acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும்..!’’ துரைமுருகன் கண்டிப்பு first appeared on Madras Murasu.
]]>புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 13.10.2023-ல் நடைபெற்றது.
இவ்வாய்வு கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், (போக்குவரத்து துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை) க.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி, மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் கனிம வருவாய் ரூ.817.40 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிடவும் மாவட்ட வாரியாக கனிம வருவாய் விபரங்களை கேட்டறிந்த அமைச்சர் துரைமுருகன், கனிம வருவாயை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், சட்டவிரோத கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு, விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.

மேலும் நிலுவையிலுள்ள வருவாய் இனங்களில் கவனம் செலுத்தி நிலுவை தொகையினை விரைந்து வசூலிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வருமாறும், அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், அமைச்சர் துரைமுருகன், மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள தகுதி வாய்ந்த கல்குவாரிகளை ஏலத்திற்கு கொண்டு வருமாறும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கனிம வருவாயினை ஈட்டவும், அனைத்து அலுவலர்களைவும் கேட்டுக்கொண்டார்.
வாகனம் கைப்பற்றுகையை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும் அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் மேல் கனிம விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தருமாறும் கேட்டுக் கொண்டார்.
The post ’’தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும்..!’’ துரைமுருகன் கண்டிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்தில் பாப்பா உமாநாத் விளக்கம் first appeared on Madras Murasu.
]]>அந்த கால கட்டத்தில் அவையில் உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா உமாநாத், “துரைமுருகன் ஜெயலலிதாவின் புடவையை இழுத்தார் என்று பத்திரிகைகளில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்திலேயே பாப்பா உமாநாத் பேசினார்.
“சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்து தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். சில பத்திரிகைகள் தவறான செய்திகளை போட்டு இருக்கின்றன. நான் சட்டசபையில் இருந்து நேரில் பார்த்ததை உங்களிடம் கூறுகின்றேன்” என அவை ஆரம்பித்ததிலிருந்தே நடந்த சம்பவங்களை விவரித்து விட்டு, தொடர்ந்து பேசியதாவது :- “முதல்வர் பட்ஜெட்டை படித்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கை முதல்வரின் கையிலிருந்த பட்ஜெட் மீது தாவியது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் புத்தகத்தை முதல்வரை நோக்கி வீச, அந்தப் புத்தகம் பட்டு முதல்வர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியது.
பின்னர் அ.தி.மு.க.வினர் மைக்குகளைப் பிடுங்கி வீச, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அடிபட்டு இரத்தம் சொட்ட காணப்பட்டார். ஜெயலலிதா தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அவரது எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பாக நின்றனர். 10 நிமிடம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பின் ஜெயலலிதாவை அவரது எம்.எல்.ஏ.க்கள் அழைத்துச் சென்றனர். ஆனால், ஜெயலலிதா வெளியே சென்று, “அமைச்சர் துரைமுருகன் சேலையைப் பிடித்து இழுத்தார்; மானபங்கப்படுத்தினார் – என்றெல்லாம் கூறுவது அப்பட்டமான பொய். அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதா? நாங்கள் (கம்யூனிஸ்டு) பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். அதுபோன்ற சம்பவம் நடந்து இருந்தால் பார்த்துக்கொண்டு இருப்போமா? ஜெயலலிதா – தான் ஒரு நடிகை என்பதை நிரூபித்துவிட்டார். தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கூறவில்லை. உண்மையைச் சொல்கிறேன். அமைச்சர் துரைமுருகன் அவரது சேலையை இழுக்கவும் இல்லை; அவரை மானபங்கப்படுத்தவும் இல்லை.”
– இவ்வாறு மயிலாடுதுறையில் மார்ச் 29-ந் தேதி மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாப்பாஉமாநாத், ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்திலேயே பேசினார்.
இந்தத் தகவல்களெல்லாம் மொத்தமாக மறைக்கப்பட்டு – இன்றளவும் துரைமுருகன் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்தார் – என்ற வடிகட்டிய பொய்தானே வலம் வந்து கொண்டிருக்கிறது. உண்மைகளை மறைத்து – கழகத்தை களங்கப்படுத்த எப்படி எல்லாம் ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கவே இந்த விவகாரங்களை மீண்டும் விரிவாகத் தர வேண்டியுள்ளது.
– முரசொலி
சில நினைவலைகளிலிருந்து…
The post ’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்தில் பாப்பா உமாநாத் விளக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.
]]>இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில் வருமாறு:
கடந்த இரண்டு மாதகாலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை.
இது குறித்து முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை நான் இரண்டுமுறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாக செயல்படவில்லை!
காவிரியிலிருந்து தண்ணீரை திறந்து விடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும்என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரையில் முழுமையாக செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை Pro Rata Basis என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இந்த வாரியம் ஒன்றிய அரசின் கீழ்இயங்குகிறது. எனவேதான் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்யவேண்டும் என்றுதான் தமிழக முதல்வர் அவர்களும் பிரத மருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என்பவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையைநேரில்பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அர்களுக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசிபேசி எந்தமுடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்சநீதி மன்றத்திற்கு போய், உச்சநீதிமன்றம் சிலதிருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்டபிறகு இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.
உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர் உறுதி!
‘தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுவேறு’என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலை நாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடுதான் தமிழகத்தின் நிலைப்பாடு.
இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் தளபதிக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அடிப்படை வரலாறு தெரியாமல் பேசும் ஒன்றிய அரசு!
இதில் இன்னொரு வேடிக்கை. வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கர்நாடக மாநில முதல்வரோடும், நீர் வளத்து றை அமைச்சரோடும் பேசி தண்ணீரை பெறவேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்சநீதி மன்றத்தைத்தான் நாடேவேண்டுமேதவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாத தனம் தான். பாவம், அரசியல் பிரச் சினையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத்தான் அவர் அறிக்கை காட்டுகிறது.
இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post ’’காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.
]]>