acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post “பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே விபத்துக்கு காரணம்..!” சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>ஒரிசாவின் பகனகா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பறித்துள்ளது. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்துக்கு ரயில் தடம் புரண்டது, சிக்னல் கோளாறு என்ற இரண்டு வகையான காரணங்கள் வெளியாகி உள்ளன. எது உண்மையான காரணம்
என்பதை கண்டறிய
ஒரு நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரனை செய்வது பாரபட்சமற்றதாக இருக்காது .1998 இல் இதே போன்ற விபத்துக்கள் ஏற்பட்ட போது அன்றைக்கு இருந்த வாஜ்பாய் அரசு நீதிபதி கண்ணா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தது. அது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி காரணத்தையும் தீர்வையும் முன் வைத்தது. எனவே விசாரணை கமிஷன் நீதிபதியின் தலைமையில் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

விபத்துக்கான இரண்டு காரணங்களும் முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. முதல் காரணம் ரயில் தடம் புரண்டதாகும். இரண்டாவது விவரப்படி சிக்னல் கொடுக்கப்பட்டும் பாயிண்ட் லூப் லைனுக்கு சென்று அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது சிக்னல் கோளாறு .
சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது 2017-ல் ரயில்வே பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையில் அவர் இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் 4500 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும் ஆனால் நாம் புதுப்பிப்பது 2000 முதல் 2500 கி மீ தான் என்றும் இதனால் புதுப்பிக்க வேண்டிய தண்டவாளங்களின் தூரம் ஏராளமாக நிலுவையில் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் விபத்துகளுக்கு வழி வகுக்கலாம். தண்டவாளம் தடம் புரண்டு இந்த விபத்துக்கள் நிகழலாம் என்று கூறினார்.
இவ்வாறு குறைவான தண்டவாளங்கள் புதுப்பிப்பது நிதி பற்றாக்குறையின் காரணமாக தான் என்று அவர் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல ரயில்வே அமைத்த டாஸ்க் போர்ஸ் என்ற அதிகாரிகளின் கமிட்டி சிக்னல் ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் பழுதடைவதாகவும் ஆனால் நூறு தான் புதுப்பிக்கப்படுவதாகவும் அதிலும் ஏராளமான நிலுவை உள்ளதாகவும் அது அறிவித்தது. இதற்கும் போதிய நிதி பற்றாக்குறை தான் காரணம். பல விமர்சனங்களுக்கு பிறகு இந்த அரசு இந்த சொத்துக்களை புதுப்பிக்கும் விதமாக ஒரு தேசிய பாதுகாப்பு நிதியை ஒரு லட்சம் கோடி ரூபாயில் உருவாக்குவதாக அறிவித்தது. ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும் என்றது.

அதில் 5000 கோடி தேய்மான நிதியில் இருந்தும் ஐயாயிரம் கோடி ரயில்வேயின் அன்றாட வருமானத்திலிருந்தும் உருவாக்கப்படும். அதோடு டீசல் மேல் வரியின் மூலம் பத்தாயிரம் கோடியும் உருவாக்கி ஆண்டுதோறும் 20 ஆயிரம் பாலங்கள் பழுது பார்ப்பது உட்பட சிக்னல் தண்டவாளம் ஆகியவை புதுப்பிக்க செலவு செய்யப்படும் என்றார்கள்.
ஆனால் தேய்மான நிதிக்கு 5000 கோடி ஒதுக்காமல் வெறும் 500 கோடியும் 300 கோடியும் தான் ஒதுக்கினார்கள். அதேபோல ரயில்வே அன்றாட வருமானம் 5000 கோடியை திரட்டுவதற்கு போதுமானதாக இல்லை .சென்ற ஆண்டு கணக்கெடுத்து பார்த்தால் நூறு ரூபாய் வருமானம் என்றால் 107 ரூபாய் செலவாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக உண்மை கணக்கை பார்த்தால் நிகர வருமானம் ரயில்வேக்கு கிடைக்கவில்லை.
