Madras Murasu

ரயில்வே துறையில் 191 காலிப்பணியிடங்கள்! டிசம்பர் 4-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பணியிடங்களைப் பொறுத்து சட்டப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வித்தகுதிகள் தேவைப்படும்.

இந்திய ரயில்வேயின் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான சிறப்புப் பிரிவு (Isolated Categories) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 191 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியிட விவரங்கள்
பணியின் பெயர் காலியிடங்கள்
தலைமை சட்ட உதவியாளர் (Chief Law Assistant) 17
அரசு வழக்கறிஞர் (Public Prosecutor) 21
மூத்த விளம்பர ஆய்வாளர் (Senior Publicity Inspector) 8
இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator – Hindi) 79
பணியாளர் நல ஆய்வாளர் (Staff and Welfare Inspector) 27
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) 3
ஆய்வக உதவியாளர் (Lab Assistant Grade III) 36
மொத்தம் 191
கல்வித்தகுதி

பணியிடங்களைப் பொறுத்து சட்டப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வித்தகுதிகள் தேவைப்படும்.

வயது வரம்பு

18 முதல் 40 வயது வரை. பணியிடத்தைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.

சம்பளம் : 7-வது ஊதியக்குழு அடிப்படையில் மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை ஆரம்ப ஊதியம் வழங்கப்படும். இதர படிகளும் விதிகளின்படி வழங்கப்படும்.தேர்வு முறை

  • கணினி வழித் தேர்வு (CBT)
  • மொழிபெயர்ப்புத் தேர்வு (ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மட்டும்)
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • மருத்துவப் பரிசோதனை

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடக்கம்: 05.11.2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2026
  • தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 06.12.2026
  • விண்ணப்பத் திருத்தம்: 07.12.2026 முதல் 16.12.2026 வரை

விண்ணப்பிக்கும் முறைதகுதியுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbapply.gov.in/

அறிவிப்பு எண்: CEN 09/2026 | விண்ணப்பிக்கும் முன்பு ஒவ்வொரு பணிக்குமான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.

Scroll to Top