Madras Murasu

கட்டடப் பொறியியல் துறையில் களசவால்கள் டாக்டர் என் ஆனந்தவல்லி

சிஎஸ்ஐஆர் – ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சியின் கீழ் கட்டமைப்புப் பொறியியல் குறித்த பயிலரங்கு நடைபெற்றது. கல்விசார் அறிவுடன் நடைமுறைத் திறன்களையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் அறிமுக உரையாற்றினார். கட்டடப் பொறியியல் துறையில் உள்ள கள சவால்களைப் புரிந்துகொண்டு, நடைமுறைக்கு ஏற்ற, புதுமையான தீர்வுகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவல்லி அறிவுறுத்தினார்.

சிஎஸ்ஐஆர்-ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சியின் கீழ், சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் “கட்டமைப்பு பொறியியல்” குறித்த இரண்டு நாள் பயிலரங்கை நடத்தின. அனைத்து கல்வி ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயிலரங்கு, கட்டமைப்பு பொறியியலில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.

அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுவான சிஎஸ்ஐஆர், அதன் முதன்மைத் தேசியத் திட்டமான ‘சிஎஸ்ஐஆர்-ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சியை செயல்படுத்துகிறது.  கல்வி, நடைமுறைத் திறன் மேம்பாடு, கள பயன்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் விரிவான திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவல்லி இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். கல்விசார் அறிவுடன் நடைமுறைத் திறன்களையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் அறிமுக உரையாற்றினார். கட்டடப் பொறியியல் துறையில் உள்ள கள சவால்களைப் புரிந்துகொண்டு, நடைமுறைக்கு ஏற்ற, புதுமையான தீர்வுகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த பைலரங்கு மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த புரிதலைப் பெறவும், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது.

CSIR-Structural Engineering Research Centre (CSIR-SERC), Chennai, in collaboration with Sri Venkateswara College of Engineering (SVCE), Sriperumbudur, organized a two-day workshop on “Structural Engineering” on August 24–25, 2026, under the national CSIR Integrated Skill Initiative aligned with Skill India and Atmanirbhar Bharat. Inaugurating the event, Dr. (Smt.) N. Anandavalli, Director, CSIR-SERC, emphasized the necessity of bridging academic concepts with practical civil engineering solutions. Over the two days, senior CSIR-SERC scientists led sessions on diverse, cutting-edge topics: Dr. S. Maheswaran provided an overview of Intellectual Property Rights (IPR), Dr. V. Srinivas discussed Structural Health Monitoring using bridge projects, Dr. P. Kamatchi introduced earthquake-resistant design fundamentals, Dr. Saptarshi Sasmal detailed nano/micro-scale self-sensing smart structures, Dr. S. Vishnuvardhan covered fatigue-resistant steel structures, and Dr. S. Sundar Kumar explained concrete design principles. Coordinated alongside Dr. R. Kumutha (HOD, Civil Engineering, SVCE) and department faculty, the workshop successfully exposed students to emerging technologies, real-world engineering applications, and IPR management.

Scroll to Top