acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.
]]>“முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார்.

அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.
கன்னியாகுமரி முக்கோணப் பூங்கா
அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல் 05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக முத்தமிழ்த்தேர் வருகை
04.11.2023 -கன்னியாகுமரி
05:11.2023 – திருநெல்வேலி
06.11.2023 -தூத்துக்குடி
07.112023 – விருதுநகர்
08.11.2023 – தேனி
09.11.2023 – மதுரை
10.11.2023 – மதுரை
11.11.2023 – இராமநாதபுரம்
12.11.2023 – தீபாவளி விடுமுறை
13.11.2023- புதுக்கோட்டை
14.11.2023- சிவகங்கை
15.11.2023 – நாகப்பட்டினம்
16.11.2023 – மயிலாடுதுறை
17.11.2023 – திருவாரூர்
18.11.2023 – தஞ்சாவூர்
19.11.2023 – திருச்சிராப்பள்ளி
20.11.2023 – திண்டுக்கல்
21.11.2023 – கோயம்புத்தூர்
22.11.2023 – திருப்பூர்
23.11.2023 – ஈரோடு
24.11.2023 – கரூர்
25.11.2023 – நாமக்கல்
26.11.2023 – சேலம்
27.11.2023 – தருமபுரி
28.11.2023 – கிருஷ்ணகிரி
29.11.2023 – திருப்பத்தூர்
30.11.2023 – திருவண்ணாமலை
01.12.2023 – விழுப்புரம்
02.12.2023 – செங்கல்பட்டு
03.12.2023 – காஞ்சிபுரம்
04.12.2023 – சென்னை

The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.
]]>The post ’’வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம் first appeared on Madras Murasu.
]]>நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
The post ’’வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ”மதுரையை அலங்கரிக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்..!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் first appeared on Madras Murasu.
]]>கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூபாய் 60 கோடி மதிப்பில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் ஏற்ப பல புத்தகங்கள் மற்றும் படிப்பதற்கு ஏற்ற வசதிகளுடன் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
1824 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சதுரகராதி நூலின் முதல் பதிப்பை கொண்டுள்ள சிறப்பை பெற்றுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் அமைப்பு
கலைஞர் நூற்றாண்டு நூலகம் 8 தளங்களை கொண்டு அமைக்கப்பட்டது.
அடித்தளத்தில் வாகனம் நிறுத்தும் இடமாகவும் தரைத் தளத்தில் வரவேற்பு அரங்கம், அறிவியல் கலைக்கூடம், மாநாட்டு கூடம், தமிழர் பண்பாடு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு என சகல வசதிகளை கொண்டுள்ளது.
முதலாம் தளம் முதல் ஆறாம் தளம் வரை அனைத்து பிரிவுகளின் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை இலவசமாக படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் மாவட்டத்திற்கு பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.
நூலகத்தின் சிறப்புகள்:
* 2.7 ஏக்கர் பரப்பளவு
* 2 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவு
* 7 தளங்கள்
* 3.3 லட்சம் நூல்கள்
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வடிவமைப்பு
* முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூலகம்
* மாநாட்டு அரங்கம்
* பலவகை பயன்பாட்டு அரங்கம்
* Koha நூலக மேலாண்மை
* மென்பொருள் தொழில்நுட்பம்
* குழந்தைகள் பிரிவு
* சிறார் அறிவியல் கூடம்
* பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலி நூல் ஸ்டுடியோ
* மின்னுருவாக்கப் பிரிவு
* கணினி நூற்பட்டி (OPAC)
* RFID தொழில் நுட்பம்
* சிசிடிவி

ஹைலைட் இதுதான்..!
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து நேரில் தத்ரூபமாக பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரத்யோக அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசி நெகிழந்தனர். இதற்காகவே, அங்குள்ள உள்ள சோபாவில் அமர்வதன் மூலம், அங்குள்ள உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போல் காட்சி தெரியும். நேரில் கருணாநிதியுடன் சகஜமாக அமர்ந்து பேசுவதைபோல் இருக்கிறது. அதாவது, முதல் முதலாக இன்றைக்கு நூலகம் திறப்பு விழாவில் அந்த இடத்தில் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இயல்பாக கை நீட்டி கருணாநிதியுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தார். அருகில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ வைத்தது.
– கோ. தீபா புவனேஸ்வரி
The post ”மதுரையை அலங்கரிக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்..!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் first appeared on Madras Murasu.
]]>