மொத்தம் 1500 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களுக்கு, ஓராண்டு வேலை தரப்படும். கிராமப்புங்களில் உள்ள இந்தியன் வங்கியில் வேலை என்றால் மாதம் ரூ.12 ஆயிரமும் நகர்புற வங்கி என்றால் மாதம் ரூ.15 ஆயிரமும் தொழில் பழகுநர் ஊதியமாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

01.07.2024 அன்று குறைந்த பட்சம் 20 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 28 வயது முடிந்து இருக்கக் கூடாது. ஆனால், SC/ST/OBC/PWBD (அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள்) ஆகிய இடஒதுக்கீடு பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின் படி, உச்ச வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வில் Reasoning Aptitude and Computer Knowledge, General English , Quantitative Aptitude , General Financial Awareness ஆகிய பாடங்களில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் கேட்க்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடைபெறும். தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாணவர்கள், தமிழ் மொழி வழியில் இந்த தேர்வினை எழுதலாம்.
இத்தேர்வுக்கான அனைத்து பாடங்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. எளிதில் புரியும் வகையில் எளிய நடையில் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து அனைத்து வீடியோக்களையும் பாருங்கள். இந்தியன் வங்கியில் வேலையில் சேருங்கள். இந்த வேலை குறித்த முழுமையான அறிவிக்கையை படிக்க indian_bank_1500_job_Apprentices-under-the-Apprentices-Act-1961 இங்கே கிளிக் செய்யலாம்.
ஜுலை 10 ஆம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி விட்டது. ஜுலை 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறும் என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

