தமிழ்நாடு அரசில் ஏற்பட்டுள்ள காலிப்பணி இடங்களில் CA / ICWA., மற்றும் C.A inter / ICWA (CMA) inter முடித்தவர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் 08.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்ழிநாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள் / நிறுவனங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் பதவிகளுக்கான காலிப்பணி இடங்களில் (மொத்தம் 52 பேர்) நேரடி நியமனம் செய்வதற்கான கணி வழித் தேர்விற்கு 08.12.2023 அன்று வரை இணைய வழியில் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு, கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.
பதவி மற்றும் காலிப்பணி இடம், கல்வித்தகுதி:
1. கணக்கு அலுவலர் (குறியீடு-3), தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள். மொத்த காலிப்பணியிடம் – 07. Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA)
2. கணக்கு அலுவலர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், காலிப்பணியிடம்-01. Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India / ICWA Course i.e., Must have passed the final examination conducted by the Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India or its equivalent.
3. மேலாளர் நிலை -3 நிதி. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம். காலிப்பணியிடம்-4. CA /ICWA
4. முதுநிலை அலுவலர்- நிதி. காலிப்பணியிடம் 27. CA /ICWA
5. மேலாளர்- நிதி. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனம் காலிப்பணியிடம் – 13. Must possess any degree with C.A inter / ICWA (CMA) inter.
* இணைய வழி விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க/விண்ணப்பத்திலுள்ள விபரங்களைத் திருத்த / கட்டணம் செலுத்த இறுதி நாள் 08.12.2023
* இணைய வழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம் : 13.12.2023 நள்ளிரவு 12.01 முதல் 15.12.2023 இரவு 11.59 மணி வரை
* சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய / மாற்ற / மீள்பதிவேற்றம் செய்ய இறுதிநாள் : 25.01.2024
* கணினி வழித்தேர்வு: பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இத்தேர்வு குறித்த முழு விளம்பரம், தேர்வு பாடத்திட்டம், தகுதி சான்றிதழ் மற்றும் தேர்வு அரசாணைகள் குறித்து https://www.tnpsc.gov.in/ என்ற தளத்தில் முழு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.