அஜித்தின் ஏகே62 படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது.
விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடபட்டு உள்ளது. படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் தயாரிப்பு செலவு 220 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் மகிழ் திருமேனிக்கு இதுவரை ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக தொகையை இந்த படத்திற்காக கொடுப்பதாக தகவல் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கலக தலைவன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிட்தக்கது.