
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு ஓம் பிர்லா தமது செய்தியில் கூறியிருப்பதாவது:
“அன்பான சக குடிமக்களே, 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் தருணம் இது. நாடு சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று, அதன் இளைஞர்களின் ஆற்றலால் உந்தப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் உலகை வழிநடத்தும் ஒரு புதிய உறுதியுடன் நாம் நிற்கிறோம்.
நம் நாட்டின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். நமது இளைஞர்கள் கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் தேசத்தை முன்னோக்கிச் செலுத்துகிறார்கள்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் நமது அரசியலமைப்பு, ஜனநாயக விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பது இன்றியமையாதது. நமது இளைஞர்கள் தங்கள் கனவுகளை இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைத்து, தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு கருவியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த சுதந்திர தினத்தன்று, வலிமையான, தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் நமது பங்கை ஆற்றுவோம் என நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்தச் செய்தியுடன், உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!