ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தோருக்கு ’டெட்’ (TET) எனப்படும் ஆசியர் தகுதி போட்டி தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிக்கான வழிகாட்டும் மையங்களில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றது.
அங்கு, இப்பபயிற்சியை திறன்மிக்க பயிற்றுநர்கள் நடத்தி வருகிறார்கள். அதனுடன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பாட குறிப்பு மற்றும் புத்தகங்கள் போன்றவற்றின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாய்ப்பினை பெற மாவட்டம் தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற வேண்டும். கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்காக பயன்பெறும் வகையில் (https://tamilnaducareersrvices.tn.gov.in/)
என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து கொண்டும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
அலைபேசி வாயிலாக பயன்படுத்த அலைபேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. https://tamilnaducareersrvicestngov.in/ இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வருகின்ற டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அறிவிப்பானது வெளியிடப்படும். மேலும் இதன் விவரங்களை தெரிந்து கொள்ள http://www.trbtn.nic.in என்ற இணயதளத்தை அணுகலாம்.
இவ்வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதிகள் பின்வருமாறு:
தாள் -1
1. 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2. இறுதி ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி அல்லது பயில்பவராக இருக்க வேண்டும்.
தாள் – 2
1. B.Ed தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
2. இறுதி ஆண்டு B.Ed தேர்ச்சி அல்லது பயில்பவராக இருக்க வேண்டும்.
இவ்வேலை வாய்ப்பிற்கான வயது : உச்ச வயது வரம்பு இல்லை
ஆசிரியர் தகுதி தேர்விற்கான நேரடி இலவச பயிற்சியானது சென்னையில் உள்ள கிண்டியில் ஆகஸ்ட் மாதம் 21 – ம் தேதி அன்று துவங்க உள்ளது.
TET பேப்பர் – 1 மற்றும் பேப்பர் – 2 விற்கான பயிற்சியைப் பெற
https://forms.gle/rnAmqdhpf2ujwp5e8 என்ற கூகுள் படிவம் லிங்கை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இதனைப் பற்றிய தகவல்களை பெற 9499966021, 043-22501032 என்ற அலைபேசி எண்ணை அணுகவும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
– தே.சுகன்யா