Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#வீரமணி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 16 Oct 2023 04:26:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது..!’’ தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b4%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af/#respond Mon, 16 Oct 2023 04:26:19 +0000 https://madrasmurasu.com/?p=6873 ”இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது. அர்ச்சுனன் அவர்களின் மறைவின் துயரையும் தாங்கிக்கொண்டு, அவரது புகழ் போற்றும் நிகழ்வுகளை அன்றைக்கும் திராவிடர் கழகம் நடத்தியது. இன்றைக்கும் அவர் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துகிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14.10.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திராவிடர் கழகத்தின் சார்பில் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை: பழையகோட்டை – இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் மரியாதைக்குரிய அர்ச்சுனன் அவர்களின் […]

The post ’’இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது..!’’ தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
”இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது. அர்ச்சுனன் அவர்களின் மறைவின் துயரையும் தாங்கிக்கொண்டு, அவரது புகழ் போற்றும் நிகழ்வுகளை அன்றைக்கும் திராவிடர் கழகம் நடத்தியது. இன்றைக்கும் அவர் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துகிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14.10.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திராவிடர் கழகத்தின் சார்பில் தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை:

பழையகோட்டை – இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் மரியாதைக்குரிய அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை வகித்து – அவரது படத்தை திறந்து வைத்துள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே! 

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்டுள்ள திராவிட இயக்க ஆளுமைகளே!

உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறப்புமிகு நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையில் வேறு பணிகளில் நான் இருப்பதால் காணொளி மூலமாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1940-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்- இந்த இயக்கத்தை வளர்ப்பது சிறு வயது இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்டார். அத்தகைய இளைய தீரர்களில் ஒருவர்தான் பழையகோட்டை – இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் மரியாதைக்குரிய அர்ச்சுனன்.

இன்றைக்கு மிகப் பெரிய தலைவர்களாக போற்றப்படும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனப் பலரும் மிக மிக இளவயதிலேயே மேடைகளில் முழங்க தொடங்கியவர்கள். அதிலும் நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள் – அந்தக் காலக்கட்டத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்து – பத்து வயதில் மேடைகளில் முழங்கத் தொடங்கியவர் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

இப்படி ஏராளமான இளைஞர்கள் – இளம் பெண்கள் – சிறுவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார்கள். பெரியாரின் கொள்கை மீதான ஈர்ப்பு மட்டுமே காரணமல்ல. பெரியார் என்ற தலைவர் மீதான பாசமும், அன்பும் இன்னொரு முக்கியமான காரணம். அப்படி தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டவர்களுள் முக்கியமானவர் அர்ச்சுனன் அவர்கள்.

இளம் வயதிலேயே பெரும் எழுச்சியுடன் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் முழங்கி, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் ந.அர்ச்சுனன். தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பழையகோட்டை குடும்பத்தார் என்றால் அறியாதவர்கள் கிடையாது. மிகப் பெரிய செல்வந்தர்கள். 

ஏராளமான நிலபுலன்களைக் கொண்டவர்கள். காங்கேயம் மாடுகள் என இன்று புகழ்பெற்றிருக்கும் மாடுகளை வளர்த்தெடுத்ததில் இந்தக் குடும்பத்தினருக்குத் தனிப் பெருமை உண்டு. அத்தகைய செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் இளைய மகனாக, நல்லசேதுபதி சர்க்கரை மன்றாடியாரின் இளவலாகப் பிறந்த இளைய பட்டக்காரர்தான் அர்ச்சுனன் அவர்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால் இருபது வயதிலேயே ஈர்க்கப்பட்டு, அவரது தளபதியாகத் திகழ்ந்தவர் அவர். தமிழ்நாடெங்கும் பயணித்து பெரியாரின் பகுத்தறிவு-சுயமரியாதை கருத்துகளை முழங்கியவர். பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அர்ச்சுனன் முன்வைத்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டி, செயலாற்றலுக்குத் துணை நின்றன.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. பெரியாரின் தலைமையிலான இயக்கத்திற்குப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தின் பெயர், அண்ணாதுரை தீர்மானம். பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அமைந்த தீர்மானம். அவரே முன்மொழிந்த தீர்மானம் அது. அதன்பிறகு, திராவிடர் கழகத்திற்கு ஒரு கொடி வேண்டும் எனப் பெரியார் திட்டமிட்டார். அதற்கான வடிவமைப்பின்போதுதான், கருப்பு நிறத்திற்கு நடுவே சிவப்பு வட்டம் வரைவதற்கு மை தேவைப்பட்டபோது, சிவப்பு மை இல்லாததால், தலைவர் கலைஞர் அவர்கள் தன் விரலில் குண்டூசியால் குத்தி, பொங்கி வந்த ரத்தத்தைக் கொண்டு சிவப்பு வட்டத்தை வரைந்தார்.

கொள்கையாளரின் குருதியில் வடிவமைக்கப்பட்டது திராவிடர் கழகக் கொடி. சமுதாய இருளை அகற்றி, புரட்சி வெளிச்சம் பரவவேண்டும் என்ற அடையாளமான அந்தக் கொடியை பல ஊர்களிலும் ஏற்றியவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன்.  கொடியேற்றி வைத்து அவர் ஆற்றிய வீர உரைகள், அன்றைய இளைஞர்களின் நெஞ்சில் அறிவுச் சுடராக ஒளிர்ந்தது. 

ஜமீன் குடும்பத்துப் பையனான அர்ச்சுனன் – தன் சொத்து, சுகம், செல்வச் செழிப்பு பற்றிக் கவலைப்படாமல், கரடுமுரடான சமுதாய சீர்திருத்தப் பாதையில் பயணித்தார். தந்தை பெரியாருக்குத் தளபதியாகச் செயல்பட்டார். அவர் கொள்கைகளைக் கொட்டி முழக்கி, பாட்டாளிகளின் தோழனாகத் திகழ்ந்தார்.

கோவையில் நடந்த திராவிடர் இளைஞர் முதலாவது மாநாட்டுக்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் அர்ச்சுனன். அந்த மாநாட்டில் தலைமையுரை ஆற்றியவர் பேரறிஞர் அண்ணா. “ஓர் அரிய-தீரமுள்ள முன்னணிப் படை இன்று தயாராகிவிட்டது. கஷ்ட நஷ்டங்களைக் கவனியாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், சூது சூழ்ச்சிகள் கண்டு சோர்வடையாமல், சளைக்காமல் உழைக்க இளைஞர்கள் முன்வந்துள்ளனர். இது கண்டு எதிரிகள், எப்படி புறப்பட்டது இந்தப் படை, எப்படி அமைந்தது இத்தகைய முன்னணி என்று எண்ணி ஏங்குகின்றனர்” – இப்படி உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க அழகு தமிழில் பேசியவர் அண்ணா அல்ல, அர்ச்சுனன்தான் இப்படிப் பேசினார்.

