இந்திய ராணுவத்தின் முப்படைகளின் மருத்துவ பிரிவில் பணியாற்ற 450 எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு ஜுலை 16 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய படைகளில் சார்ட் சர்வீஸ் அடிப்படையில் ( 14 ஆண்டு சேவை) டாக்டர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மொத்த காலிப்பணியிடம் 450. அதில் ஆண்கள் 338. பெண்கள் 112. எம்.பி.பி.எஸ் படித்து முடித்து முறைப்படி மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும். வயது 30 -க்குள் இருக்க வேண்டும். முதுநிலை டாக்டர் பட்டம் பெற்றிருந்தால் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஜுலை 16 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை https://amcsscentry.gov.in/ ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வு டெல்லியில் மட்டுமே நடக்கும். இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். ராணுவத்தில் பணி புரியும் போது, உயர் கல்வி படிக்கவும் வாய்ப்பு உண்டு.
ராணுவத்தில் பணியாற்ற ஆர்வமும் துடிப்பும் உள்ள இளம் மருத்துவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

