Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#CPIM - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 07 Sep 2023 10:17:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9-%25e0%25ae%2592%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 07 Sep 2023 10:17:51 +0000 https://madrasmurasu.com/?p=6182 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும் தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு: அமைச்சர் க.பொன்முடி தமிழ்நாடு […]

The post ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும் தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அமைச்சர் க.பொன்முடி

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசுகையில், “பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனி யத்தைதான் எதிர்க்கிறோம். சனாதனத்தை நிலை நிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வியை புகுத்துகின்றனர். சனாதனத்திற்கு எதிராகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டம்கொண்டு வரப்பட்டது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் ஏற்பட வேண்டும். ஜாதியின் தாக்கம் அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதை அகற்ற வேண்டும். இளந்தலை முறையினரிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. சனாதன ஒழிப்பு கருத்துகளை மாணவர்கள், இளைஞர்களிடம் படைப்பாளிகள் கொண்டு சேர்க்க வேண்டும். சனா தனத்தை எதிர்க்க ‘இந்தியா’ அணி வெல்ல வேண்டும். என்றார்.

கே.பாலகிருஷ்ணன்ன் (மார்க்சிஸ்ட்)

மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பிரதமரும், ஒன்றிய அரசும் செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகளால் பதற்றமடைந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, நவம்பர் மாதம் நடத்த வேண்டிய குளிர் காலக் கூட்டத் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடத்துகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கொண்டு வந்து எதிர்க் கட்சிகளிடம் உள்ள மாநில ஆட்சிகளை பறிக்க நினைக்கிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. சனாதனம் எங்கும் பரவி நிற் கிறது” என்றார்.

“மார்க்சிய இயக்கங்கள், பெரி யாரிய, அம்பேத்கரிய இயக்கங் களின் தொடர் போராட்டத்தால் ஓரளவு சனாதனம் கட்டுப்படுத் தப்படடுள்ளது. சனாதனம் இட ஒதுக்கீடு, மாநில உரிமைகளை பறி க்கிறது. முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முதலாளித்துவம் சனாதனத்தை பாதுகாக்கிறது. எனவே, சனாதனத்தை கருத்தியல் ரீதியாக மட்டும் ஒழிக்க முடியாது. பொருளாதார கொள்கைகளோடும் இணைத்து நடத்த வேண் டும். அதுதான் இந்தியாவின் அனுபவமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

“வர்ணாசிரமம், சனாதனம் மக்களை ஜாதி ரீதியாக பிரித்து சொத்துடமையை பாதுகாக்கிறது. இதற்கெதிராக உழைப்பாளி மக்களை ஒன்று சேர்த்து போராடுகிறோம். ஜாதிய, சமூக ஒடுக்கு முறை, பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை ஒன்றிணைத்து போராட வேண்டும். பாஜகவின் பாசிச கொள்கைகளை எதிர்த்த ‘இந்தியா’ அணி வெற்றி பெற வேண்டும். மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள் செயல்படுத்த களத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மக்களவை உறுப் பினர் தொல்.திருமாவளன் பேசுகையில், “பிறப்பின் அடிப் படையில் உயர்வு தாழ்வு என்ற ஜாதிய கட்டமைப்பு நிலையானது, மாறாதது என்பதுதான் சனாதனம். உழைப்புச்சுரண்டல், அதி காரம், ஆதிக்கம், ஒடுக்கு முறை கூடாது என்கிறது கம்யூனிசம். கம்யூனிசத்திற்கு நேர் விரோதமானது சனாதனம். சனாதன கருத்தியலை பார்ப்பனர்கள் கைக்கொண்டுள்ளதால் அதை பார்ப்பனீயம் என்கி றோம்.

“இந்தியாவில் ஜாதியும் வர்க்க மும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்துள்ளது. உயர் பொறுப்புகள், அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ள பார்ப்பனியத்தின் மீது பிற்படுத்தப்பட்ட சமூகம் கோபப்பட வேண்டும். மாறாக, கீழ்நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை எதிரியாக பார்க்கின்றனர். இதுதான் சனாதனத்தின் சூழ்ச்சி. பார்ப்பனியத்திற்கு எதிராக பிற்படுத்தப் பட்ட மக்கள் நகரும் போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும். காலங்காலமாக பிராமனியத்திற்கு எதிரான குரல் ஒலித்து வருகிறது. அதை இந்துத்துவா நீர்த்துப்போகச் செய்கிறது. சனா தனத்தை காப்பாற்றி வரும் பாஜக விற்கு எதிராக மக்கள் திரும்ப வேண்டும். இதனை புரிந்து கொள்வதில் உள்ள தேக்கத்தை படைப்பாளிகள் உடைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

“சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு விரோதமான அனைத்தும் சனாதனம்தான். வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் போப்பாண்டவர், சவுதி மன்னரை கட்டிப் பிடித்து அணைத்துக்கொள்கிறார். இந்தியாவில் ஒரு சங்கராச் சாரியாரை அவரால் கட்டிப்பிடிக்க முடியுமா? அதுதான் சனாதனம்” என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார் “சனாதனத்திற்கு எதிராக பல நூற்றாண்டுகளாக போராடினாலும் ஒழிக்க முடிய வில்லை. சனாதனத்தின் வேர் அறுபடாமல் உள்ளது. சனாத னத்தை அமல்படுத்துகிறவராக பிரதமர் உள்ளார். சனாதனத்தில் அடையாளமாக உள்ள மோடியை வீழ்த்த வேண்டும். அரசியல் களத்தில் சனாதனத்தின் பிம்பங்களை, தத்துவங்களை கூறி பாஜகவை வீழ்த்த வேண்டும்.” என்றும் அவர் கூறி னார்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “ஜாதி, உயர்ஜாதி என் போருக்கு சொர்க்கமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நரகமா கவும் உள்ளது. ஜாதி, மதங்களை கேள்விக்குள்ளாக்காமல் கல்லூ ரிகள், பல் கலைக் கழகங்கள் கடந்து செல்கின்றன. கல்வித்துறை யில், மாணவர்களிடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். “சனாதனவாதிகளுக்கு இந்திய அரசமைப்பு சட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அதை நீர்த்துப்போகச் செய்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் பாஜகவை, ‘இந்தியா’ அணி வீழ்த்தும். ஜனநாய கத்தை காக்கும் பெரும்போரில் கூட்டாக செயல்படுவோம்” என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம் (தமுஎகச மாநிலத் தலைவர்)

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், “சனாதனத்திற்கு எதிராக பெரும் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்து தொடரும். பெண்ணடிமைத்தனம், ஜாதிய பாகுபாடு, மூடநம் பிக்கை, சடங்கு என்ற பெயரில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இவை யெல்லாம்தான் சனாதன கலாச்சாரம் என்றால், அதை எதிர்ப்போம்” என்றார். மநுநீதியில் கூட குற்றங்களுக்கு அனை வருக்கும் ஒரே மாதிரி தண்டனை இல்லை. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள். ஒரேநாடு, ஒரேமதம் என்றெல்லாம் கூறி ஒரே தேர்தல் என்பதில் வந்து நிற்கிறார்கள். சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரமாக வள்ளலார் இருந்தார். “யாதும் ஊரே யாரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்” என்பவை எல்லாம் சனாதனத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

சனாதன எதிர்ப்பில் கலைஞர்கள்தான் எப்போதும் முன் னின்று இருக்கிறார்கள். நாடகத்தில் முருகன் வேடம் ஏற்று விஸ்வநாததாஸ் நடித்தார். அவருடன் நடிக்க பலரும் மறுத்த போது, கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள்தான் சேர்ந்து நடித்தார். மீனவரான சிந்தனை சிற்பி சிங்கார வேலர் வழக்குரைஞர் ஆனதை சக வழக்குரைஞர்கள் எள்ளி நகையாடினர்.