அவருடைய சொற்பொழிவுகளின் பதிவுகளைப் படிக்கும்போது, பேரறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்பது போலவே இருக்கிறது. தந்தை பெரியாரின் தளபதிகளான பட்டுக்கோட்டை அழகிரி, பேரறிஞர் அண்ணா, பழையகோட்டை அர்ச்சுனன் எனப் பலரும் கொள்கை முழக்கத்தால் எளியவர்களையும் ஈர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தொடக்க காலத்தில் இருந்திருக்கிறார்கள். நம்பிக்கைக்குரிய இளைஞராகத் திகழ்ந்த அர்ச்சுனன் அவர்களைத் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளராக நியமித்தார் பெரியார்.

தந்தை பெரியாரின் நம்பிக்கையை ஒருவர் பெறுவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை அனைவரும் அறிவோம். அத்தகைய பெரியார் அவர்களையே இளைஞராக இருக்கும்போது ஈர்த்து நம்பிக்கையைப் பெற்றவர் அர்ச்சுனன் என்பதே அவரது பெருமையைச் சொல்வதற்கு போதுமான எடுத்துக்காட்டு.

திராவிடர் கழகம் உருவான சில ஆண்டுகளில், தந்தை பெரியாரை கோவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதற்காக, அன்றைய நாளில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புது கார் ஒன்றை வாங்கியவர் அர்ச்சுனன். பத்து கிராம் தங்கம் 99 ரூபாய்க்கு விற்ற காலம் அது. அந்தக் காலத்தில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புது கார் வாங்கிக் கொடுத்தவர். இப்படி தனது உழைப்பை மொத்தமாக பெரியார் கொள்கைக்கு வழங்கியவர் அர்ச்சுனன் அவர்கள். 

”திராவிடர்களாகிய நாம் சுதந்திரத்துடன் வாழ வேண்டும்! இல்லாவிட்டால் மாளவேண்டும்” என்று ஊர் ஊராகப் போய் எழுச்சி ஏற்படுத்தினார். மேற்கு மண்டலத்தில் கருஞ்சட்டைப் படையை பலப்படுத்தியது அவரது கர்ஜனைதான். அத்தகைய  கொள்கை வீரர். பேச்சாலும் செயலாலும் திராவிட இயக்கத்தின் பக்கம் பலரையும் ஈர்த்த தீரர், உடல்நலன் பாதிக்கப்பட்டு தன் 23 வயதிலேயே உயிர் நீத்தார் என்பது மிகமிக வருத்தம் தரும் செய்தி. 

அர்ச்சுனன் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்த பெரியார், கண்ணீருடன் தன் கைப்பட குடிஅரசு பத்திரிகையில் இரங்கல் தலையங்கம் எழுதினார். பேரறிஞர் அண்ணா, ‘திராவிட நாடு’ இதழில் தலையங்கம் தீட்டினார். தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தினர் சோகத்தில் மூழ்கினர். இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது. அர்ச்சுனன் அவர்களின் மறைவின் துயரையும் தாங்கிக்கொண்டு, அவரது புகழ் போற்றும் நிகழ்வுகளை அன்றைக்கும் திராவிடர் கழகம் நடத்தியது. இன்றைக்கும் அவர் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துகிறது. 

இலட்சியவாதிகள் இறக்கலாம். இலட்சியங்கள் ஒரு போதும் இறப்பதில்லை என்று எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இலட்சியங்களை உயர்த்திப் பிடித்த இலட்சியவாதியாம் அர்ச்சுனனை மறக்காமல், அவரது புகழினைப் போற்றும் அய்யா ஆசிரியர் – திராவிடர் கழகத்தினருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்றார் பேரறிஞர் அண்ணா. தாய்க் கழகத்தின் கொள்கை மறவர் அர்ச்சுனனை தி.மு.கழகம் நினைவிலேந்திப் போற்றுகிறது. பழையகோட்டை பட்டக்காரர் குடும்பத்தினர் பலர் இன்றளவும் தி.மு.கழகத்தின் கொள்கை முரசங்களாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

அர்ச்சுனன் போன்ற தீரர்கள் சுயமரியாதை – பகுத்தறிவு இயக்கத்துக்கு இன்னும் தேவைப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் திராவிட இயல் கோட்பாடு ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. “எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே! எங்கள் மாநிலத்தில் திராவிட இயக்கம் இல்லையே” என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் அவர்கள் வழியில், இலட்சிய முழக்கத்தை தொடர்ந்து எழுப்புவோம். சமூகநீதியையும் சுயமரியாதையும் இந்தியா முழுமைக்கும் பரவிடச் செய்வோம்.

நன்றி வணக்கம்.

The post ’’இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது..!’’ தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af/feed/ 0
’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-100-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%2581-100-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-100-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/#respond Sat, 14 Oct 2023 05:22:13 +0000 https://madrasmurasu.com/?p=6836 ’’தி.மு.கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  விழாவில் பேசினார். 13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு […]

The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தி.மு.கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  விழாவில் பேசினார்.

13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

யாரும் கணக்குப் போடாத காலத்தில்…

இந்த நூற்றாண்டு விழாவை, ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல், புகைப்படக் கண்காட்சியையும், அடுத்து ஆசைத்தம்பி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு பன்முக விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக கழக முன்னோடிகளைப் போற்றும் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்? என்றால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னது போல, அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமா நடத்துகிறோம்? இல்லை… வரக்கூடிய காலக்கட்டத்தில் வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகிறோம்!

நீதிக்கட்சியின் தலைவர்!

‘ஒருகாலம் வரும்… சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்…’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள்.
நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் சம காலத்தவரான அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள், தலைவர் கலைஞரைவிட ஐந்து மாதம் இளையவர்.
1938-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்தது. அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர்தான் நம்முடைய ஆசைத்தம்பி. அவருடைய தந்தையார் பழனியப்பன், விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார்!

விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம்! அங்கிருந்து உருவானவர்தான் நம்முடைய ஆசைதம்பி அவர்கள். பள்ளிப்பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிற்காலத்தில் ‘தனி அரசு’ என்ற இதழை அவர் நடத்தினார். முதலில் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அதற்கு பிறகு சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்திருக்கிறது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி’ என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனியரசு நாளிதழ்.
பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் – நாவல்கள் எழுதியிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
தலைவர் கலைஞர் திரைக்கதை – வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படம் எத்தகைய தாக்கத்தை நமது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியதோ அதை அனைவரும் தெளிவாக அறிந்திருக்கக் கூடியவர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே ‘கசந்த கரும்பு’ என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி.

திராவிடர்கள்
திராவிடர் இயக்கம் ஏன்?
தனியரசு ஏன்?
காந்தியார் சாந்தியடைய… போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார்! அதிலும் குறிப்பாக ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை – மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.

50 ரூபாய் நிதி!

ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் – 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார். வழக்கு நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. அதில் முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் பேரறிஞர் அண்ணா.

ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.

சிறைச்சாலை என்ன செய்யும்?

இது கழகத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் அனைவருடைய மனதில் ஒரு வேகத்தை, கோபத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா, தனது திராவிடநாடு இதழில் வெளியிட்டார். கண்காட்சியில் இது இடம் பெற்றிருக்கிறது. இதை பார்த்தால் தெரியும். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா அவர்கள் உத்தரவிட்டார். கோவில்பட்டியில் நடந்த கழக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார், ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.

அந்தக் காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் தடை செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை செய்யப்பட்டது. கலைஞரின் நாடகங்கள் – நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன.

புத்தகங்களைப் படித்தார்கள்!

அந்த வரிசையில் ஆசைத்தம்பி அவர்களின் ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார். ‘எந்த புத்தகத்தை தடை செய்கிறார்களோ – அந்த புத்தகத்தை பொது இடத்தில் தெருவிளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்’ என்று அண்ணா கட்டளையிட்டார்.

கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று கழகத் தொண்டர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை நூலையும், ஆசைத்தம்பியின் ‘காந்தியார் சாந்தியடைய’ நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். வண்ணாரப்பேட்டையில் நின்றுகொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில்தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!

அவருடைய புத்தகம் விற்றதால், 1950-ஆம் ஆண்டு கைது செய்தார்கள். ஆட்சிக்கு வந்து அதே பகுதியில் அவருக்கு நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கம்பீரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!

திராவிட இயக்கத் தோழர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை! இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ, கைது செய்யப்படுவதைப் பற்றியோ, சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல!
மிசாவில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக, சென்னை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள் என்று சொன்னால், அதில் எதற்கும் அஞ்சாமல் ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்த நம்பர்-1 கைதி யார் என்று கேட்டால் ஆசைத்தம்பி தான். நான் இப்போதும் சொல்கிறேன், தைரியமாக சொல்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். நாங்கள் எல்லாம் சிறைக்கு புதிது. எங்களைப் போன்றோர் சிறைக்கு புதிது. எங்களுக்கெல்லாம் தைரியம் ஊட்டியவர். சிறை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். அவரிடத்தில் பல பேர் சென்று கேட்பார்கள். எப்போது விடுவிப்பார்கள்? கவலைப்படாதீர்கள், 1 year, 1 year என்று சொல்வார். அவ்வளவு கூலாக சொல்வார். அவரைப்போல ஒரு ஜென்டில்மேனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.

‘திராவிடர் கழகம்’

கணக்குப் போட்டு பார்த்தேன், மொத்தம் 24 முறை, இனம் –மொழி –நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி. எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பேசுபவர்தான் ஆசைத்தம்பி -க்கு உண்டு.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்’ என்று 1943-ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி. இதை வைத்துப் பார்த்தால் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி தான் என்றுகூட சொல்லலாம். அங்கே அண்ணன் திருநாவுக்கரசு உட்கார்ந்திருக்கிறார். நம்முடைய திராவிட இயக்கத்தின் எடுத்தாளர். முரசொலியில் இரண்டு நாட்களாக ஆசைத் தம்பி-யைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி இடம் பெற்றார்.

இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர்!

விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது 1957-ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன், அதுதான் எனக்கு பெருமை.
1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் அவரை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.

பெரியார் இயக்கம்!

அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் தான், ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார். கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, கடைசியாக, நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர் ஆசைத்தம்பி. அப்போதே முழங்கியிருக்கிறார். “ஒற்றை மொழி – ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!” என்றும் ஆசைத்தம்பி அங்கே பேசி இருக்கிறார்.

தி.மு.க.வில் இருந்தாலும் தி.க-வின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். தி.மு.க. – தி.க. ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தி, கைது செய்யப்பட்டு அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘வாலிப பெரியார்’

காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள், Superintendent வந்து செக் செய்வார். தி.மு.க.வினர் தனியாகவும் – தி.க.வினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். அப்போது கலைஞர் அவர்கள் கேட்கிறார், ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று ஆசிரியர் வீரமணி கேட்டுள்ளார். “ஜெயிலர்தான் நிற்கச் சொன்னார்” என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். “ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார்?” என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இங்கே இருக்கிறேன் என்று ஆசைத்தம்பி சொல்கிறார். அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால்தான், அவர் இன்றைக்கு ‘வாலிப பெரியார்’ என்று அவர் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார். அவரது மகள் காந்தி திருமணத்தையும் தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். மகன் செளந்தரபாண்டியன் திருமணத்தை தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார்.

கலைஞர் கதறினார்!

திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது – கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.

தனது இறுதி உரையில், ‘திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்’ என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இதுதான் அவரது மரண சாசனம்! அந்தக் கூட்டத்தில், அந்தமானில் இருக்கக்கூடிய கழகத் தோழர்கள் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்.

நின்று காத்தவர் ஆசைத்தம்பி!

இறுதியாக அவர் சொன்னார்: “இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமை!” என்று சொன்னவர் ஆசைத்தம்பி.

கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான சொற்கள் இவை! ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொல்கின்றபோது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி” என்று சொன்னார்.

இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்! ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமாக எழுதினார்கள்.

“என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும் உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்” – என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!

ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘வாலிபப் பெரியார்’ ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.

The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-100-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0
’’வீழட்டும் ஸநாதனம்! வெல்லட்டும் திராவிடம்..!’’ கி.வீரமணி https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25b4%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b8%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2/#respond Thu, 07 Sep 2023 10:11:06 +0000 https://madrasmurasu.com/?p=6180 ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதில் என்ன குற்றம்? ஸநாதனவாதிகள் உறுமுவது ஏன்? திசை திருப்புவது ஏன்? என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: திடீரென்று நாடாளுமன்றத்தின் சிறப்புத் தொடர் கூட்டம் வரும் 18.9.2023 அன்று முதல் 22 ஆம் தேதிவரை – ஐந்து நாள்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. கிலியடித்துள்ளது பா.ஜ.க.விற்கு! 2.9.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் […]

The post ’’வீழட்டும் ஸநாதனம்! வெல்லட்டும் திராவிடம்..!’’ கி.வீரமணி first appeared on Madras Murasu.

