மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய மிலிட்டரி பள்ளிகளில் (Rashtriya Military Schools – RMS) 2027–28 கல்வியாண்டுக்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆங்கில வழியில், முழுமையான தங்கிப் படிக்கும் வசதியுடன் செயல்படும் இப்பள்ளிகள் பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் மட்டுமின்றி, தகுதியுள்ள பொதுமக்களின் குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பை வழங்குகின்றன. சிம்லா ஹில்ஸில் உள்ள சைல், ராஜஸ்தானின் அஜ்மீர் மற்றும் தோல்பூர், கர்நாடகாவின் பெலகாவி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் மொத்தம் 5 ராஷ்ட்ரிய மிலிட்டரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
விண்ணப்ப காலம்
2027–28 கல்வியாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 23.09.2026 முதல் 20.10.2026 மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி நேரம் அக்டோபர் 20 அன்று இரவு 11.50 மணி என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதக் கட்டணத்துடன் 21.10.2026 முதல் 25.10.2026 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணம் ரூ.500 ஆகும்.
6ஆம் வகுப்பு:
31.03.2027 அன்று 10 முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 01.04.2014 முதல் 31.03.2017 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
9ஆம் வகுப்பு:
31.03.2027 அன்று 13 முதல் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். 01.04.2011 முதல் 31.03.2014 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆயுதப்படை பணியாளர்கள் பணியில் உயிரிழந்தவர்களின் (Killed in Action) குழந்தைகளுக்கு அதிகபட்ச வயதில் 6 மாத தளர்வு வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய மிலிட்டரி பள்ளி பொதுநுழைவுத் தேர்வு OMR அடிப்படையிலான பேப்பர்-பேஸ்டு தேர்வாக நடைபெறும். பல்தேர்வு வினாக்கள் (MCQ) இடம்பெறும். நாடு முழுவதும் 63 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம்
| பிரிவு | கட்டணம் |
|---|---|
| General / OBC / OBC-NCL | ரூ.1,000 |
| SC / ST / KIA வாரிசுகள் | ரூ.750 |
| தாமதக் கட்டணம் | கூடுதலாக ரூ.500 |
RMS CET தேர்வு 13.12.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வில் தகுதி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். இறுதிச் சேர்க்கை தகுதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறும்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் உள்ள சமீபத்திய விவரங்களை சரிபார்ப்பது அவசியம். RMS அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம்
