மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு அச்சகத்தில் (SECURITY PRINTING PRESS) காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் 75 (பிரின்டிங் 68, பிட்டர் 3, எலக்ட்ரானிக்ஸ் – இன்ஸ்ட்ருமென்டேசன் 3, வெல்டர் 1), சூப்பர்வைசர் 8, ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, தீயணைப்பு 1 என மொத்தம் 96 இடங்கள் காலியாக உள்ளன.
பாதுகாப்பு அச்சக (எஸ்.பி.பி) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: தீயணைப்பு பணிக்கு பத்தாம் வகுப்பு, டெக்னீசியன் பணிக்கு ஐ.ஐ.டி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி படிப்பு, மற்ற பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு அச்சக (எஸ்.பி.பி) பணியிடங்களுக்கான வயதுத் தகுதி: 15.4.2024 அடிப்படையில் ஆபீஸ் அசிஸ்டென்ட் 18-28 சூப்பர்வைசர் 18 – 30, மற்ற பணிக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையம்: சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 200 செலுத்தினால் போதுமானது. கடைசிநாள்: வரும் 15.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு spphyderabad.spmcil.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
https://spphyderabad.spmcil.com/en/ தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு spphyderabad.spmcil.com என்ற இணையதள முகவரியைத் இந்த பெருமைவாய்ந்த பாதுகாப்பு அச்சகத்தில்தான் (எஸ்.பி.பி) தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் SPPH-Advt-No-01-2024-15.03.2024-5 செய்து படிக்கலாம்.