]]>
’அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதில் என்ன குற்றம்? ஸநாதனவாதிகள் உறுமுவது ஏன்? திசை திருப்புவது ஏன்? என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:

திடீரென்று நாடாளுமன்றத்தின் சிறப்புத் தொடர் கூட்டம் வரும் 18.9.2023 அன்று முதல் 22 ஆம் தேதிவரை – ஐந்து நாள்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. கிலியடித்துள்ளது பா.ஜ.க.விற்கு!

2.9.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஸநாதன அழிப்பு மாநாட்டை நான் தொடங்கி வைத்து உரையாற்றிய பின்னர், தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அவரின் பொறுப்பான, சிறப்பான உரை ஒலி நாடாக்களிலும், காட்சிப் பதிவாகவும் பதிவாகியுள்ள தோடு, ‘முரசொலி’, ‘விடுதலை’ நாளேடுகளில் முழுமை யாகவும் அப்படியே வெளிவந்துள்ளது.

மானமிகு உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

அவர் ஏதோ இனப்படுகொலை (Genocide) செய்யச் சொன்னதுபோல, பல சமூக ஊடகங்களாலும், நாட்டின் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களாலும் திட்டமிட்டு திரித்துப் பரப்பப்பட்டு வருவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது; அந்தப்படி பரப்பு அப்பட்டமான ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப் பொய் மூட்டை’ ஆகும்!

இது பா.ஜ.க.வினருக்குக் கைவந்த கலையே! பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்படு கிறார்கள் என்று வட இந்தியாவில் ஓர் அவதூறுப் புயலைக் கிளப்பிவிடவில்லையா? அந்த நபர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுண்டே! அவர் ஜாமீன் கோரியபோது, நீதிமன்றங்களே இதுபோன்ற அவதூறு பொய் மூட்டை களைத் தயாரிக்கும் போக்கைக் குறிப்பிட்டு, கண்டித்த வரலாறு சில மாதங்களுக்குமுன் நடந்தது மறந்தா போகும்?

கருத்தைக் கருத்தால் சந்தித்துக் களமாடுவதுதான் கழகங்களின் பணியே தவிர, வன்முறை வெறுப்புக் காரியத்தில் மக்களை இழுத்துவிடுவதல்ல!

எதிர்க்கட்சிகளின் எழுத்துகளை, உரைகளை வெட்டியும், ஒட்டியும் (Out of Content) பொருந்தாத வையை பொருந்த வைத்து, விஷமதானம் செய்வது பா.ஜ.க.வின் அன்றாட திரிபு வேலை. அதற்குத்தான் பலரை ஒரு பட்டாளமாக திரட்டி பணி செய்ய வைத்து, உண்மைகளை களப் பலியாக்கி, அதில் வெற்றி காண லாம் என்பது காவிகளின் சர்வ சாதாரணமான தினப் பணியே!

அதுபோலவேதான் அமைச்சர் உதயநிதிப் பேச்சின்மீதான திரிபுவாதம்! இதுமாதிரி பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திராவிட இயக்கத்தின் ரத்த ஓட்டத்தில் என்றுமே கிடையாது!

எதிர்கொள்ளத் தயார்!

உண்மையை உலகத்திற்கு உணர்த்தி எந்த நிலை யையும் எதிர்கொள்ளப் பின்வாங்காதவர்கள் நாங்கள்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் வந்த பிறகும்கூட, எப்படியெல்லாம் மீண்டும் மீண்டும் அதை ஏற்காமல், ‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட்டு’ சாப்பிட்டு மகிழ ‘அவாள்’ ஆயத்தமாகிறார்கள்! இது ஸனாதனப் புத்தி அல்லவா!

இந்தக் கோயபெல்சின் குருநாதர்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வன்முறைக்குச் சொந்தக்காரர்கள் யார்?

தங்களுக்கு எதிரான மார்க்கத்தைப் பரப்பிய – மனித சமத்துவத்தை வலியுறுத்திய பிறப்பின் அடிப்படையி லான வருண பேதத்தை எதிர்த்த பவுத்தர்களைக் கொன்று குவித்தவர்கள் யார்? எண்ணாயிரம் சமணர் களைக் கழுவேற்றிக் கொன்றவர்கள் யார்?

இத்தகைய கூட்டம்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்லாததை சொன்னதாகச் சொல்லி, மதவாத நெருப்பை மூட்டி, வட மாநிலங்களில் தேர்தலில் ஆதாய வடை சுட முயலுகிறார்கள்.

பேதத்தை ஒழிப்பது குற்றமா?

ஜாதி ஒழிப்பு என்றால் ஜாதிக்காரர்களைக் கொல் லுவது என்று பொருளாகுமா?

மூடநம்பிக்கை ஒழிப்பு என்றால், மூடநம்பிக்கை யாளர்களை சாகடிப்பது என்று பொருளாகுமா? ஏழ்மை ஒழிப்பு என்றால், செல்வந்தர்களைத் தீர்த்துக் கட்டுவது என்று பொருளாகுமா?

அதேபோல், ஸநாதன அழிப்பு என்றால், பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மத்தை ஒழிப்பது என்று பொருள் – சமதர்மத்தை – சமத்துவத்தை வளர்ப்பது என்று பொருள். ஆளைக் கொல்லுவதல்ல. பேதத்தை ஒழிக்கும் கருத்தின் அடிப்படையில்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தேர்தலில் மக்களைச் சந்திக்கக் கைவசம் வேறு சரக்கு இல்லாதவர்கள், திரிபுவாத – மதவாத ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். அந்தோ பரிதாபம்!

மக்கள் அடையாளம் காணட்டும்!

450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலத்தை அயோத்தியில் இடித்த வர்கள், இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே இராமன் கோவில் கட்டுபவர்கள்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலினின் அறிவார்ந்த சமத்துவக் கொள்கைப் பிரகடனத்தை வன்முறைப் பேச்சாக திசை திருப்பு கிறார்கள், திரிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி பிரார்த்தனைக் கூட் டத்தில் ‘தேசப்பிதா’ காந்தியாரைக் கும்பிட்டுக் கொண்டே சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட் சேவை இன்றும் பாராட்டி வழிபடுவோர் யார் என்பது உலகறிந்ததே!