மறுநாள், வலைக்குள் சட்டப் புத்தகங்களை கட்டிக்கொண்டு நீதிமன்றம் சென்றார். அந்த சட்டம் உனக்கு மட்டுமல்ல, எனது வலைக்கும் சிக்கும் எனக் கூறியது போன்றவற்றை அவர் நினைவுகூர்ந்தார். அரசியல், ஆன்மிகம், அறிவியல், பண்பாடு, கலை என அனைத்து தளங்களிலும் சனாதனத்திற்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம்.

The post ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
”பேசத் தொடங்கியதற்கே இத்தனை கூப்பாடா..?” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d/#respond Tue, 05 Sep 2023 10:18:32 +0000 https://madrasmurasu.com/?p=6133 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: உதயநிதி ஸ்டாலின் ஆற் றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக் […]

The post ”பேசத் தொடங்கியதற்கே இத்தனை கூப்பாடா..?” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

உதயநிதி ஸ்டாலின் ஆற் றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கிறது. அவற்றை காணும் எவரொருவரும் இந்த மாநாட்டின் எந்தவொரு நிகழ்வும், யாருடைய உரையும் குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ எதிராக அல்லாமல், பிறப்பின் அடிப்படையில் மக்க ளைப் பாகுபடுத்தி ஒடுக்கி வரும் சனாதனக் கருத்தியலை ஒழிக்க வேண்டும் என்றே அமைந்திருக்கிறது என்பதை உணரமுடியும். மாநாட்டில், ஆன்மீகப்பற்று டைய அய்யா சத்தியவேல் முருகனார், இறை நம்பிக்கைக்கும் சனாதனத்துக்கும் எந்த தொடர்பு மில்லை என்று பேசியதுடன் சனா தனம் இழைத்த அநீதிகளை எடுத்து ரைத்தார். கர்நாடகத்தில் இயங்கி வரும் தேவதாசி ஒழிப்புச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாலம்மா, சிறுமிகள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டு பாலியல் சுரண் டலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதற்கு அடிப்படையாக உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கள அனுபவத்திலிருந்து ஆவேசமாக எடுத்துரைத் தார்.

இவர்கள் பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல இயலாத பாஜக வினர், சனாதனக் கருத்தியலை ஒழிக்கவேண்டும் என்று உதயநிதி பேசியதை, ‘‘சனாதனத்தைப் பின் பற்றும் மக்களை ஒழிக்க வேண்டும்’’ என்று அவர் பேசிய தாக திரித்து அரசியல் ஆதாயத் திற்காக மோசடிப்பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த மோசடியையே ஆதார மாக வைத்துக்கொண்டு தில்லியிலும் பீகாரிலும் அவர் மீது புகா ரளித்துள்ளனர். அவர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கொக்கரிக்கின்றனர். இதற்கெல்லாம் பயந்து சனாதன ஒழிப்புப் பற்றி தான் தெரிவித்த கருத்தினை திரும்பப்பெறப் போவதில்லை என்று உறுதிபட அறிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமுஎகச பாராட்டு தல்களை தெரிவித்துக் கொள்கிறது.

அலைபேசி மூலமாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் தனக்கு வரும் மிரட்டல்களைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று சனாதன ஒழிப்பில் தனக்குள்ள உறு திப்பாட்டை வெளிப்படுத்திவரும் தமுஎகச மாநிலத் துணைத்தலை வரும் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான திரைக்கலைஞர் ரோஹிணி அவர்களுக்கும் பாராட்டுகள். சனாதன ஒழிப்பு என்று பேசத் தொடங்கியதற்கே சனாதனவாதிகளின் மனம் புண்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு, சனாதனத்தினால் தலை முறை தலைமுறையாக அநீதிக்காளாகியிருக்கும் கோடானுகோடி மக்களின் குமுறலில் இருந்தே ‘சனாதனம் ஒழிக’ என்கிற முழக்கம் உயிர்த்தெழுந்துள்ளது என்கிற உண்மையை உணர்த்தும் பணியை தமுஎகச தொடர்ந்து மேற்கொள்ளும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ”பேசத் தொடங்கியதற்கே இத்தனை கூப்பாடா..?” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
’’சிபிஐ(எம்) மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..!’’ https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%90%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2590%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2-%25e0%25ae%2589%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%90%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/#respond Mon, 24 Jul 2023 05:58:15 +0000 https://madrasmurasu.com/?p=5592 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மதுரையில் 23.07.2023 அன்று மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் […]

The post ’’சிபிஐ(எம்) மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..!’’ first appeared on Madras Murasu.

]]>
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மதுரையில் 23.07.2023 அன்று மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார்.

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் அ.ரவிச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

தீர்மானம் 1 :

மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும், மொழிவழி மாநிலங்களுக்காக நடந்த வீருகொண்ட போராட்டமும் கூட்டாட்சி இந்தியாவிற்கு அடித்தளமாக அமைந்தன. இருப்பினும், நடைமுறையில் ஏராளமான அதிகாரங்கள் ஒன்றிய ஆட்சியிடம் குவிக்கப்பட்டுள்ளன.

1950களில் மொழிவழி மாநிலங்களுக்காக நடைபெற்ற போராட்டமும், 1956ஆம் ஆண்டு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட சூழ்நிலையில் மாநில உரிமைகளுக்கான குரல் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின் ராஜமன்னார் ஆணையம் (1969) அமைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சியின் மத்திய, மாநில உறவுகள் பற்றிய குறிப்பாணையும், 1983 ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் மத்திய, மாநில உறவுகள் பற்றிய எதிர்க் கட்சிகள் மாநாடும் கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான வலிமையான வெளிப்பாடாக அமைந்தன. இந்த பின்னணியிலேயே, 1983 ஆம் ஆண்டில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது (1990) மிக முக்கியமான வளர்ச்சிப்போக்காக அமைந்தது.

