மதுரை பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் ரூ. 206 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூபாய் 60 கோடி மதிப்பில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் ஏற்ப பல புத்தகங்கள் மற்றும் படிப்பதற்கு ஏற்ற வசதிகளுடன் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
1824 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சதுரகராதி நூலின் முதல் பதிப்பை கொண்டுள்ள சிறப்பை பெற்றுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் அமைப்பு
கலைஞர் நூற்றாண்டு நூலகம் 8 தளங்களை கொண்டு அமைக்கப்பட்டது.
அடித்தளத்தில் வாகனம் நிறுத்தும் இடமாகவும் தரைத் தளத்தில் வரவேற்பு அரங்கம், அறிவியல் கலைக்கூடம், மாநாட்டு கூடம், தமிழர் பண்பாடு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு என சகல வசதிகளை கொண்டுள்ளது.
முதலாம் தளம் முதல் ஆறாம் தளம் வரை அனைத்து பிரிவுகளின் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை இலவசமாக படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் மாவட்டத்திற்கு பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.
நூலகத்தின் சிறப்புகள்:
* 2.7 ஏக்கர் பரப்பளவு
* 2 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவு
* 7 தளங்கள்
* 3.3 லட்சம் நூல்கள்
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வடிவமைப்பு
* முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூலகம்
* மாநாட்டு அரங்கம்
* பலவகை பயன்பாட்டு அரங்கம்
* Koha நூலக மேலாண்மை
* மென்பொருள் தொழில்நுட்பம்
* குழந்தைகள் பிரிவு
* சிறார் அறிவியல் கூடம்
* பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலி நூல் ஸ்டுடியோ
* மின்னுருவாக்கப் பிரிவு
* கணினி நூற்பட்டி (OPAC)
* RFID தொழில் நுட்பம்
* சிசிடிவி

ஹைலைட் இதுதான்..!
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து நேரில் தத்ரூபமாக பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரத்யோக அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசி நெகிழந்தனர். இதற்காகவே, அங்குள்ள உள்ள சோபாவில் அமர்வதன் மூலம், அங்குள்ள உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போல் காட்சி தெரியும். நேரில் கருணாநிதியுடன் சகஜமாக அமர்ந்து பேசுவதைபோல் இருக்கிறது. அதாவது, முதல் முதலாக இன்றைக்கு நூலகம் திறப்பு விழாவில் அந்த இடத்தில் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இயல்பாக கை நீட்டி கருணாநிதியுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தார். அருகில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ வைத்தது.
– கோ. தீபா புவனேஸ்வரி