தலைமை கணக்காயர் தனது ஒரு அறிக்கையில் இந்த பாதுகாப்பு சம்பந்தமான சொத்துக்களை புதுப்பித்தல் வேலைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு நிதி திட்டமிட்டபடி செலவு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதனால் ஒன்றிய அரசுதான் இந்த 20 ஆயிரம் கோடியில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடியை ரயில்வேக்கு கொடுக்க வேண்டும். அது கொடுக்காததால் இன்றைக்கு புதுப்பிக்கப்படாத புதுப்பிக்கப்பட வேண்டிய 15 ஆயிரம் கிலோ மீட்டர் தண்டவாளம் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் தடம் புரளலாம் என்கிற நிலையில் உள்ளன.
அதேபோல ஏராளமான சிக்னல்கள் புதுப்பிக்கப்படாமல் கிடக்கின்றன. ரயில்வேயின் லட்சியமாக கூறப்படுவது என்னவென்றால் வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான விலையிலான ரயில் பயணம் என்பதுதான் லட்சியம்.
ஆனால் பாதுகாப்பான ரயில்கள் ஓடுவதற்கு ரயில்வேயும் ஒன்றிய அரசும் ஒரு அவசர உணர்வுடன் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன்.

இது இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட பெட்டிகள் மீதோ சரக்கு ரயில் மீதோ மோதுவதை தவிர்க்கும் வகையில் மோதல் தடுப்பு கருவி அந்த இன்ஜினில் பொருத்தி இருந்தால் அந்த என்ஜின் இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த கருவி இந்த வண்டியில் பொருத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் (31-3-2022) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரயில்வே ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த மோதல் தவிர்ப்பு கருவியை கவச் என்ற பெயரில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்கள். அந்த அறிக்கையின் படி 2022-ல் 65 என்ஜின்களில் தான் அது பொருத்தப்பட்டிருந்தது. டீசல் இன்ஜின்கள் 4800 மின்சார எஞ்சின்கள் 8400 ஆக மொத்தம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜின்கள் இருக்க 65 இன்ஜின்களில் மட்டும் இது பொருத்தப்பட்டது என்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.
இந்த கவலை ஆலோசனை கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எண்ணிக்கை அதிகப்படுத்த தீவிர முயற்சி எடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இப்பொழுது நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த விபத்து காரணம் என்ன என்பதை நீதிபதி கண்டறிவார் என்ற போதிலும் சில முக்கியமான அம்சங்கள் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் அரசு தவறுதான் இதற்கு பிரதான காரணம் என்று தெரிகிறது. டிரைவர்கள் காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் டிரைவர்கள் ஓய்வில்லாமல் வேலை செய்வதாக ரயில்வே வாரிய தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இந்திய ரயில்வேயில் 3 லட்சத்து 12 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தண்டவாள பராமரிப்பு ஊழியர்களான டிராக் மேன்கள் 4 லட்சம் இருந்தது வெறும் 2 லட்சமாக குறைந்துவிட்டது. அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் விடப்படுகின்றன. இதுவும் விபத்துக்கு காரணமாகும் .அது மட்டுமல்ல தங்க நாற்கரம் என்று சொல்லப்படுகிற சென்னை -மும்பை- டெல்லி- ஹௌரா- சென்னை என்கிற பாதை மொத்த தண்டவாளத்தில் 20 சதம்தான்.

ஆனால் இதில் 55 சதமான போக்குவரத்து நிகழ்கிறது. 100 வண்டிகள் செல்ல வேண்டிய இடத்தில் 130 ,150 வண்டிகள் செல்வதாக ரயில்வேயின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே சரக்கு போக்குவரத்துக்கு தனி வழித்தடமும், பயணி வண்டிகளுக்கு தனி வழித்தடமும் அமைக்கப்பட வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு சரக்கு வண்டிகள் சராசரியாக மணிக்கு 25 கிலோ மீட்டர் தான் செல்கின்றன. பயணி வண்டிகள் சராசரியாக 50 கிலோ மீட்டர் தான் செல்கின்றன. அதேபோல சரக்கு போக்குவரத்து தேசிய சரக்கு போக்குவரத்தில் 27 சதமானம் தான் ரயில்வேயில் செல்கிறது. இதனை சரக்கு வண்டிகளின் வேகம் 50 கிலோமீட்டர் பயணிகள் வேகம் 130 கிலோமீட்டர் ஆகவும் சரக்கு போக்குவரத்தில் ரயில் பங்கு 45 சதமானமாகவும் தேச நலனின் அக்கறை கொண்டு செய்ய வேண்டும் என்று பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
உதாரணமாக, 13 லட்சத்து 69 ஆயிரம் கோடியில் 4 ஆண்டுகளில் நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் பைப் லைன் அறிவிக்கப்பட்டது. அது 30% கூட நிறைவேற்றப்படவில்லை .அது முடிவதற்குள் தேசிய ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது 2021 முதல் 51 வரை 30 ஆண்டு திட்டமாகும். இதற்கு 38 அரை லட்சம் கோடி முதலீடு வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அது 2021 -222 முதல் அமுல்படுத்தப்பட வேண்டியது. ஆனால் இந்த ரெண்டு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள். அது எந்த அளவுக்கு முடிந்திருக்கிறது என்பதை பற்றி ரயில்வே பட்ஜெட்டிலோ அல்லது பொருளாதார ஆய்வு அறிக்கையிலோ நியாயமான நேர்மையான பரிசீலனையோ கிடையாது. இந்த திட்டங்கள் நிறைவேறினால் தான் வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான வண்டிகளை இயக்க முடியும்.

