acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ஜாதிவாரி கணக்கெடுப்பு வழிகாட்டும் பீகார் மாநிலம்..! விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>பீகார் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்ச்சிகளில், இரு கட்சிகளும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் பலன்கள் பற்றியும், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் ஜனநாயகம் மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருப்பது மற்றும் மக்களின் முன்னேற்றத்தை மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்நோக்கங்களுடன் எப்படி முடக்கினர் என்றும் மக்களிடையே பரப்பத்துவங்கியுள்ளனர்.
2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஜே.டி.யூ. அதன் மாநிலம் தழுவிய திட்டமான “கர்பூரி சர்ச்சா” (கர்பூரி தாக்கூரின் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள்), ஆர்.ஜேடி. மூலம் அதன் “அம்பேத்கர் பரிச்சார்ச்சா” (அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள்) மூலம் இணைத்துள்ளது. பா.ஜ.க ஆட்சியில் சிறுப்பான்மையினர் இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பினருக்கு எதிராகக் கூறப்படும் பாகுபாடுகளை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளது.
மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதை நிறைவேற்றியதில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பங்கை முன்னிலைப்படுத்தவும், ஜே.டி.யூ மாநிலம் முழுவதும் “முதலமைச்சருக்கு நன்றி” தெரிவிக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. முதல் நிகழ்ச்சி பாட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை வரும் நாட்களில் மாவட்ட அளவில் கொண்டு செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியதற்காக முதலமைச்சருக்கு கட்சித் தலைவர் உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் நன்றி தெரிவித்தனர். கர்பூரி தாக்கூர் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்; அவரின் உரிமை முழக்கத்தை நிதிஷ்குமார் அதிகாரத்தின் மூலம் நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கிறார்.
இதனை மக்களிடையே கொண்டு செல்ல அனைத்து மாவட்ட அளவில், மாநிலம் முழுவதும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. “இந்த நிகழ்வுகள் மூலம், நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுப்போம்” என்று ஜே.டி.யூ. செய்தித் தொடர்பாளர் ரவீந்திர பிரசாத் சிங் கூறினார்.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் முன்னோடியாகக் கருதப்படும் சமூகநீதிப் போராளியும் பீகார் மேனாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூரின் பெயர் சூட்டப்பட்ட, “கர்பூரி சர்ச்சாஸ்” ஆகஸ்ட் மாதம் முதலே தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினரான கர்பூரி தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்களின் கீழ் ஏழு தனி அணிகளை உருவாக்கியுள்ளனர். பீகாரின் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல் தொடரை 2024 ஜனவரி 24-க்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது கர்பூரி தாக்கூரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும். கர்பூரி தாகூர் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டிலும் பங்கு கொண்ட சமூகநீதியாளர் ஆவார்.
“இந்த நிகழ்வுகளில் நாங்கள் ஏற்கெனவே சமூக நீதிக்கான பாதையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், சமூகத்தில் பின்தள்ளப்பட்ட பிரிவினருக்காக நிதிஷ்குமார் தலைமையிலான அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது பற்றியும் பேசி வருகிறோம். இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் அதனால், மக்களுக்குச் சேரும் பலன்களையும் திட்டத்தில் சேர்த்துள்ளோம். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிராக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மோடி அரசாங்கம் எவ்வாறு முடக்கியது என்பதையும் நாங்கள் மக்களுக்கு நினைவூட்டுகிறோம்” என்று சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது கட்சி துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்கிறது, இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதிஷ்குமாரின் பணிகளை பட்டியலிடுவதைத் தவிர, ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் உதவித்தொகை மற்றும் பிற திட்டங் களை நிறுத்தியதன் மூலம் அரசியல் ரீதியாக அவமானப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறது. துணை முதலமைச்சரும் ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஸ்வி யாதவும் ஆதரிக்கும் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது முன்வைக்கிறது.
ஆர்.ஜே.டி. கிராமசபைகளை ஏற்பாடு செய்து, அதன் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசி வருகிறது. “இந்தக் கூட்டங்களில் நாங்கள் சமூக நீதியைப் பற்றி பேசுகிறோம் – மிகவும் பின்தங்கிய வகுப்பினரை எப்படி மய்ய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவது. நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எப்படி முடக்கி வருகிறது, எப்படி ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கொண்டு வந்தோம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கிறோம்” என்று பீகார் ஆர்.ஜே.டி. செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்ஜெய் திவாரி கூறினார்.
விரைவில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் கலந்தா லோசனை செய்து இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களின் சமூகநீதி முழக்கத்தைக் கொண்டு செல்ல தேசிய அளவில் விரைவில் குழு ஒன்று உருவாக்கப்படும் என்று நிதீஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளம் மற்றும் லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.