மக்கள் இவர்களை அடையாளம் காண்பார்களாக!

சென்னையில் 2.9.2023 அன்று ஓர் அரங்கத்திற்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப்புரையை அகில இந்தியாவிலும், அதற்கப்பாலும் பரப்பி, அவர் சரியான ஆதாரப்பூர்வ விளக்கம் தந்த பிறகும், நீங்கள் ஸநாதன முகங்காட்டி ஆடுவது தொடரட்டும்; திராவிட வயலுக்கு அதைவிட நல்ல உரம் வேறு இல்லை.

சந்திக்கத் தயார் என்று அந்த வேங்கைகளின் கொள்கை வாரிசு அதை எதிர்கொண்ட முறை, அவர் வெறும் வாரிசு அல்ல; கொள்கையில் புடம்போட்டு ஜொலிக்கும் திராவிடப் பாசறையின் புதிய வளரும் நம்பிக்கை நாயகன் என்று காட்ட ஒரு வாய்ப்பளித்த உள்துறை அமைச்சகம் தொடங்கி, கடைசி காவிகள்வரை எமது நன்றி! நன்றி!! நன்றி!!!

’’ஈரோடு போனவர்கள் என்றும் நீரோடு போக மாட்டார்கள்; எதிர்நீச்சல் எங்கள் ஆற்றல் – வெற்றி பலம் காட்டும் வாடிக்கை” என்ற கலைஞரின் திராவிடப் பாரம்பரிய எங்கள் வேங்கைகளை வெளிச்சத்திற்குக் காட்டுபவர்களே, தொடரட்டும் உங்கள் தூற்றல்! வீழட்டும் ஸநாதனம்! வெல்லட்டும் திராவிடம்!!

 

The post ’’வீழட்டும் ஸநாதனம்! வெல்லட்டும் திராவிடம்..!’’ கி.வீரமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2/feed/ 0
’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது https://madrasmurasu.com/5720-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5720-2 https://madrasmurasu.com/5720-2/#respond Tue, 01 Aug 2023 10:26:01 +0000 https://madrasmurasu.com/?p=5720 “தகைசால் தமிழர்” விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர். கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது இந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டில் இருந்து தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் […]

The post ’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது first appeared on Madras Murasu.

]]>
“தகைசால் தமிழர்” விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர். கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது இந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டில் இருந்து தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

தகைசால் தமிழர் கி.வீரமணி:

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார்.

உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்”விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டமுனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஏட்டின் ஆசிரியருமான கி.வீரமணி “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

The post ’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5720-2/feed/ 0
’’நன்னன் குடியில் நானும் ஒருவன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Tue, 01 Aug 2023 05:16:31 +0000 https://madrasmurasu.com/?p=5693 சென்னை, சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.7.2023 அன்று பேசியதாவது: பேராசிரியர் நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமையாக நான் கருதுகிறேன். நீதிக்கட்சியினுடைய அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய வெள்ளுடை வேந்தர் தியாகராயருடைய பெயரில் அமைந்துள்ள இந்த தியாகராய நகரில், இந்த சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் இந்த விழா […]

The post ’’நன்னன் குடியில் நானும் ஒருவன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
சென்னை, சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.7.2023 அன்று பேசியதாவது:

பேராசிரியர் நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமையாக நான் கருதுகிறேன். நீதிக்கட்சியினுடைய அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய வெள்ளுடை வேந்தர் தியாகராயருடைய பெயரில் அமைந்துள்ள இந்த தியாகராய நகரில், இந்த சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

திராவிடர் கழகத்தின் தலைவரான ஆசிரியர் கி.வீரமணி இந்த மேடையில் இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக நானும் பங்கெடுத்திருக்கிறேன். நீதிக்கட்சியில் நுழைந்து, திராவிடர் கழகத்தில் செயல்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர் நன்னன் என்பதன் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி பொருத்தமாக அமைந்திருக்கிறது.

பேராசிரியர் நன்னன் நூற்றாண்டு விழாவை, புத்தக வெளியீட்டு விழா மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆகியவற்றோடு இணைத்து ஏற்பாடு செய்துள்ள நன்னன் குடி அமைப்புக்கு என்னுடைய வாழ்த்துகளை, நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு “அகமும் புறமும்” என்று தலைப்பு வைத்து முன்பு வெளியிட்டேன். புலவர் நன்னன், அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக, நேர்மையானவராக விளங்கியவர். அத்தகைய பெருமகனாருக்கு நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார், தலைவர் கலைஞரை போல புலவர் நன்னன் அவர்களும் 90 ஆண்டுகளை கடந்து வாழ்ந்தவர். இனப்பற்றும், மொழிப்பற்றும் இருந்த காரணத்தால்தான் இத்தனை ஆண்டுகள் பாடுபடுவதற்காக வாழ்நாளை நீட்டித்து வைக்கிறது.

வாழ்நாளெல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதுதான் முக்கியமானது. அது எல்லோராலும் முடியாது. தந்தை பெரியாரைப் போல, கலைஞரைப் போல, நன்னனைப் போல ஒரு சிலரால் தான் முடியும். இறுதி வரைக்கும் உழைத்தவர்கள் இவர்கள். இவர்களால் சும்மா இருக்கமுடியாது. இவர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களையும் சும்மா விடமாட்டார்கள்.

நன்னன் எழுதிக் கொண்டே இருந்தார். எனக்கு என்ன பெருமை என்று சொன்னால், பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கக்கூடிய புலவர் நன்னன் விரலுக்கு, விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதனை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன். அவரை பொறுத்தவரைக்கும், என்னோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வதுண்டு. அப்படி தொடர்பு கொள்கிறபோதெல்லாம் உங்கள் அறிக்கையை பார்த்தேன். உங்கள் பேச்சை படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. அதைதாண்டி, எனக்கு அறிவுரையும் பல நேரங்களில் அவர் சொல்லியிருக்கிறார்.

திடீரென்று ஒரு வாரம் அவரிடத்திலிருந்து எனக்கு ஃபோன் வரவில்லை. நானே நினைத்துக் கொண்டேன். உடல் நிலை சரியில்லை போலிருக்கிறது என்று கருதி உடனே அவரை நேரடியாக சென்று பார்த்து விசாரித்தேன். ஆமாம் என்று சொன்னார்கள். அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். அப்போதும் எனக்கு உற்சாகத்தை வழங்கினார். அப்போது அந்த நேரத்தில் முரசொலி பொங்கல் மலர் வெளியீடு நடந்தது. அந்த மலரை கொண்டு சென்று அவரிடத்தில் கொடுத்தேன். அவர் திருப்பி எனக்கு பெரியார் கணினி புத்தகத்தை கொடுத்தார்.

