இந்திய இராணுவத்தில் நிரந்தர கமிஷன் பணியில் (Permanent Commission in the Army) சேர்வதற்கான ஆட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 90 காலிப்பணியிடம். 10+2 தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நுழைவு வகை: 10+2 TECHNICAL ENTRY SCHEME – 50
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) ஆகிய பாடங்களைக் கொண்ட 12-ம் வகுப்புத் தேர்வில் 60 சதவிகித மதிபெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். JEE (Mains) 2023 தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
வயது: 16½ வயதுக்கு குறைவாகவும் 19½ வயதுக்கு அதிகமாகவும் இருக்க கூடாது. 02.07.2004 க்கு முன்னர் பிறந்திருக்க கூடாது. 01.07.2007-க்கு பின்னர் பிறந்திருக்க கூடாது (இரண்டு நாட்களும் உள்ளடக்கியது- (both days inclusive).
காலிப்பணியிடம்: மொத்தம் 90
பயிற்சி பணிக்காலம்: 4 ஆண்டு கால பயிற்சிக்கு பின்னர், நிரந்தர அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவர். லெப்டினண்ட் என்ற பதவி வழங்கப்படும். பயிற்சியின் போதே பொறியியல் பட்டபடிப்பு சொல்லித்தரப்படும். மொத்த பயிற்சி ஆண்டுகள் 5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். click on the ‘online application’ button on website www.joinindianarmy.nic.in
சான்றிதழ்கள்: 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பெயர்). 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ். அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல்). ஜேஇஇ தேர்வு ரிசல்ட் நகல் ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜேஇஇ தேர்வு எண் கண்டிப்பாக விண்ணப்பிக்கும் போது பதிவு செய்ய வேண்டும். மற்ற விபரங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை முழுமையாக படித்து தெரிந்து விண்ணப்பிக்க வேண்டும். www.joinindianarmy.nic.in
கடைசி தேதி : ஜூன் 30.
குறிப்பு:
இந்திய இராணுவத்தில் நிரந்தர கமிஷன் பணி என்பது இந்திய ராணுவத்தில் (ஆர்மி) அதிகாரிகள் சேர்க்கையை குறிக்கிறது. இந்த முறையில் பணியில் சேர்ந்தவர்கள் ராணுவ விதிகளின் படி ஓய்வு பெறும் வயது வரை (பணி மூப்பு) வரை வேலையில் இருக்கலாம். தேர்வு செய்யப்படுவோர், கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (10+2 (TES) நுழைவு) சேர்க்கப்பட்டு பயிற்சி தரப்படும். ஆட்சேர்ப்பு இயக்குநரகம் முடிவு செய்த கட் ஆஃப் அடிப்படையில் SSB நேர்காணலுக்கு நீங்கள் அழைக்கப்படுவார்கள்.
TES நுழைவுக்கான பயிற்சியின் மொத்த காலம் 5 ஆண்டுகள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:
அடிப்படை இராணுவப் பயிற்சி:
1 வருடம் (அதிகாரி பயிற்சி அகாடமி கயா)
தொழில்நுட்பப் பயிற்சி: தொழில்நுட்பப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்: கட்டம்-I: மூன்று CTW (கேடட் பயிற்சி பிரிவுகள் அதாவது CME புனே, MCTE மோவ் மற்றும் MCEME செகந்திராபாத்)
ஆண்டுகளுக்கு முன் கமிஷன் பயிற்சி: கட்டம்-II: CME புனே, MCTE Mhow மற்றும் MCEME செகந்திராபாத் ஆகியவற்றில் 1 வருடத்திற்கான போஸ்ட் கமிஷன் பயிற்சி. பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்ணப்பதாரர்களுக்கு பொறியியல் பட்டம் வழங்கப்படும்.