இருப்பினும், பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் அழுத்தத்தில் இருந்து பல்வேறு அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளும் இதே காலத்தில் தொடர்ந்தன. இப்போது ஒன்றிய ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக /ஆர்.எஸ்.எஸ், ஒற்றை ஆட்சியையே தனது இலக்காக கொண்டு கூட்டாட்சி ஏற்பாட்டை மொத்தமாக சிதைத்துப் போட முயற்சிக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை முடக்கிப் போட்டும், கூட்டாட்சிக்கு எதிரான அம்சங்களை வலுவாக பயன்படுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காமலும், எல்லா முனைகளில் இருந்தும் கூட்டாட்சி ஏற்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. கூட்டாட்சி கோட்பாடும், மதச்சார்பின்மையும் பன்மைத்துவ பரிமாணத்தை உள்ளடக்கியது. தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை (ஒரே மதம்) அமலாக்கிட எதேச்சதிகார, ஒற்றை ஆட்சி முறையை முன்னெடுக்க மாநில உரிமைகளை மறுக்கிற போக்கை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

அரசியல் சட்ட ஷரத்து 370வது பிரிவினை அதிரடியாக நீக்கி ஜம்மு – காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளை பறித்து, அம்மாநிலத்தை துண்டாடி லடாக் பகுதியை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் மதச்சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளையும், குடியுரிமையையும் பறித்து அம்மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முனைகிறது.

அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய ஆட்சி மொழிகளாக்க மறுத்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பில் மூர்க்கத்தனமாக மோடி அரசு ஈடுபடுகிறது. மொழிச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிராகரிக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே திட்ட ஆணையத்தை கலைத்து ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளும் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை வெட்டி ஒன்றியத்தில் குவித்தன. புழக்கத்திலிருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என தானடித்த மூப்பாக அறிவித்தது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமலாக்கி மாநிலங்களுக்கான வரி இனங்களை சுருக்கியுள்ளன. மாநிலங்களுக்கு சேரவேண்டிய முறையான நிதிப் பகிர்வில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. 14வது நிதி ஆணையம், நாட்டின் மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்கு 42 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதே அநியாயம், ஆனால் பாஜக அரசோ நடைமுறையில் வெறும் 30.4 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு அளித்துள்ளது.

ஜி.எஸ்.டி ஈவுத்தொகைக்காகவும், ஈட்டுத் தொகைக்காகவும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி இனங்களில் மாநில அரசுகளுக்கு பங்கு இருந்தது. ஆனால், தற்போது அந்த வரியும் மத்திய அரசிடமே குவியும் விதத்தில் செஸ் வரியாக விதிக்கப்படுகிறது. மாநில பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறைக்கு வரம்பு வைப்பதன் மூலமும் மாநில செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் நேரடியாக தலையிடுவதற்கு ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சட்டமன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர்களே கிடப்பில் போடுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை அவமதிப்பதையும், அமைச்சரவையின் அதிகாரத்திலும், முதலமைச்சரின் அதிகாரத்திலும் வரம்பு மீறி தலையிடுவதையும் தயக்கமின்றி மேற்கொண்டு கண்டனங்களை எதிர்கொள்கிறார்.

ஒன்றிய அரசின் முகமைகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ ஆகிய அனைத்தும் பாஜக அரசியலின் ஏவலாட்களாக மாற்றப்பட்டுள்ளன. எம்.எல்.ஏக்களை விலைபேசவும், ஆட்சிக் கவிழ்ப்பிற்குமான கருவிகளாக இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலக் கட்சிகள் மிரட்டப்படுகின்றன.

மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து, ஒரே நாடு ஒரே கல்வி என்ற அடிப்படையில் மாநிலங்களால் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாமல் செய்ய முயற்சி நடக்கிறது. கல்வியில் பெருமளவில் வணிகமயத்தை புகுத்துவதும், பாடத்திட்டங்களை மதவெறிமயமாக்குவதும் ஒருசேர நடக்கின்றன. தேசிய கல்விக் கொள்கையின் பெயரால் இந்த அராஜகம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. இப்போது ஒட்டுமொத்த மருத்துவ இடங்களையும் ஒன்றிய அரசே நிரப்பிட முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் ஆபத்து எழுந்திருக்கிறது.

உள்ளாட்சி மன்றங்களின் செயல்திறனை மேம்படுத்துவது என்கிற பெயரால் சொத்து வரி, பயனாளிகள் கட்டணங்கள் மற்றும் சேவை கட்டண உயர்வுகளை அமலாக்க ஒன்றிய அரசு மாநிலங்களை நிர்பந்தப்படுத்துகிறது. இந்த வரி, கட்டண உயர்வுகளை அமலாக்கவில்லை என்றால் உள்ளாட்சி மன்றங்களுக்கான பல்வேறு வகையான நிதி, மான்யங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசு வெட்டிக் குறைத்து வருகிறது. இந்த வரி, கட்டண உயர்வுகளால் மக்கள் அடையும் இன்னல்களை கண்டு கொள்ளாமல், உள்ளாட்சி அடித்தள ஜனநாயகத்தையும் பாஜக அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது.

மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள கூட்டுறவு, விவசாயம், மின்சாரம் ஆகியவற்றில் ஒன்றிய அரசு தலையிடுகிறது, விதிகளையும் சட்டங்களையும் இயற்றுகிறது. ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை சிதைக்கிறது. ரேசன் பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய ஒதுக்கீடு, கிராமப்புற ஊரக வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீடு என அனைத்திலும் தன்னிச்சையான முடிவுகளை ஒன்றிய ஆட்சியே மேற்கொள்கிறது. தேவைக்கும் குறைவாக வெட்டிச் சுருக்குகிறது.

ஒன்றிய ஆட்சியிடமே அதிகாரம் குவிந்தால் பாரபட்சத்தையே உருவாக்கும் என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு நடைமுறை உதாரணம் ஆகும். மாநில அரசு முன்னெடுத்த திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்கிற மாநில அரசின் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்ட ஒன்றிய மோடி அரசு 2019ல் அடிக்கல் நாட்டியது. இன்றுவரை அப்படியே நிற்கிறது. இது தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகும். தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் வழியாக கீழ்க்கண்டவைகளை வற்புறுத்துகிறேம்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டு ஒன்றிய ஆட்சி வற்புறுத்தும் பொருளாதாரக் கொள்கைகளால் சிறு குறுந்தொழில்கள் நசிவை எதிர்கொள்வதும் அதிகாரக் குவிப்பின் அபாயகரமான வெளிப்பாடே ஆகும்.

இப்படியான சூழலில்தான், இந்திய கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் சி.பி.ஐ(எம்) இம்மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாட்டின் வழியாக,

* இந்திய ஒன்றியத்தை கூட்டாட்சி ஜனநாயமாக வலுப்படுத்துவோம். மூன்றடுக்கு அதிகாரப் பரவலை வலியுறுத்துவோம்.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

* ஆளுநர் வழியாக மாநில ஆட்சி அதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை இந்த மாநாடு கண்டிக்கிறது. மாநில அரசுக்கு மேம்பட்ட சக்தியாக ஆளுநர்களை பயன்படுத்துவதை முற்றாக எதிர்த்து நிற்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆளுநர்களின் அதிகாரத்திற்கு சட்ட வரம்பிட வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

* ஒன்றிய விசாரணை முகமைகளை ஏவி விட்டு, மாநில ஆட்சிகளை கவிழ்ப்பதும், கட்சிகளை மிரட்டுவதும் விலை பேசுவதும் ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள சவாலாகும். இத்தகைய போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

* மாநிலங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் வரி அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

* அரசியல் சாசன 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரித்திட வேண்டும். தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தி சமஸ்கிருத திணிப்பை முற்றாக கைவிட வேண்டும். தாய்மொழி வழியில் பயிற்று மொழி நிர்வாக மற்றும் அலுவல் மொழியாக உறுதி செய்திட வேண்டும்.

* தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அழித்தொழிக்க பல்வேறு முனைகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து, இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட இம்மாநாடு உறுதியெடுக்கிறது.

* தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கான தனித்த கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்.

* கூட்டுறவு, மின்சாரம், விவசாயம் மற்றும் தொழிலாளர் துறைகளில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, அரசமைப்புச் சட்ட விரோத தலையீடுகளை கைவிட வேண்டும். கூட்டுறவுத் துறையை ஒன்றிய அரசு கைப்பற்றும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது.

* ஒன்றிய அரசின் நிதியோடு செயல்படும் திட்டங்களில் மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப அமலாக்குவதற்கான சுதந்திரத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ரேசன் பொருட்கள் (அரிசி, தானியம்) ஒதுக்கீடு, நூறுநாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும். ரேசன் கடைகளை மூடிடும் ஒன்றிய ஆட்சியின் முயற்சிகளையும், நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதையும் இம்மாநாடு கண்டிக்கிறது.

* திட்ட ஆணையம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். தேசிய வளர்ச்சி ஆணையம் உரிய அதிகாரத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நிதி ஆணையங்கள், மாநிலத்தின் பார்வையை உள்ளடக்கி செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :

மணிப்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மணிப்பூர் பாஜக அரசு பதவி விலகவும் கோரும் தீர்மானம்.

கடந்த மே 3, 2023 முதல் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டெய் மற்றும் குக்கி ஆகிய இரு பிரிவு மக்களுக்கிடையே, நடந்துவரும் கடுமையான மோதல்களும் அதைத் தொடர்ந்த வன்முறையும், மனித குலத்தை வெட்கி தலைகுணிய செய்துள்ளது. இரு பெண்கள் மீதான கொடூரமான பாலியல் ரீதியிலான, தாக்குதல் குறித்த வீடியோ, பாஜக ஆட்சியின் கேடுகெட்ட குணத்தை அம்பலப்படுத்தி உள்ளது. பெண்களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து செல்வதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்ட கொடுமையும், சகிக்க முடியாதது. பாஜக செய்த வெறுப்பு அரசியல் மனித தன்மையை இழந்த வன்முறையாளர்களை உருவாக்கி உள்ளது. மேலும் பல பெண்கள் பாலியல் வக்கிரங்களை கொடூரமாக சந்தித்துள்ளதாகஎஉம், படுகொலையானதாகவும் செய்திகள் வருகின்றன. நாட்டின் ராணுவ வீரரின் இணையரும் இந்த படுபாதக செயலுக்கு ஆளாகியுள்ளார். உலகின் பெரும்பான்மையினர் பாஜக ஆட்சியையும், அதன் ஒரு பக்க சார்பு நிலை பாட்டையும், கடுமையான கண்டனங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். முற்றாக அம்பலப் பட்டு நிற்கும் பாஜக, அரசியல் திசை திருப்பும் வேலைகளில் முனைப்பு காட்டுவது, பாஜகவின் வக்கிர குணத்தை மேலும் அம்பல படுத்துகிறது.

150 பேருக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேலானோர், தங்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கும் நிலையை பாஜக ஆட்சி உருவாக்கி உள்ளது. வீடு, நிலம், வேலை, கல்வி, குடும்பம் ஆகிய இழப்புகளை சந்தித்துள்ளனர். மாநிலத்தை ஆளும் பாஜக வின் காவல் துறை, நிர்வாக அதிகாரிகள் மற்றும் அஸ்ஸாம் ரைபில் போர்ஸ் எனும் துணை ராணுவப் படை, உள்ளிட்ட அனைவரும், இந்த வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலின் அங்கமாக உள்ளது அப்பட்டமாக வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மெய்ட்டி இனத்தை சார்ந்தவர் என்பதாலும், பழங்குடி அந்தஸ்து என்ற பெயரில், இதுவரை அமைதியாக இருந்த மக்களை கொம்பு சீவி வகுப்புவாத வெறியர்களாக பாஜக முதலமைச்சர் பிரேன்சிங் மாற்றி இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தனது அரசியல் மற்றும் சித்தாந்த தேவைகளை இத்தகைய பிளவுகளின் மூலம் நிறைவேற்றி வருகிறது.

இந்திய நாட்டின் அனைத்து ஜனநாயக மதசார்பற்ற சக்திகளும் மேற்படி, அரக்கத் தனமான, வக்கிரங்களுக்கு எதிரான கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் நடந்து கொண்டுள்ள மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு, மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி அரங்கேற்றியுள்ள வகுப்புவாத மோதலை வன்மையாக கண்டிக்கிறது. இரு பெண்கள் மீது சொல்லமுடியாத வகையில் பாலின ரீதியில், தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத வகையில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும், என வலியுறுத்துகிறது.

79 நாள்கள் கடந்து மணிப்பூர் பிரச்சனையில் வாய்திறந்த பிரதமர் மோடி, அலட்சியமாக செயல்பட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய பாஜக ஆட்சியை, இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. அதேநேரம், மணிப்பூர் மாநில பாஜக அரசு, மேலும் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்த பின்னணியில், ஆட்சியில் நீடிப்பது, ஜனநாயகத்திற்கும், இந்திய குடியாட்சி முறைக்கும் அவமானம் ஆகும். எனவே பாஜக மற்றும் அதன் முதல்வர் பிரேன்சிங் மணிப்பூர் மாநில ஆட்சி பொறுப்பில் இருந்து விலகுவதன் மூலமே, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே மணிப்பூர் அரசு பதவி விலக வேண்டும், என மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கைகளுக்காக நடக்கும் போராட்டங்களில் மக்கள் தாங்களாக முன் வந்து பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்திடுவதுடன், ஜனநாயகம், மனிதநேயம், மதசார்பின்மை ஆகியவற்றை காக்க முன்வர வேண்டும் என அறைக்கூவி அழைக்கிறது.

The post ’’சிபிஐ(எம்) மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%90%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/feed/ 0
”அன்னைத் தமிழால் அனைத்தும் முடியும் – என்.சங்கரய்யா..!” https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#respond Sat, 15 Jul 2023 05:06:58 +0000 https://madrasmurasu.com/?p=5177 இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர்  என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தமது 102வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். வாழும் வரலாறாகத் திகழும் தோழர் சங்கரய்யாவுக்கு நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட தமிழக மக்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ திரு. […]

The post ”அன்னைத் தமிழால் அனைத்தும் முடியும் – என்.சங்கரய்யா..!” first appeared on Madras Murasu.