இந்த வகையில் இந்தியாவுக்கே பீகார் மாநிலம் வழி காட்டுகிறது – வரவேற்கிறோம் – மற்ற மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
The post ஜாதிவாரி கணக்கெடுப்பு வழிகாட்டும் பீகார் மாநிலம்..! விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’விடுதலை பாகம் 1, வாத்தி, மாமன்னன், ஆகஸ்ட் 16,1947’’ ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியல் வெளியானது first appeared on Madras Murasu.
]]>2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு. கிரிஷ் காசரவல்லி தலைமையிலான குழு 2023-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 – Everyone is a Hero) மலையாள திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. கிரிஷ் காசரவல்லி, கேரளாவில் நடைபெற்ற இயற்கை பேரிடரை மையப்படுத்தி மனிதமே முக்கியம் எனும் கருத்தை ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், ஒட்டு மொத்த உலகத்திற்கும் இக்கருத்து பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டரக்கரா கூறியதாவது: “பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை உலகெங்கிலும் நாம் காண்கிறோம். தன்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று பூமித்தாய் மன்றாடுகிறாள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2018ம் ஆண்டு கேரள வெள்ளம், 2023ம் ஆண்டு இமாச்சல், உத்தரகண்ட் பேரழிவு மற்றும் லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு போன்ற இயற்கை சீற்றங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி பணம் பறிபோனது. இவற்றில் இருந்து பாடம் கற்று, உலகைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ இதைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களையும் திறம்பட பேசும் ஒரு சிறந்த படமாகும்.”
ஆஸ்கார் விருது 2023 க்கான தேர்வுக் குழுவின் பட்டியல்:
1. திரு. கிரிஷ் கசரவல்லி (தலைவர்) – பெங்களூர் – இயக்குனர்
2. திரு. ஜோஷி ஜோசப் – கொல்கத்தா – இயக்குனர்
3. செல்வி. சதரூபா சன்யால் – கொல்கத்தா – தயாரிப்பாளர் , இயக்குனர் , நடிகை
4. திரு. எம். வி . ரகு – ஹைதெராபாத் – இயக்குனர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர்
5. செல்வி. மஞ்சு போரா – குவஹாத்தி – இயக்குனர், எழுத்தாளர்
6. திரு. சந்தீப் சேனன் – கொச்சி – தயாரிப்பாளர்
7. திரு. முகேஷ் மெஹ்தா – சென்னை – தயாரிப்பாளர்
8. திரு. ஆர். மாதேஷ் – சென்னை – இயக்குனர், எழுத்தாளர்
9. திரு. எஸ் . விஜயன் – சென்னை – ஸ்டண்ட் மாஸ்டர்
10. திரு. ஸ்ரீகர் பிரசாத் – சென்னை – எடிட்டர்
11. செல்வி. வாசுகி பாஸ்கர் – சென்னை – கோஷ்டியும் டிசைனர்
12. செல்வி. தினேஸ் கால்வாசிவால – மும்பை – தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர்
13. திரு. ராகுல் போலே – வதோதரா – இயக்குனர், எழுத்தாளர், எடிட்டர்
14. திரு. ஷகாஜீட் டே – டெல்லி – தயாரிப்பாளர், எழுத்தாளர்
15. திரு. அசோக் ரானே – மும்பை – இயக்குனர், எழுத்தாளர், எடிட்டர்
16. திரு. என் . ஆர் . நஞ்சுண்டே கவுடா – பெங்களூர் – இயக்குனர்
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக பரிசீலக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் – 2023
1 பாலகம் – தெலுங்கு
2 தி கேரளா ஸ்டோரி – ஹிந்தி
3 12th பெயில் – ஹிந்தி
4 ஸ்விகடோ – ஹிந்தி
5 ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி – ஹிந்தி
6 தி ஸ்டோரிடெல்லேர் – ஹிந்தி
7 மியூசிக் ஸ்கூல் – ஹிந்தி
8 Mrs. சட்டர்ஜீ vs நோர்வே – ஹிந்தி
9 விடுதலை பார்ட் 1 – தமிழ்
10 குஹும்மர் – ஹிந்தி
11 தசரா – தெலுங்கு
12 காதர் 2 – ஹிந்தி
13 வால்வி – மராத்தி
14 மாமன்னன் – தமிழ்
15 பாப்லயோக் – மராத்தி
16 தி வாக்சின் வார் – ஹிந்தி
17 சார் – தெலுங்கு
18 வாத்தி – தமிழ்
19 அபி டொஹ் சப் பகவான் பரோஸ் – ஹிந்தி
20 விருபாக்ஷா – தெலுங்கு
21 2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ – மலையாளம்
22 ஆகஸ்ட் 16, 1947 – தமிழ்
தமிழ் படங்கள் (4)
விடுதலை பாகம் 1
வாத்தி
மாமன்னன்
ஆகஸ்ட் 16,1947
தெலுங்கு படங்கள் (4)
பாலகம்
தசரா
சார்
விருபாக்ஷா
ஹிந்தி படங்கள் (11)
தி கேரளா ஸ்டோரி
12 th பெயில்
ஸ்விகடோ
ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி
தி ஸ்டோரி டெல்லர்
மியூசிக் ஸ்கூல்
Mrs . சட்டர்ஜி vs நார்வே
குஹூம்மர்
காதர் 2
தி வாக்சின் வார்
அபி டொஹ் சப் பகவான் பரோஸ்
மலையாள படங்கள் (1)
2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ
மராத்தி படங்கள் (2)
வால்வி
பாப்லயோக்
The post ’’விடுதலை பாகம் 1, வாத்தி, மாமன்னன், ஆகஸ்ட் 16,1947’’ ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியல் வெளியானது first appeared on Madras Murasu.
