Madras Murasu

ஈரான் அதிபர் மகளுடன் மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி

தில்லியில் உள்ள தேசிய கைவினைப் பொருட்கள் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் பஜார்’ நிகழ்ச்சிக்கு, ஈரான் அதிபர் மேதகு மசூத் பெசெஷ்கியானின் மகள் ஜஹ்ரா பெசெஷ்கியானை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி வரவேற்றார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவு ஒன்றில், ஈரான் அதிபரின் மகளுக்கு அரங்குகளைச்  சுற்றிக் காட்டவும், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் காட்சிப்படுத்தியிருந்த வளமான பாரம்பரியங்கள், கலை, கைவினைப்பொருட்கள், கலாச்சார மரபுகளைப் பகிர்ந்துகொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த பஜார், பிரிக்ஸ் நாடுகளை மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்கும் கலை, கைவினைத்திறன், கலாச்சாரத் தொடர்புகளின் ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருந்தது என்றும் திருமதி அன்னபூர்ணா தேவி குறிப்பிட்டார்

பிலிப்பைன்ஸ் குடியரசின் முதல் பெண்மணி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பிலிப்பைன்ஸ் அதிபரின் துணைவியார் திருமதி லூயிஸ் அரனேட்டா-மார்கோஸை செப்டெம்பர் 12, 2026 அன்று மதிய உணவு விருந்தின்போது சந்தித்தார். அப்போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையையும், வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களைத் தலைவர்களாகவும், சமமான கூட்டாளிகளாகவும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.

Scroll to Top