திடீரென்று ஒருநாள் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அறிவாலயத்திற்கு வந்தார். அனைவரையும் பார்த்துவிட்டு போகவேண்டும், உற்சாகப்படுத்தி விட்டுப் போகவேண்டும் என்பதற்காகதான் வந்தேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.

நவம்பர் மாதம் 7ம் நாள் நன்னன் மறைந்தார். மறைந்தார் என்று சொல்ல முடியாது. அவர் மறைந்த பிறகும், புத்தகங்கள் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் நன்னன் அவர்கள் வாழ்கிறார். தொடர்ந்து அவர் வாழ்வார். ஒன்றல்ல இரண்டல்ல, 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார் நன்னன். இந்த நூல்களை நன்னன் குடி அமைப்பு வெளியிட்டுள்ளது. நன்னன் குடி என்றால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, நாம் அனைவரும் நன்னன் குடியைச் சேர்ந்தவர்கள் தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு நடந்தால், செயற்குழு நடந்தால் முதல் வரிசையில் வந்து உட்கார்ந்திருப்பார். முக்கியமான புத்தக வெளியீட்டு விழா என்று சொன்னால், தலைவர் கலைஞர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று சொன்னால், அந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார். அந்த மேடைகளில் பங்கேற்று பேசியும் இருக்கிறார். எவ்வளவு நேரம் பேசினாலும், நன்னன் உரையை உற்றுக் கவனிப்பார் நம்முடைய தலைவர் கலைஞர். கழகத்தின் முப்பெரும் விழா நடக்கின்றபோதெல்லாம், பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து அதை நடத்திக் காட்டியிருக்கிறார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்தது. தலைவர் கலைஞர் அவர்களோடு, இனமானப் பேராசிரியர் அவர்களும், நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் கலந்து கொண்டார்கள். நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றினேன். நம்முடைய நன்னன் அதில் பங்கெடுத்து சிறப்பான உரையை ஆற்றினார்கள். கலைஞர் அவர்கள் எப்படி கடைசி காலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உட்கார்ந்து பேசுவாரோ, அதேபோல, நன்னன் உட்கார்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு என்பது திராவிட இயக்க வகுப்பு நடத்துவதுபோல இருக்கும்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தோம்? இப்போது நிலைமை எப்படி மாறி இருக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார் நன்னன். அந்த 100 ஆண்டு வரலாற்றை 10 நிமிடத்தில் அனைவருடைய மனக்கண் முன்னால் நிறுத்தி பேசக்கூடிய ஆற்றல் அவருக்குதான் உண்டு. இதுதான் அவரது பாணி.

அந்த விழாவில் தான் தலைவர் கலைஞர் பேசும் போது குறிப்பிட்டார்கள். ”13 வயதில் தமிழ்க் கொடி ஏந்திப் போராடியவன் இந்தக் கருணாநிதி, இன்றைக்கும், அந்தக் கருணாநிதியினுடைய பரம்பரை, கருணாநிதியுனுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இருக்கிற காரணத்தால் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க வந்து கொண்டே இருப்பார்கள்” என்று பேசினார்.

அத்தகைய கலைஞரின் பரம்பரையினராக, வழித்தோன்றல்களாக நாம் இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். கலைஞரின் வாரிசு என்றால் நான் மட்டுமல்ல, திராவிடக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள் தான்.

இந்த வழித் தோன்றல்கள்தான் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பதைப் போல, விடுதலை இயக்கத்துக்கும் வழித்தோன்றல்கள் எப்போதும் இருப்பார்கள். தனக்கென ஒரு எழுத்து நடையை, பேச்சு நடையை நன்னன் அவர்கள் வைத்திருந்தார்கள்.

பிழையின்றி எப்படி எழுத வேண்டும், பிழையின்றி எப்படி பேச வேண்டும் என்பதை கற்பிக்கும் மிகப் பெரிய ஆசானாக அவர் விளங்கினார். சென்னை தொலைக்காட்சியில் அவரது தமிழ் வகுப்புகள் 17 ஆண்டுகள் வந்துள்ளது. எந்த ஒரு தமிழாசிரியரும், தமிழ்ப் பேராசிரியரும் அடைய முடியாத பெருமை இது.

தனக்கு முன்னால் மாணவர்கள் உட்கார்ந்து கேட்பதாக நினைத்துக் கொண்டு அவர் எடுத்த வகுப்பு உண்மையில் ஆச்சரியமானது, அசத்தலானது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தனது முப்பெரும் விழாவில் நன்னன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கியது.

பெரியாரைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாள் என வாழ்ந்த தமிழ்ப் பெரியார் தான் நம்முடைய நன்னன். இந்தியாவையே கபளீகரம் செய்ய சனாதன, வர்ணாசிரம சக்திகள் துடித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத்துக்களை 21 மொழிகளில் கொண்டு வர நாம் முன்னெடுப்புகளைச் செய்து கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டுக்கு ஒரு பெரியார் இருந்ததைப் போல, மற்ற மாநிலங்களுக்கு இல்லை. எங்களுக்கு ஒரு தந்தை பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் இன்றைக்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் வந்திருக்கிறது.

சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அவர் பேசுவது நமக்கு ஒரு பிரச்சாரமாக அமைந்திருக்கிறது. அது வேறு. நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து அவரே இருக்கவேண்டும், இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்கமுடியும். நம்முடைய பிரச்சாரத்தை நாம் சிறப்பாக செய்யமுடியும். தினந்தோறும் தவறான பாடங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் பேசி வருவதே நமது கொள்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைக் கொடுத்து வருகிறது.

பேரறிஞர் அண்ணா சொன்னார்கள், ‘வாழ்க வசவாளர்கள்’ என்று அதைதான் இப்போது நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ‘எனது எதிரிகள்தான் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள்’ என்று தந்தை பெரியார் சொன்னார்கள். அத்தகைய எதிரிகளுக்கு பதில் சொல்வதற்கு நன்னன் எழுத்துகள் அதிகமாக நமக்கு பயன்படும்.

