மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.
தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டத்தை கடக்கும் போது, சாலை ஓரங்களில் ஆங்காங்கு பலா பழம் விற்பனை நடப்பதை காணலாம். விவசாயிகள் நேரடியாக விற்கிறார்கள். விவசாயிகளிடம் வாங்கி, வியாபாரிகளும் இந்த இடங்களில் பலாப் பழங்களை விற்கின்றனர்.
இந்த பலாப்பழம் எடையானது, சாதாரணமாக நம்மால் துக்கும் வகையில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி வட்டம், பலாப்பட்டு கிராமத்தில் மணிகண்டனுடைய பலா தற்போதைய நிலவரப்படி அதிக எடையுடையதாக அறியப்படுகிறது. அதன் எடை 52.8 கிகி.
இதுகுறித்து அப்பகுதி பலா விவசாயிகள் கூறுகையில், ‘’இந்த ஆண்டில் இதுவரை விளைந்தவையில் அடையாளம் காணப்பட்ட பெரிய பலா. பலாப்பட்டு கிராமத்தில் மணிகண்டன் தோட்டத்தில் விளைந்ததுதான். விதைக் கன்றுகளின் மூலம் உருவான நாட்டு மரத்தில் விளைந்த பெரிய பலா 52.8 கிகி.எடை கொண்டதாக இருந்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பலாப்பட்டு கிராமத்தில் திரு. மணிகண்டனுடைய பலா தற்போதைய நிலவரப்படி அதிக எடையுடையதாக அறியப்படுகிறது’’ என்று கூறினார்கள்.
தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் பண்ணுருட்டி பலா மேம்பாட்டு குழுவினர் கூறுகையில், ’’இதுபோன்று இன்னும் பிற பகுதியில் உள்ள பலா உழவர்கள் தங்களிடம் உள்ள பெரிய பலா மற்றும் அதிக இனிப்புடைய பலா இருந்தால் அவசியம் தகவல் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். தொடர்பு எண்: 8870890109, 8668154871.
பண்ருட்டி நாலோடையில் நடைபெற இருக்கும் நமது பலா திருவிழாவில் அதிக எடை மற்றும் சுவையுடைய பலா உரிமையாளர்களை அடையாளம் கண்டு சிறப்பிக்க இருக்கின்றோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.