தினம் ஒரு வந்தே பாரத் வண்டியை பிரதம மந்திரியே நேரடியாக திறந்து வைக்கிறார். இந்த வண்டிகள் சராசரி வேகம் 85 கிலோ மீட்டருக்கு மேல் கிடையாது. இந்த வண்டிகளை இயக்கவும் பல உள்ளூர் வண்டிகள் ஓரங்கட்டப்படுகின்றன. வேக வண்டிகள் இயக்க வேண்டும் என்றால் லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு ரயில் மேம்பாலம் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும். அதேபோல தண்டவாளத்தின் இருமருங்கிலும் சுவர் எழுப்பப்பட வேண்டும். அனைத்து இன்ஜின்களிலும் கவரச் என்ற மோதல் தடுப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் .இது எதுவும் இல்லாமல் வந்தே பாரத்தையும் விரைவு வண்டிகளையும் விளம்பரத்துக்காக விடுவது பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
இந்த திட்டங்களுக்கு எல்லாம் நிதி தனியாரிடமிருந்து வரும் என்று 30 ஆண்டுகளாக சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் தனியார் தண்டவாளம் போட்டு ரயில் ஓட்டிக்கொள்ள வர தயார் இல்லை. தேசிய பணமாக்கும் திட்டத்தில் ரயில் வண்டிகளையும் ரயில் நிலையங்களையும் தண்டவாளங்களையும் தனியாருக்கு குத்தகை விட திட்டம் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க கூறினார்கள்.
ஆனால் அதற்கும் யாரும் வர தயார் இல்லை. அடித்தள கட்டுமானம் சரியாக இல்லாத நேரத்தில் எந்த தனியாரும் முன் வர தயார் இல்லை. எனவே வேக வண்டிகளாகட்டும் அல்லது தனியார் வண்டிகள் ஆகட்டும் எதுவானாலும் அடித்தள கட்டுமானம் நிறைவு செய்யாமல் எதுவும் நடக்காது. இந்த அரசு அரசு முதலீடு செய்ய தயார் இல்லை.
எனவே, சரக்கு போக்குவரத்து 45 சதமானம் ரயிலில் செல்வதும் சாத்தியமில்லை. சரக்கு வண்டிகளின் வேகம் 50 கிலோமீட்டர் ஆக்குவதும் சாத்தியமில்லை. பயணி வண்டிகளின் வேகம் 130 கிலோ மீட்டர் ஆக்குவதும் சாத்தியமில்லை. விபத்தற்ற ரயிலும் சாத்தியமில்லை. எனவே நான் இந்த அரசை ரயில்வேயில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
விலை மதிக்க முடியாத மனித உயிர்களை மேலும் இழக்க தயாராக வேண்டாம் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
The post “பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே விபத்துக்கு காரணம்..!” சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>The post “விளம்பரம் வேண்டாம், பாதுகாப்பில் கவனம் தேவை..!” கார்த்தி சிதம்பரம் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>அரசு ஆழமான விசாரணையை நடத்த வேண்டும். புல்லட் ரயில் போன்ற பிரதமரின் கனவுத் திட்டங்களை விட, மக்கள் பாதுகாப்பை மையப்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
தண்டவாளத்தின் தரத்தை சரி செய்வது, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பது போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உலக அளவில் பிரதமர் தன்னை முன்னிறுத்தும் திட்டங்களை கைவிட்டு மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரத்துக்கு பதிலாக 18 மணி நேரம் பணி செய்கின்றனர். பல ரயில்வே கிராசிங்குகளில் பணியாளர்களே இல்லை. பல பணியிடங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கின்றனர்.