எப்படி எழுத வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும் கற்று கொடுத்தார் நம்முடைய நன்னன் அவர்கள். வாழ் நாளெல்லாம் கொள்கைக்காக வாழ்ந்தார். கொள்கையின் அடையாளமாகவே வாழ்ந்தார். தனது குடும்பத்தையையும், கொள்கையையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

மரணம் நெருங்கும் போது அவர் சொன்னார், எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. நான் நிறைவாழ்க்கை வாழ்ந்து விட்டேன் என்று சொன்னார். தனக்குப் பின்னால் தனது குடும்பம், தனது செயலைத் தொடர்ந்து செய்ய வழிகாட்டினார்.

நன்னன் காலத்தைப் போலவே, புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. சமூக சேவை தொடர்கிறது. விழாக்கள் நடக்கின்றன. நன்னன் அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கின்ற காரணத்தால், அந்தப் பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் சார்பில் நன்னன் அவர்களுக்குப் புகழ் சேர்த்திடும் வகையில், நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நன்னன் குடும்பத்தினரோ, உறவினர்களோ, வேறு யாரும் கோரிக்கைகளை இந்த நேரத்தில் வைக்கவில்லை. யாரும் வைக்காமல் இந்த கோரிக்கையை நான் செய்கிறேன் என்று சொன்னால், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்.

நன்னன் அவர்கள் காலமாகவில்லை, அவர் காலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

நன்னன் புகழ் வாழ்க!
நன்னன் குடி செழிக்கட்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

The post ’’நன்னன் குடியில் நானும் ஒருவன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/#respond Mon, 03 Jul 2023 03:44:14 +0000 https://madrasmurasu.com/?p=4681 ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன?’’ என்பது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு 1.7.2023 அன்று பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு: குற்றாலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், 44 ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், இருபால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. ‘திராவிட […]

The post ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன?’’ என்பது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு 1.7.2023 அன்று பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு:

குற்றாலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், 44 ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், இருபால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.

‘திராவிட மாடல்’ ஆட்சி, பகுத்தறிவு, சமூகநீதி இவற்றையெல்லாம் மய்யப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பயிற்சி முகாம் ஓர் அரிய வாய்ப்பு. ஏராளமான மாணவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 44 ஆம் ஆண்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்; இங்கே வரும்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு பிறகு திரும்பப் பெற்றது குறித்து தங்கள் கருத்து என்ன?

கி.வீரமணி: ஏற்கெனவே நான் என்னுடைய அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இதுவரை எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட் டிற்கு வந்திருந்தாலும்கூட, – ‘திராவிட மாடல்’ ஆட்சி இங்கே சிறப்பாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அனுப்பப்பட்டவராக இருக்கிறார் இந்த ஆளுநர்.

ஏனென்றால், அவர் வந்த நாள் முதல் இந்த நாள் வரை முழுக்க முழுக்க ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்துகிறார். அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக – அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகவே நடந்துகொள்கிறார். அரசமைப்புச் சட்டத்தில், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதைப்பற்றிக்கூட புரிந்து கொள்ளாமல், ஆளுநர் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இஷ்டப்படி நடந்துகொள்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் – அவர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உடனுக்குடன் பரிசீலித்து அனுப்பவேண்டும் என்று மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப்போல இங்கு நடக்காமல், திட்டமிட்டே இவர் வேண்டுமென்றே 13 மசோதாக்களை கையிலே வைத்திருப்பது மட்டுமல்ல – அண்மையில் நடைபெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு – மற்றவை எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

வழக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது – அவருடைய ரிமாண்டை நீட்டித்திருக்கிறார்கள்; மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது – அதனை அனுமதித்திருக்கிறது உயர்நீதிமன்றம். இந்தச் சூழ்நிலையில், ஒருவர்மீது வழக்குப் போடுவதினாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. தீர்ப்பு வரவேண்டும்; அந்தத் தீர்ப்பில் இரண்டாண்டுகளுக்குமேல் தண்டனை கொடுத்தால் தான், ஒருவரின் பதவியைப் பறிக்க முடியும். மற்ற மாநிலங்களில் இதுபோன்று நடந்திருக்கிறது. ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சினையில் அப்படியில்லை.

யாரை அமைச்சராகப் போடுவது என்பது முதல மைச்சருடைய தனி உரிமை; ஆங்கிலத்தில் அதற்கு இருக்கின்ற சொல் Prerogative – ”It is a Prerogative of the Chief Minister of any State. To whom he should appoint Minister and advice of the Chief Minister” என்ற வார்த்தைதான் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

முதலமைச்சருடைய அறிவுரைப்படி, அவர் யாரைப் பரிந்துரை செய்கிறாரோ, அதில் கையெழுத்துப் போடவேண்டியதுதான் ஒரு ஆளுநருடைய வேலை. அரசமைப்புச் சட்டத்தின் 163 ஆவது பிரிவில் மிகத் தெளிவாக இருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்திருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர்களை நியமிப்பது என்பது காலங்காலமாக இருந்திருக்கிறது. ஏன்? கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜ கோபாலாச்சாரியார், இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார்.

இலாகா இல்லாத அமைச்சர் என்று சொன்னால், அவருக்கு வேலை இல்லை என்று அர்த்தம் இல்லை. எந்த இலாகாவில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்வதற்குப் பரிபூரண சுதந்திரம் அவருக்கு உண்டு. அப்படி இருக்கக்கூடிய சூழலில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மாற்றுவதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது. அதுகுறித்து நான் எழுதிய அறிக்கையில், அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் நீங்கள் சொல்கிறீர்கள்? என்று கேட்டிருந்தேன்.

ஆளுநரின் அறிவிப்பைக் கண்டித்து, நீதிமன்றத் திற்குப் போய் நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் என்று முதலமைச்சர் சொல்லிவிட்டார். மக்கள் மன்றம் கொதித்தெழுந்துவிட்டது; அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குப் போனால் என்னாகும்? ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் இந்த ஆளுநர் கண்டிக்கப்பட்டு இருக்கிறார், பேரறிவாளன் வழக்கில்.

”உங்களுடைய எல்லையைத் தாண்டி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்; உங்கள் அதிகார எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள்” என்று தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே, ஆளுநருடைய நிலைப்பாடு, அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

அதைவிட வேடிக்கை என்னவென்றால், தமிழ் நாட்டுத் தலைவர்கள் – ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அத்துணைத் தலைவர்களும் ஆளுநரைக் கண்டித்து அறிக்கைகளைக் கொடுத்தவுடன், ஆளுநர் உணர்ந்தாரோ என்னவோ – அதனுடைய ஆபத்தை உள்துறை அமைச்சர் தெரிந்து கொண்டிருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்திற்கு வழக்குப் போனால், அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டதினால், நான்கு மணிநேரத்தில் தமிழ் நாட்டு ஆளுநரின் அறிவிப்புத் திரும்பப் பெறப்பட்டது.

