Madras Murasu

Entrance to Palani temple with a vehicle parking area, symbolizing the land registration controversy involving a temple-owned parking site.

பழனி கார் பார்க்கிங் நிலம் பத்திரப்பதிவு சர்ச்சை: சிபிஐ விசாரணை கோரிக்கை

கார் பார்க்கிங் சர்ச்சைகள்…
பழனியில் கார் பார்க்கிங் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஆன்மீக அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் இரண்டு கோடி ரூபாய்க்கு தனிநபர் இருவருக்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன காரணத்தினாலோ சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு தற்காலிக பதிவாளர் வரவழைக்கப்பட்டு அவசர அவசரமாக அந்த பத்திரப்பதிவு நடந்திருக்கிறது.
பொதுவாக தற்காலிக பதிவாளர்களாக வருபவர்கள் பத்திரங்களை பதிவு செய்வதில்லை அன்றைய நடைமுறைகளை கவனித்து விட்டு திருமணம் போன்ற நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்வார்கள் அல்லது முன்கூட்டியே பதிவு செய்வதற்கு தகுதியான பத்திரம் என்று பதிவாளரால் உறுதி செய்யப்பட்ட பத்திரத்தை மட்டும் பதிவு செய்வார்கள் ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பத்திரம் பதிவு செய்யப்படுவதற்கு முந்தைய நாள் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது தான் பதிவு செய்யப் போகின்ற பத்திரத்தை முன்கூட்டியே படித்துப் பார்த்து அதில் உள்ள சிக்கல்கள் அதற்கு தேவையான டாக்குமென்ட்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பவற்றையெல்லாம் உறுதி செய்வார் பத்திரப்பதிவாளர்.
அதுவும் 100 கோடி ரூபாய் சொத்து என்றால் எந்த பத்திர பதிவாளரும் ஒரு முறைக்கு பலமுறை ஆய்வு செய்து அதில் உள்ள விளக்கங்களைக் கேட்டு தான் பதிவு செய்வார்.
இந்தப் பத்திரத்தை தற்காலிக பதிவாளர் எப்படி பதிவு செய்தார் ? எந்த ஆராய்ச்சியும் இன்றி அவர் பதிவு செய்திருக்கிறார் என்றால் அவருக்கு கட்டளை இட்டது யார் ? யாருடைய அறிவுறுத்தலின் பெயரில் அவர் பதிவு செய்தார் இதற்கு பின்னால் இருக்கக்கூடிய சதி என்ன…
இதுதான் இப்போதைய கேள்வி.
ஆனால் அறந்தளையத்துறை அமைச்சரும் ரெய்டுகளுக்கு பெயர் போனவருமான ரமேஷ் இது தவறு என்று சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார் அப்போதுதான் சந்தேகம் வலு க்கிறது.
பதிவு செய்யப்பட்ட இடம் வாகன நிறுத்துமிடம்..
இப்போது ஒரு பிளாஷ்பேக்..
குன்னூரில் ஒரு கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு வாகன நிறத்தும் இடம் கட்டப்பட்டது அது அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக மட்டுமல்ல குன்னூறுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் அனைவரும் வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டப்பட்டு வந்த இடம் அது கோவில் நிலத்தில் கட்டுவதால் இதன் மூலம் வரக்கூடிய வருமானம் அனைத்தும் அந்த கோவிலுக்கு என்று முடிவு செய்யப்பட்டு கட்டப்பட்டது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து அமைச்சரான உடன் ரமேஷ் அந்த கட்டுமானத்தை நிறுத்தினார் காண்ட்ராக்டை ரத்து செய்தார் ஒரு சிறிய கோயிலுக்கு இப்படி ஒரு வாகனம் நிறுத்துமிடம் தேவையா என்று சட்டப்பேரவையில் வானத்துக்கும் பூமிக்கும் ஆக குதித்தார்…
இன்று அதே அமைச்சர் பழனி வாகன நிறுத்துமிடம் தனியார் இருவருக்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதை ஒரு தவறு என்று கடந்து செல்ல பார்க்கிறார்.
இந்த ஊழலை முறைகேட்டை எளிதில் கடந்து விட முடியாது இதனை தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது எனவே உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மாநில அரசின் பின்புலம் இந்த பத்திரப்பதிவில் இல்லை என்றால் மாநில அரசே சிபிஐ விசாரணைக்கு கோரி தாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்வாரா மூத்த செய்தியாளர் லோகநாதன் தங்கசாமி.

Scroll to Top