வேகமாக ரயில் ஓட்ட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பை கவனிப்பதில்லை. ரயில் பயண நேரத்தை குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசவே ரயில் வேகத்தை அதிகப்படுத்துகின்றனர். மேலும், மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன.
ஆனால், நடைமுறைக்கு வருவதில்லை. அதுபோலதான் ரயில்வேயில் ‘கவாச்’ பொருத்தும் அறிவிப்பும். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இழப்பீடுகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இதில் அரசியல் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
The post “விளம்பரம் வேண்டாம், பாதுகாப்பில் கவனம் தேவை..!” கார்த்தி சிதம்பரம் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post “ரெயில் விபத்து நடந்த இடத்தில் மோடி உருக்கம்..!” அதிரடி உத்தரவு first appeared on Madras Murasu.
]]>ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் , காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
“ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தினால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். துயரமான இந்த தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) நிவாரண உதவி தொகையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post “ரெயில் விபத்து நடந்த இடத்தில் மோடி உருக்கம்..!” அதிரடி உத்தரவு first appeared on Madras Murasu.
]]>The post “கோரமண்டல் ரெயில் கோர விபத்து: பலி 207 ; காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது” first appeared on Madras Murasu.
]]>சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரெயில்களில் ஒன்றான இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த ரெயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு இருந்தது. அந்த ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.
இதனால் எதிர்பாராத விதமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் 10பெட்டிகள் தடம் புரண்டு 3-வது தண்டவாளத்தில் விழுந்தன.
அந்த பெட்டிகள் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ஏராளமான பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலரும் பலத்த காயம் வலியால் துடித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.
இந்த பயங்கரத்தில் மற்றொரு பேரிடியாக, தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீது மோதின. இதில் அந்த பெட்டிகள் மேலும் சேதம் அடைந்ததுடன், அதில் சிக்கியிருந்த பயணிகளின் நிலையும் மோசமானது.
இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் உடனே அங்கே விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதி முழுவதும் மக்களின் மரண ஓலமும், ரெயில் பெட்டிகளின் குவியலுமாக கோரமாக காட்சி அளித்தது. அதேநேரம் சம்பவ இடம், அதிக மக்கள் வாழிடம் இல்லாத வனம் சார்ந்த ஒதுக்குப்புறமான பகுதி என தெரிகிறது.
இதனால் அந்த பகுதி முழுவதும் காரிருள் சூழ்ந்திருந்தது. இந்த விபத்தில் சிக்கிய ரெயில்களின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து உள்ளன.
இந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் சுமார் 400 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 350 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின.
விபத்து குறித்து தகவல் அறிந்த தென்கிழக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளை தொடங்கினர்.
அத்துடன் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரையும் ஒடிசா அரசு விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 3 குழுவினர், 26 பேர் அடங்கிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ரெயில்வே அதிகாரிகளுடன் இணைந்து அவர்களும் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். இதில் ரெயிலின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகள் விரைவாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த பயணிகள் பாலாசோர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 60-க்கு மேற்பட்ட ஆம்புலன்சுகள் பணியில் அமர்த்தப்பட்டன. மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக், வருவாய்த்துறை மந்திரி பிரமிளா மாலிக் மற்றும் மாநில நிவாரண கமிஷனர் சத்யபிரத சாகு மற்றும் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து நடந்த பகுதியில் மின்சார வசதி இல்லாததால் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ராட்சத விளக்குகளை அதிகாரிகள் துரிதமாக பொருத்தி மீட்பு பணிகளை தொடங்கினர்.
இந்தநிலையில், இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜேனா தகவல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது. ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க பாலசோர் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்தம் வழங்கி உதவி செய்து வருகின்றனர்.
The post “கோரமண்டல் ரெயில் கோர விபத்து: பலி 207 ; காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது” first appeared on Madras Murasu.
]]>