’’ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ரூபாய் 5000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர துணிவிருக்கிறதா CM sir?’’ என்று மு.அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்ட அறிக்கை:திமுக ஆட்சியில் 2021-2026 ல் இருந்த போது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறு வரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் நிதியை குறைப்பதற்கும் பெயரை மாற்றுவதற்கும், எதிரான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு கனிமம் எடுக்க முயற்சித்தபோது, “நான் முதல்வர் பதவியை இழந்தாலும்” அரிட்டாபட்டியில் கனிமங்கள் எடுக்க ஒன்றிய பாஜக அரசை அனுமதிக்க மாட்டேன்’’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, தமிழக மக்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் .
தற்போது, மாநில பட்டியலில் உள்ள சிறு கனிமங்கள் துறை நாடாளுமன்ற மசோதா மூலம் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்றதை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமோ, மசோதாவோ கொண்டு வருவதற்கு தைரியம் இருக்கிறதா CM sir ?
ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ரூபாய் 5000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர துணிவிருக்கிறதா CM sir? பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை என்று சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதல் பெற தைரியம் இருக்கிறதா CM sir ?
திமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டப்படி தடை செய்த முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் போன்று ஆன்லைன் லாட்டரி விற்பனைத் தடைச் சட்டம் கொண்டு வர இயலாத சுயநலவாதியாக இருக்கிறீர்களா CM sir ?