]]>
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர்  என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தமது 102வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். வாழும் வரலாறாகத் திகழும் தோழர் சங்கரய்யாவுக்கு நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட தமிழக மக்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ திரு. சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில், ‘’இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஆட்சிமொழிகள் (திருத்த) சட்டம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் 1968 ஜனவரி 23-ஆம் நாள் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தோழர் என்.சங்கரய்யா பேசியதிலிருந்து’’ வாசகர்களுக்கு தருகிறோம்.

தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழி

’’யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தேர்வுகள் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழிகளான 14 மொழிகளிலும் எழுதலாம் என்று சேர்த்துக்கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும். இந்தியா பூராவிலும் உள்ள மக்கள் அந்த உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டும் தான் அல்லது இந்தியிலே மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையைப் பறிப்பதாகும்.

இன்று இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து நாம் நடத்திக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம், இந்தி மொழி பேசாத மாநில மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் ஓர் உறுதியான அடிப்படையிலே நம்முடைய திட்டம் இருக்க வேண்டுமென்று நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இன்று இந்தியாவிலுள்ள 14 மொழிகளும் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளாக வேண்டும். தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள அப்பகுதியை நான் மனப்பூர்வமாகவும், உறுதியாகவும் வரவேற்கிறேன் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கருத்து நாடு முழுவதிலும் ஒன்றாகத் தான் இருக்கிறது. தமிழகத்து நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு கருத்து, வேறு ஒரு மாநிலத்தில் இருக்கிற நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு கருத்து என்ற நிலையிலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல்லை. அதைத்தான் இந்தியா பூராவிலும் உள்ள எங்களுடைய கட்சித்தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். அதன்படிதான் இன்று தமிழ்நாட்டில் இதை நாங்கள் வற்புறுத்துகிறோம்.

யுபிஎஸ்சி தேர்வு தாய்மொழியில் எழுத வேண்டும்

இதை வற்புறுத்துகிற நேரத்திலே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குத் தேர்வு எழுதுகிறவர் கள், மத்திய அரசாங்கத்திற்கு வேலைக்குப் போக வேண்டுமென்று பரீட்சை எழுதுகிறவர்கள், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய மொழிகளிலே ஏதாவது ஒன்றிலே பாண்டித்தியம் பெற்றிருக்கவேண்டும் என்று நாடாளு மன்றத்திலே நிறைவேற்றப்பட்டிருக்கிற தீர்மானத்தை கவனிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வெறும் அவர்களுடைய தாய்மொழியை மட்டும் படித்தால் போதும் என்ற நிலைமை இருக்கிறது. இது மிகவும் மோசமான, மிகவும் பாரபட்சமான, மிகவும் சீர்கேடு வாய்ந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கிற திருத்தத் தீர்மானத்திலே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தேர்வுகள் எழுது கிறவர்கள் இந்திய தேசிய மொழிகளான 14 மொழிகளி லும் எழுதலாம் என்று சேர்த்துக்கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும். இந்தியா பூராவிலும் உள்ள மக்கள் அந்த உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் மட்டும் தான் அல்லது இந்தியிலே மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையைப் பறிப்பதாகும். இந்த அரசினர் தீர்மானத்தின் 4,5,6 பகுதிகளைப் பொறுத்தவரை எங்களுடைய கட்சிக்கு முழு சம்மதம் இருக்கிறது. அதற்கு முழு ஆதரவு கொடுக்கிறது. இரண்டாவது பகுதியிலே குறிப்பிட்டிருக்கிற அந்தப் பகுதிகளிலும் எங்களுக்கு ஒரு திருத்தம் இருக்கிறது. அதாவது இன்று நாமே சொல்லுகிறோம் தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மூச்சு என்று. டாக்டர் ஹண்டே அவர்கள் சென்ற கூட்டத் தொடரில் ஆங்கிலமே கல்லூரிகளில் போதனா மொழியாக நீடிக்க வேண்டு மென்று பேசும்போது சொன்னார்கள். அரசாங்கமும் அதற்கு ஆதரவு அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப் பட்டது. நம்முடைய மாணவர்கள் இன்று தமிழின் மூல மாகத்தான் உயர முடியுமென்ற அளவு, போதனா மொழியாக, பயிற்சி மொழியாக தமிழ் வர வேண்டும்.

வேறு மொழி கற்கச் சொல்ல உரிமையில்லை

மும்மொழித்திட்டம் நிச்சயமாகத் தேவை இல்லை. தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களை தமிழைத் தவிர வேறு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. மற்றவர்களுக்கும் உரிமை கிடையாது. ஏனென்றால் அது அவர்களுடைய தாய்மொழிஇல்லை. அதேபோல் ஆந்திராவிலுள்ள மாணவர்களை தெலுங்கைத் தவிர வேறு ஏதாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்வது நியாயம் அல்ல. ஆக, தாய்மொழியைத் தவிர, வேறு அண்மை மாநில மொழியைக்கூட நாம் கற்றுக்கொள்ளச் சொல்ல உரிமை இல்லை என்று சொல்லும் போது 6 ஆயிரம் மைல் தூரத்திலுள்ள ஆங்கில மொழியை நம்முடைய மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்று நாம் ஏன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? இன்று அதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நம்முடைய மாநிலத்தில் தமிழைத் தவிர மற்ற மொழிகளைப் படிப்பதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விட்டுவிடவேண்டும். இதற்கு நம்முடைய மாநில அரசாங்கமும் கல்வி இலாக்காவும் எந்த அளவுக்கு ஏற்பாடு செய்துதர முடியுமோ அந்த அள விற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவரவர் தாய்மொழி யைத் தவிர வேறு ஏதாவது ஒரு மொழியைப் படிக்கலாம் என்று தான் சொல்லவேண்டுமே தவிர , ஆங்கிலம் தான் படிக்கவேண்டுமென்றோ ,இந்திதான் படிக்க வேண்டுமென்றோ சொல்லக்கூடாது. ஆங்கிலத்தை கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டும். அவர்கள் மீது ஏன் அனாவசியப் பளுவை சுமத்த வேண்டுமென்பதை மிகவும் பணி வன்போடு உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன். ஆகவே இந்த மூன்று அம்சங்களிலும் இந்த அரசினர் கொண்டு வந்திருக்கக்கூடிய தீர்மானத்தில் தக்க திருத்தங்கள் ஏற்படுமானால் எங்களுடைய கட்சி அதை பூரணமாக ஆதரிப்பதற்கு இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றையுமே தமிழிலேயே நடத்த முடியும்

தாய்மொழியை, சீக்கிரமாகவே ஐந்து ஆண்டுக ளுக்குள் எல்லாத் துறைகளிலும் உபயோகப்படுத்த வேண்டும். நம்முடைய அரசாங்கத்திலும் சரி, நீதி மன்றத்திலும் சரி, கல்வியின் எல்லாமட்டங்களிலும் சரி, தமிழைக் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியை எதிர்ப்பதற்கு ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறார்கள் சிலர், ஆங்கிலத்தை எடுத்து விட்டால் ஒரு சூன்யம் ஏற்பட்டுவிடும். அந்த சூன்யம் ஏற்படாமல் இருப்பதற்கு ஆங்கிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்று வாதாடுகிறார்கள். ஆங்கிலம் இருந்தால் இந்தியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று நினைப்பது தவறு.