இதுபோன்று முன்யோசனையற்ற, தெளிவற்ற நிலையில் அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர், இப்பொழுது என்ன சொல்கிறார், இந்திய அரசு வழக்குரைஞருடன் ஆலோசனை செய்யவிருக்கிறேன் என்கிறார்.

சட்ட ஆலோசனை கேட்ட பிறகு, செய்வதுதான் மிகவும் முக்கியம். ”வண்டிக்கு முன்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதா?” ”ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு!”

தமிழ்நாட்டு ஆளுநர் எல்லாவற்றிலும் ஆத்திரமாக இருக்கிறார்; வள்ளலாரை சனாதனி என்று சொல்கிறார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். ஆரிய – திராவிடத்திற்கு விளக்கம் சொல்கிறார். இவர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் – போட்டி அரசு நடத்தவேண்டும்? என்று துடிக்கிறார்.

ஆகவே, தமிழ்நாடு முழுக்க வைக்கவேண்டிய கோரிக்கை தமிழ்நாடு ஆளுநர் உடனே ராஜினாமா செய்யவேண்டும்; அவருக்கு ஜனநாயக உணர்வு இருந்தால், ராஜினாமா செய்வார், நான் தவறு செய்து விட்டேன் என்று. அப்படி அவர் செய்வதற்குத் தயாராக இல்லை யென்றால், அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

”ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்” என்கிற கோரிக்கை – தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும் – அதற்கான இயக்கத்தை கட்டுவோம். இதுதான் இப்பொழுது மிகவும் முக்கியம்.

இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

The post ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/#respond Fri, 02 Jun 2023 13:04:30 +0000 https://madrasmurasu.com/?p=3233 சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (1.6.2023), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெற்றுக் கொண்டார். தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர். எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது: திராவிட பல்கலைக்கழகத்தின் […]

The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.

]]>
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (1.6.2023), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெற்றுக் கொண்டார்.

தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர்.

எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது:

திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார் அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம்.

தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்கு பின் விடுதலையை விடாமல் நடத்தியது. மேலும், எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்கு பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களை பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில்மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை.

பெரியாருக்கு பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளை சொல்ல வைத்தது ஆசிரியரின் சாதனை. அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை.

தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும் விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.

தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி இருந்திருக்கிறார். இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார்.

இந்த தொகுதியில் முதல் செய்தியாக எனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களை பற்றியது. அது 1936 -ல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை பற்றி விடுதலையில் செய்தி வந்திருக்கிறது. அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. எனவே, இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும். குறிப்பாக 1927-ல் பார்ப்பனர்களுக்கு விரோதமாக நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியிடம் பெரியார் சொன்னார். 1947 இல் அதுவே நடந்தது.

1945-இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பாகவே விடுதலையில் ஹிட்லர் தற்கொலை தான் செய்து கொள்வார் என்று தலைப்பு செய்தி வந்தது. இப்படியாக தொடர்ந்து தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற தரிசனத்தை பெற விடுதலையின் ஒவ்வொரு தொகுதியும் வெளிவர வேண்டும். மிகப்பெரிய போர்வாளாய் மட்டுமல்லாமல், கேடயத்தையும் சேர்த்து நமக்காக வழங்கி இருக்கக்கூடிய ஆசிரியருக்கு நன்றி.

இவ்வாறு, எழுத்தாளர் ப.திருமாவேலன் பேசினார்.

The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/feed/ 0
’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/#respond Fri, 02 Jun 2023 12:38:12 +0000 https://madrasmurasu.com/?p=3227 விடுதலை 89-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விடுதலை களஞ்சியம் தொகுதி (1) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 01.06. 2023 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார். விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான தோழர்கள் […]

The post ’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
விடுதலை 89-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விடுதலை களஞ்சியம் தொகுதி (1) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 01.06. 2023 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார்.

விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

அறிவுப் பெட்டகமாக 1936 இல் தொடங்கி விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள் அனைத்தையும் தொகுத்து இளம் தலைமுறையினருக்கு அருட்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். இது போன்ற பணிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும் அனைத்தையும் ஆவணப்படுத்துதல், தொலைநோக்கு பார்வையோடு அதனை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது ஆசிரியர் அவர்களது மகத்தான பணிகள்.

இளையோர்களே வியக்கும் வண்ணம் துடிப்போடும், முனைப்போடும் ஆசிரியர் கி.வீரமணி எப்படி இந்த பணியை செய்ய முடிகிறது என்பதே நம்மை சிந்திக்க தூண்டுகிறது; ஊக்கத்தை, உந்துதலை தருகிறது. பகுத்தறிவுக் கருத்துகளை தாங்கிய இதழை நடத்துவது மிக கடினமான காரியம். அதனை தொடர்ந்து நடத்தி, புதிய இளைய தலைமுறையினருக்கு பொறுப்புணர்வோடும், அவர்களை அறிவியல் மனப்பான்மையோடு வளர்த்தெடுக்கும் பணியாக இதை செய்திருக்கிறார்.

வரலாற்றில் பல திரிபுகளை, அவதூறுகளை, வதந்திகளை எதிர் தரப்பினர் பரப்பக்கூடிய சூழ்நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு பாதுகாப்பு; மிகப்பெரிய நல்வாய்ப்பு. 89 ஆண்டுகால விடுதலைக்கு 61 ஆண்டு ஆசிரியராக இருந்து உலக சாதனையை ஆசிரியர் படைத்திருக்கிறார். இந்த சாதனைக்காகவே தனியாக ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆய்வரங்கமே நடத்த வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமானது. மக்களவை தலைவர்கள் முன் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை நிச்சயம் வைக்க வேண்டும். செங்கோல் வைக்க வேண்டிய இடத்தில் அரசமைப்புச் சட்ட முகவுரை இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக தமிழர் தலைவரும், தளபதி அவர்களும், ஜனநாயக சக்திகளும் இருக்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பெரியார் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார். இந்தியா முழுவதும் பரவ வேண்டிய கருத்து பெரியார் கருத்தாக இருக்கிறது. பிஜேபி கட்டியமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரமல்ல பிராமண ராஷ்டிரா. தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களத்திலும் மூன்றாவது குழலாக விடுதலைச் சிறுத்தைகள் உடன் இருக்கும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

The post ’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/feed/ 0