]]>The post ’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டில் இருந்து தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
தகைசால் தமிழர் கி.வீரமணி:
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார்.
உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
“தகைசால் தமிழர்”விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டமுனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஏட்டின் ஆசிரியருமான கி.வீரமணி “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
The post ’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது first appeared on Madras Murasu.
]]>The post ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயது வரை பகவத் கீதை, ராமாயணம் போன்ற மத நூல்களைப் படித்தல், சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது.
இந்த நிலையில் கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ’’கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உள்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது” என்று கூறினார். சுந்தரகாண்டம் என்பது ராமாயணத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை கூறும் சுந்தர காண்டம் என்ன கூறுகிறது என்றால், “தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது; இவர்களைக் கண் காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது” (ராமாயணம் சுந்தரகாண்டம் அத்.3) ராமாயணம் சுந்தர காண்டத்தில் உள்ள ஸ்லோகம்தான் இது. ஒருவேளை இதற்குத்தான் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களைப் படிக்கச் சொல்கிறாரோ?
வேதங்களைப் படித்ததற்காக சம்பூகனை ராமன் கொலை செய்தான். இதனை இன்றும் சத்சங்கம் என்ற பெயரில் வடக்கே சாமியார்கள் கூறிவருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, “மனிதர்கள் அவரவர் வேலைகளைச் செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர். வேதம் படிப்பது, கற்றுக்கொடுப்பது முதல்வருணத்தாரின் பணி, இந்தப்பணியை ஒரு சத்திரியன் செய்தால் நாட்டைப் பாதுகாப்பது யார்? நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகாதா? அதே போல் ஒரு வைசியன் வேதம் படித்தால் வணிகம் குழம்பி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விடும். உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும். அதே போல் வேதத்தை ஒரு சூத்திரன் படித்தால் மேலே கூறிய மூன்று வருணத்தாருக்கான சேவைகளைச் செய்வது யார்? இதனால் ஒட்டு மொத்த நாட்டின் நிர்வாகமே கெட்டுப் போகும். ஆகையால் தான் சூத்திரனான சம்புகன் அவனது வேலையைப் பார்க்காமல், அவனைச் சேர்ந்தவர்களையும் வேலையைப் பார்க்க விடாமல் வேதம் படித்தான்; சம்பூகன் வேதம் படித்து ஒன்றுமே செய்யப்போவதில்லை, ஆனால் அவனால் இதர வேலைகள் தடைபடும், இதனால் தான் பிரபு ராமர் ஒரு எச்சரிக்கை விடுத்தார்” என்று கூறுகிறார்கள். இதனையே தமிழ்நாட்டில் கூட சில குடுமி பிரசங்கிகள் கதாகாலட்சேபத்தில் கூறியுள்ளனர்.
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் கூறும் சுந்தரகாண்டத்தில் பெண்களையும் சுதந்திரமாக விடக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதே – அதன்படி பார்த்தால் ஒரு பெண்ணான தமிழிசை சவுந்தரராசன் டாக்டர் ஆனது எப்படி? சுந்தரகாண்டக் கூற்றுக்கு எதிரானது தானே!
மதம் தலைக்கேறினால் நாம் என்ன நினைக்கிறோம் – எங்கே போகிறோம் – அதில் முரண்பாடு முண்டாசு கட்டி நிற்கிறதே என்பதெல்லாம் தெரிவதில்லையா?