தமிழகத்தில் எவ்விதமான சூன்யமும் இல்லை. தமிழ் மாநிலத்தில் எல்லாவற்றையுமே தமிழிலேயே நடத்த முடியும். சட்டமன்றத்திலும், நீதிமன்றங்களிலும், கல்வியின் எல்லா மட்டங்களிலும் தமிழைக் கொண்டுவர முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. வேறு எந்த மொழியும் வருவதற்கு அவசியமில்லை. ஆங்கிலமும் தேவையில்லை. நமது நிலை வேறு. தமிழ்நாட்டின் எவ்வளவு சீக்கிரம் நீதி, நிர்வாகம், கல்லூரி போதனா மொழி இவைகள் எல்லாவற்றிற் கும் தமிழைக் கொண்டு வருகிறோமோ அந்த அள வுக்கு இதர மொழிகளுடைய தாக்குதல் நம்மீது ஏற்படாது’’

The post ”அன்னைத் தமிழால் அனைத்தும் முடியும் – என்.சங்கரய்யா..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/ 0
‘’ஆனால் நீங்கள் எந்த சட்டங்களை குறிப்பிடுகிறீர்கள் குஷ்பு..?’’ உ.வாசுகி கேள்வி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#respond Tue, 20 Jun 2023 07:16:27 +0000 https://madrasmurasu.com/?p=4229 சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி அறிக்கை: அன்புள்ள குஷ்புவிற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்நாடு மாநிலக்குழுவின் பொதுச் செயலாளர் ராதிகாவுக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை நான் பார்க்க நேர்ந்தது. இது பற்றிய எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு வழியாக நாங்கள் விழித்துக் கொண்டோம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும்தான் இருக்கிறோம் சகோதரி. பாலினப் பிரச்சினைகளில் – அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளில் […]

The post ‘’ஆனால் நீங்கள் எந்த சட்டங்களை குறிப்பிடுகிறீர்கள் குஷ்பு..?’’ உ.வாசுகி கேள்வி first appeared on Madras Murasu.

]]>
சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி அறிக்கை:

அன்புள்ள குஷ்புவிற்கு,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்நாடு மாநிலக்குழுவின் பொதுச் செயலாளர் ராதிகாவுக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை நான் பார்க்க நேர்ந்தது. இது பற்றிய எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வழியாக நாங்கள் விழித்துக் கொண்டோம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும்தான் இருக்கிறோம் சகோதரி. பாலினப் பிரச்சினைகளில் – அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்து தலையீடு செய்வதால், விழித்துக் கொள்ளவோ அல்லது எதிலும் குதிக்கவோ அவசியமில்லை. நீங்கள் விரும்பினால், நாங்கள் உங்களுக்கு விவரங்களைத் தர முடியும். எங்கள் சிந்தனை ஓய்வெடுக்கவும் இல்லை, துருப்பிடிக்கவும் இல்லை என உறுதிபட கூறுகிறோம்.

கலாக்ஷேத்ரா பிரச்சனையில், தேசிய பெண்கள் கமிஷனின் விதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். தேசிய பெண்கள் கமிஷன் என்பது ஒரு சட்டப்பூர்வமான, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

இதன் தலையீடு அரசு நிறுவனங்களோடு நின்றுவிடும் என்றும், தனியார் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அதன் வரம்புக்குள் வராது என்றும் சொல்லாதீர்கள். பிறகு ஏன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கலாக்ஷேத்திராவிற்கு வந்தார்?

ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர்கள் கருத்து கூட தெரிவிக்க முடியாது என்று எந்த விதிமுறை குறிப்பிடுகிறது? அல்லது கலாக்ஷேத்ரா புகார்தாரர்களை பாதிக்கப்பட்டவர்களாக தேசிய மகளிர் ஆணையம் கருதவில்லையா?

உண்மையில் கலாக்ஷேத்ரா மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் NCWக்கு பதிலளிக்க வேண்டியவர்கள் இல்லையா?

உங்கள் வாதத்தில் தெளிவு இல்லை. ஆனால் மாதர் சங்கம், துவக்கத்திலிருந்தும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை எதிர்ப்பது வரையும் போராடும் மாணவர்களுடன் இருந்தது.

நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின்போது தலையிடாததை நீங்கள் நியாயப்படுத்துவது நியாயமானதாகத் தெரியவில்லை.

மல்யுத்த வீரர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதை அல்லது விவசாயிகள் சங்கம் மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட பிற அமைப்புகள் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, ஆதரவு தெரிவிப்பதை நீதிமன்ற நடவடிக்கைகள் தடுக்கவில்லையே. அப்புறம் எப்படி உங்களை மட்டும் அமைதியாக்க முடியும்?

நாங்கள் சட்டங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சரி, நாங்கள் அதற்குத் திறந்த மனதோடு இருக்கிறோம். ஆனால் நீங்கள் எந்த சட்டங்களை குறிப்பிடுகிறீர்கள்? தயவு செய்து எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

Blind மற்றும் Deaf போன்ற வார்த்தைகளை இழிவான முறையில் பயன்படுத்துவது குற்றம் என்பது உங்களுக்குத் தெரியாதா? மாற்றுத்திறனாளிகளை நீங்கள் புண்படுத்துவது இது முதல் முறை அல்ல. பாஜகவில் சேர்ந்த உடனேயே காங்கிரசை விமர்சிக்க இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தியது நினைவிருக்கிறதா?

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் TARATDAC என்ற சங்கம், எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தது. பின்னர் நீங்கள் மன்னிப்புக் கேட்டு, இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளை இனி ஒருபோதும் புண்படுத்தமாட்டீர்கள் என்று உறுதியளித்தீர்கள். ஆனால் இங்கே நீங்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்துள்ளீர்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் ஒரு குற்றத்திற்கு சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் படிக்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

இறுதியாக, உங்களை விமர்சிப்பது எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

இது உங்களைப் பற்றி நீங்களே கொஞ்சம் அதீதமாக மதிப்பீடு செய்வதாக தெரிகிறது. AIDWA என்பது ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய அமைப்பாகும், மிஸ்டுகால் அழைப்பு மூலம் சேர்க்கப்பட்ட உறுப்பினர் அல்ல. மேலும் அதன் ஸ்தாபகத் தலைவர்கள் சுதந்திர இயக்கத்திலிருந்து ஈர்க்கப்பட்டவர்கள்.

விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. பிரச்சினைகளில் தலையிடும்போது உண்மையில் நாங்கள் ஆபத்துகள், காவல்துறை மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகிறோம்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நீதிமன்றங்களில் நீதியைப் பெறுவதற்கும், அவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதற்கும் நாங்கள் கடுமையாகப் போராடிய நூற்றுக்கணக்கான வழக்குகளை மேற்கோள் காட்ட இயலும்.

ஏழை பெண்கள், தலித் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அடிக்கடி தாக்கப்பட்டு, அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நீங்கள் விளம்பர வெளிச்சத்தைப் பற்றி பேசுகிறீர்கள்… அதுவும் AIDWA பற்றி!
உங்கள் கட்சியான பாஜகவின் சித்தாந்தம் மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டது, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சூத்திரர்களைப் பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை நாங்கள் விவரிக்க வேண்டியதில்லை. இந்துத்துவா அமைப்புகளால் சிறுபான்மையினர் எவ்வாறு குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

பல வல்லுறவு மற்றும் வன்முறை வழக்குகளில், பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றவாளிகள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே பாலின பிரச்சனைகளில் உங்கள் நிலைபாட்டை, அதேபோன்று உங்களது கட்சியின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள்.

இவ்வாறு அறிக்கையில் தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

The post ‘’ஆனால் நீங்கள் எந்த சட்டங்களை குறிப்பிடுகிறீர்கள் குஷ்பு..?’’ உ.வாசுகி கேள்வி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
“போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/#respond Mon, 05 Jun 2023 06:08:34 +0000 https://madrasmurasu.com/?p=3409 “போதையற்ற தமிழ்நாடு” பிரச்சார நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதை யொட்டி 100 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. போதையற்ற தமிழ்நாடு எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி, […]

The post “போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து first appeared on Madras Murasu.

]]>
“போதையற்ற தமிழ்நாடு” பிரச்சார நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதை யொட்டி 100 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. போதையற்ற தமிழ்நாடு எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என இந்த இயக்கத்திற்கு அமோக வரவேற்பளித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் திரைக் கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேது பதி, சரத்குமார், யோகி பாபு, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர். கையெழுத்து இயக்க பிரச்சார நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மாநிலம் முழுவதும் போதை ஒழிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. கஞ்சா ஒழிப்பிற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க தீரர்கள் குமார்-ஆனந்தன் நினைவு நாளையொட்டி நடைபெற உள்ளது.

இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூன் 3) சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி. சரவணதமிழன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், துணைச் செயலாளர் செல்வ ராஜ், மாவட்டச் செயலாளர்கள் கே.மணிகண்டன் (மத்திய சென்னை), தீ.சந்துரு (தென் சென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதில், வரவேற்புக்குழுத் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், கவுரவத் தலைவராக சு.வெங்கடேசன் எம்.பி., செயலாளராக எல்.பி.சரவண தமிழன், பொருளாளராக தீ.சந் துரு, புரவலர்களாக சி.திருவேட்டை, க.பீம்ராவ், பேரா.காளீஸ்வரன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி, சுசீந்திரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post “போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/feed/ 0
’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/#respond Fri, 02 Jun 2023 13:44:41 +0000 https://madrasmurasu.com/?p=3237 புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விழாவை 20 எதிர்கட்சிகள் புறக்கணித்தன. மதசார்பற்ற நாட்டை மதசார்பு நாடாக மாற்றும் வேலைகளும் அரசியல் அமைப்பு சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் மன்னராட்சி செங்கோலுக்கு என்ன வேலை? என்று எதிர்கட்சிகள் பிரச்னையை கிளப்பின. ’திருவாடுதுறை ஆதினம் செங்கோல், முதலில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது. தேவாரம் ஓதப்பட்டது. தமிழ்தான் முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது’ என்று ஆளுநர் தமிழிசை அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற […]

The post ’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் first appeared on Madras Murasu.

]]>
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விழாவை 20 எதிர்கட்சிகள் புறக்கணித்தன. மதசார்பற்ற நாட்டை மதசார்பு நாடாக மாற்றும் வேலைகளும் அரசியல் அமைப்பு சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் மன்னராட்சி செங்கோலுக்கு என்ன வேலை? என்று எதிர்கட்சிகள் பிரச்னையை கிளப்பின.

’திருவாடுதுறை ஆதினம் செங்கோல், முதலில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது. தேவாரம் ஓதப்பட்டது. தமிழ்தான் முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது’ என்று ஆளுநர் தமிழிசை அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது என்றும் அங்கு என்னென்ன படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ள என்பதை வெளியிட்டு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில், சு.வெங்கடேசன் எம்.பி.,கூறியுள்ளதாவது:

நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன். ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய ஓர் இடம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக்
காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம் இவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது புதிய நாடாளுமன்றக் கட்டடம்.

கட்டடத்தின் நடுநாயகமாக சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் மிகப்பிரமாண்டமாக விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேருமலையை மத்தாகவும் ஆதிசேஷனைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் பாற்கடலைக் கடையும் காட்சி பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் யாரைச் சுட்ட நினைக்கிறார்கள் இவர்கள்?

உண்மையில் அவையின் மையப்பகுதியில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டியது பிரிட்டீஷ்காரர்களுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டக் காட்சிகளாகும். அப்போராட்டத்தின் விளைவாக விடுதலைபெற்ற இந்தியர்கள், தாங்களே உருவாக்கிக்கொண்ட மகத்தான அரசமைப்புச் சட்டமே இந்த அவையையும் இந்த தேசத்தையும் வழிநடத்துகிறது. ஆனால் இதனைக் காட்சிப்படுத்தினால் தங்களின் துரோக வரலாற்றை நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவது போல அமைந்துவிடும் என்பதற்காக பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, அரசமைப்புச் சட்ட நூல் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள கலைவடிவங்கள். அசலான அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால் போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்களை மறுஉருவாக்கம் செய்து காட்சிப்படுத்தி உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படையில் நந்தலால் போஸ் ஓவியங்கள் ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் விதமாக, இந்தியத் தொன்மையையும் வரலாற்றையும் பண்பாட்டையும் முன்னிறுத்தும் முக்கியமான கூறுகளைக்கொண்டுள்ளன.

அந்த ஓவியங்கள் சிந்துவெளிப் பண்பாடு, பண்டைய பல்கலைக்கழகங்கள், முகலாய கட்டக்கலை, சுதந்திரப் போராட்ட வரலாறு, தேச விடுதலைக்காகவும் மதகலவரங்களுக்கு எதிராகவும் அண்ணல் காந்தி எனப் பன்மைத்தன்மை மிக்கதாகவும் சான்றதாரங்களின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. ஆனால் இவர்கள் உருவாக்கியுள்ள இந்த 16 கலைவடிவங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன.

முதலில் இதில் சிந்துவெளிப் பண்பாட்டிற்கு இடம் இல்லை. இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு நேர்மாறாக வேதப் பண்பாட்டிலிருந்து தொடங்குகிறார்கள். இங்கே இதிகாசங்கள் வரலாறாக மாற்றப்படுகின்றன. நந்தலால் போஸ் வரைந்ததில் இதிகாசங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தெளிவாக காவியக்காலம் என்று கூறப்பட்டிருக்கும். வரலாறு என்று சொல்லப்பட்டிருக்காது.

