மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்குத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களை நியமித்துள்ளது.
பகவத் பிரசாத் மக்வானா ஆணையத்தின் தலைவராகவும், கைஷப் பிஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மனோஜ் குமார் பால்மீகி, சுஷ்மா கௌடியால், ரவி ராமு கலோஸ் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள், 2028 மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.( Shri Bhagwat Prasad Makwana has been appointed as the Chairperson of the Commission, while Shri Kaishab Bihari as the Vice-Chairperson. Shri Manoj Kumar Balmiki, Smt. Sushma Gaudiyal and Shri Ravi Ramu Kalose have been appointed as Members of the Commission).
தலைவர் பகவத் பிரசாத் மக்வானா, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சமூகப் பணிகளில், குறிப்பாக பட்டியல் வகுப்பு சமூகங்களின் நலன், மேம்பாடு தொடர்பான விஷயங்களில், பரந்த அனுபவம் கொண்டவர். இவர் இதற்கு முன்னர் உத்தராகண்ட் அரசின் தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கைஷப் பிஹாரி, பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒடிசாவைச் சேர்ந்த, விவசாயியான இவர், பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் மேம்பாட்டிற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