சுந்தரகாண்டத்தைப் படிக்கச் சொல்லும் டாக்டர் தமிழிசை, அவசரப்பட்டு டாக்டர் பட்டத்தையும் ஆளுநர் பதவியையும் துறந்து போய் விட வேண்டாம்.
தமிழிசை போன்ற பெண்கள் டாக்டராக வேண்டும், பெரும் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை – திராவிடர் கழகத்தின் செயல்பாடு!
ஆனால் இவர்கள் வேறு திசைக்கு ஓடுவது ஏன்?
The post ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.
]]>தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது:
திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார் அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம்.
தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்கு பின் விடுதலையை விடாமல் நடத்தியது. மேலும், எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்கு பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களை பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில்மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை.
பெரியாருக்கு பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளை சொல்ல வைத்தது ஆசிரியரின் சாதனை. அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை.

தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும் விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.
தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி இருந்திருக்கிறார். இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார்.
இந்த தொகுதியில் முதல் செய்தியாக எனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களை பற்றியது. அது 1936 -ல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை பற்றி விடுதலையில் செய்தி வந்திருக்கிறது. அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. எனவே, இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும். குறிப்பாக 1927-ல் பார்ப்பனர்களுக்கு விரோதமாக நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியிடம் பெரியார் சொன்னார். 1947 இல் அதுவே நடந்தது.
1945-இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பாகவே விடுதலையில் ஹிட்லர் தற்கொலை தான் செய்து கொள்வார் என்று தலைப்பு செய்தி வந்தது. இப்படியாக தொடர்ந்து தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற தரிசனத்தை பெற விடுதலையின் ஒவ்வொரு தொகுதியும் வெளிவர வேண்டும். மிகப்பெரிய போர்வாளாய் மட்டுமல்லாமல், கேடயத்தையும் சேர்த்து நமக்காக வழங்கி இருக்கக்கூடிய ஆசிரியருக்கு நன்றி.
இவ்வாறு, எழுத்தாளர் ப.திருமாவேலன் பேசினார்.
The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.
]]>The post ’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
அறிவுப் பெட்டகமாக 1936 இல் தொடங்கி விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள் அனைத்தையும் தொகுத்து இளம் தலைமுறையினருக்கு அருட்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். இது போன்ற பணிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும் அனைத்தையும் ஆவணப்படுத்துதல், தொலைநோக்கு பார்வையோடு அதனை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது ஆசிரியர் அவர்களது மகத்தான பணிகள்.

இளையோர்களே வியக்கும் வண்ணம் துடிப்போடும், முனைப்போடும் ஆசிரியர் கி.வீரமணி எப்படி இந்த பணியை செய்ய முடிகிறது என்பதே நம்மை சிந்திக்க தூண்டுகிறது; ஊக்கத்தை, உந்துதலை தருகிறது. பகுத்தறிவுக் கருத்துகளை தாங்கிய இதழை நடத்துவது மிக கடினமான காரியம். அதனை தொடர்ந்து நடத்தி, புதிய இளைய தலைமுறையினருக்கு பொறுப்புணர்வோடும், அவர்களை அறிவியல் மனப்பான்மையோடு வளர்த்தெடுக்கும் பணியாக இதை செய்திருக்கிறார்.
வரலாற்றில் பல திரிபுகளை, அவதூறுகளை, வதந்திகளை எதிர் தரப்பினர் பரப்பக்கூடிய சூழ்நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு பாதுகாப்பு; மிகப்பெரிய நல்வாய்ப்பு. 89 ஆண்டுகால விடுதலைக்கு 61 ஆண்டு ஆசிரியராக இருந்து உலக சாதனையை ஆசிரியர் படைத்திருக்கிறார். இந்த சாதனைக்காகவே தனியாக ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆய்வரங்கமே நடத்த வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமானது. மக்களவை தலைவர்கள் முன் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை நிச்சயம் வைக்க வேண்டும். செங்கோல் வைக்க வேண்டிய இடத்தில் அரசமைப்புச் சட்ட முகவுரை இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக தமிழர் தலைவரும், தளபதி அவர்களும், ஜனநாயக சக்திகளும் இருக்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பெரியார் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார். இந்தியா முழுவதும் பரவ வேண்டிய கருத்து பெரியார் கருத்தாக இருக்கிறது. பிஜேபி கட்டியமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரமல்ல பிராமண ராஷ்டிரா. தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களத்திலும் மூன்றாவது குழலாக விடுதலைச் சிறுத்தைகள் உடன் இருக்கும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
The post ’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>