இங்கு இதிகாசம், வரலாறு என்று கூறப்படுகிறது. இதிகாசத்தை வரலாறாகத் திரிக்கும் போக்கிற்கு இது நேரடி அங்கீகாரம் வழங்குவதாக உள்ளது.
வேதங்களில் சபா, சமிதி, சன்சாத் போன்ற சொல்லாடல்களோடு மனித மாண்பினை இழிவுப்படுத்தும் சொல்லாடல்களும் குறிப்பாக மனிதர்களைச் சாதி, வர்ண ரீதியாகப் பிளவுபடுத்தும் சொல்லாடல்களும் காணப்படுகின்றன.

சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு வர்ணங்கள் முற்றிலும் எதிரானவை. அவற்றினை மேற்கோளாகக் கட்டுவதும் தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி.

சனாதனம் இந்த மண்ணில் உருவாக்கிய எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான பிரகடனமே அரசமைப்புச் சட்டம். சனநாயகம் என்பது முற்றிலும் நவீனகாலச் சிந்தனையாகும். மன்னராட்சியிலிருந்து தன்னைப் பிரித்து, அதனை எதிர்த்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வெளிவந்த செயல்பாடாகும்.

பண்டைய காலத்தில் காணப்பட்ட சபை, சங்கம் முதலியவற்றை சனநாயகம் என்று சொல்வது மீண்டும் பழமைவாத தன்மைக்குத் திரும்புவதாகும். உத்திரமேரூர், உக்கல் கல்வெட்டுகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் நடைபெற்ற விசயங்கள் ஆகும். அவற்றை ஒட்டுமொத்த மக்களுக்கானதாய் பார்க்க முடியாது. அர்த்தசாஸ்திரம் உள்ளிட்ட இலக்கியங்கள் அரசர்களை மையப்படுத்தியவை.

மக்களுக்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கும் இருந்ததில்லை.
இந்த 16 கலைவடிவங்கள் சனநாயகத்திற்கான வேர்கள் பண்டைய இந்தியாவில் உள்ளன என்பதை எடுத்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அதன்வழி பண்டைய காலத்தில் சனநாயகம் நிலவியதாகக் கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா தனது பண்டைய ஆட்சிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சனநாயகம் என்னும் நவீனகாலச் சிந்தனை அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளைக் கொண்டது. சனநாயகம் அரசாட்சியை எதிர்த்துப் பெற்றதாகும்.

இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் ஆட்சி முறை என்பவை மௌரியர், குப்தர், முகலாயர், மராத்தியர், கலிங்கர், ஆங்கிலேயர், பல்வேறு பழங்குடிகள் ஆகியோரை உள்ளிட்ட எல்லோருடைய கூறுகளையும் உள்ளடக்கிய அதிலிருந்து பரிணமித்த ஓர் ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது. அவை இந்த 16 கலைவடிவங்களில் இல்லை.

பன்மைத்துவங்கொண்ட நந்தலால்போஸ்ஸின் படைப்பினை அழித்து, அதற்கு மாறாக பண்டைய வேத காலத்தில் சனநாயகம் நிலவியது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளனர். இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவதும் நேரடியாக இந்துத்துவா அரசியல் கோட்பாட்டை நிறுவும் அப்பட்டமான முயற்சியாகும்.

அவர்களின் கட்சி அலுவலகத்தில் நிறுவிக்கொள்ள வேண்டியனவற்றை நாட்டின் பேரவையான நாடாளுமன்றத்தில் நிறுவியதென்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் இந்துத்துவா கோட்பாடுகளால் இந்த அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாவர்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது.

The post ’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/feed/ 0
மணிப்பூர் கலவரம் 54 உயிர் பலி. அமைதி வேண்டும்..! சிபிஐ(எம்) https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-54-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-54-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-54-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#respond Sun, 07 May 2023 15:04:42 +0000 https://madrasmurasu.com/?p=1278 54 உயிர்களைப் பலி கொண்டது மணிப்பூர் கலவரம், பதற்றம் நீடிப்பு; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்.. மணிப்பூரில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுவரும் வன்முறை மற்றும் இனக் கலவரங்கள் மிகவும் ஆபத்தான அளவிற்குச் சென்றுள்ளன. வீடுகள் நாசமாக்கப்படுதல், சொத்துக்கள், தேவாலயங்கள், கோவில்கள் 5 மாவட்டங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. மோதல்களில் எண்ணற்றவர்கள் இறந்திருக்கிறார்கள். மத்திய துணை ராணுவம் மற்றும் ராணுவம் வந்த பின்னர், நிலைமையில் சற்றே கட்டுப்பாடு […]

The post மணிப்பூர் கலவரம் 54 உயிர் பலி. அமைதி வேண்டும்..! சிபிஐ(எம்) first appeared on Madras Murasu.

]]>
54 உயிர்களைப் பலி கொண்டது மணிப்பூர் கலவரம், பதற்றம் நீடிப்பு; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்..
மணிப்பூரில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுவரும் வன்முறை மற்றும் இனக் கலவரங்கள் மிகவும் ஆபத்தான அளவிற்குச் சென்றுள்ளன. வீடுகள் நாசமாக்கப்படுதல், சொத்துக்கள், தேவாலயங்கள், கோவில்கள் 5 மாவட்டங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
மோதல்களில் எண்ணற்றவர்கள் இறந்திருக்கிறார்கள். மத்திய துணை ராணுவம் மற்றும் ராணுவம் வந்த பின்னர், நிலைமையில் சற்றே கட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னமும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பலர் வெளிவர முடியாமல் தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
இதுபோன்ற நிலைமை உருவாகும் என்பதை முன் உணர்ந்து துரிதமாக செயல்படுவதில் பாஜக மாநில அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிட முயற்சிப்பதைத் தாமதித்தது.
வனங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மலைப் பகுதிகளிலிருந்து பெரிய அளவில் மக்களை வெளியேற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும், ‘வெளியாட்களை’ வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றப் போகிறோம் என்று கூறிவந்ததும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இது மலை மாவட்டங்களில் விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றன. இவ்வாறு கூர்மையான முறையில் வன்முறை மோதல்கள் ஏற்பட இட்டுச்சென்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு முன்பு அங்கே அமைதியையும், இயல்பு நிலைமையையும் ஏற்படுத்துவது உடனடிக் கடமையாகும்.
மாநில அரசாங்கம், ஒன்றிய அரசாங்கத்தின் உதவியுடன், இடம் பெயர்ந்துள்ள மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வு அளித்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும். நிலைமையைச் சமாளித்திட ஓர் ஒன்றுபட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

The post மணிப்பூர் கலவரம் 54 உயிர் பலி. அமைதி வேண்டும்..! சிபிஐ(எம்) first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-54-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/feed/ 0