’’தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த காங்கிரஸ் பாஜக-வோடு தமிழக முதல்வரும் சேர்ந்து மேகதாது அணை கட்டிவிடலாம் என்ற உங்கள் கனவு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது, தமிழக மக்களோடு சேர்ந்து உங்களை ஆட்சியிலிருந்தே ஓட ஓட விரட்டியடிப்பார் CM sir ?’’ என்று முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு அறிக்கை :
சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென்மாநிலங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வர வேண்டும் என்று கூறி இருப்பது தமிழக முதல்வரின் பலவீனத்தை பிரதிபலிக்கிறது. அதே மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் “நீர் பங்கீடு” என்பது “நீர் ஒத்துழைப்பு” என மாற வேண்டும் என்றும் மேகதாது அணை தமிழகத்திற்காக கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பெங்களூரு குடிநீருக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தவிர மீதி அனைத்தையும் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுவோம் என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் உத்தரவாதமாக அளித்துள்ளோம் என்று அவர் பேசியது அனைத்தும் வஞ்சக வார்த்தை CM sir ?
தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் மூலம் சதி திட்டம் தீட்டி மிரட்டுவதற்கு முதல்வர் ஜோசப் விஜய் துணை போகலாம். திமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழக மக்களும் ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் CM sir ? மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் “மேகதாது அணை கட்டவிடமாட்டோம்” என்று பேசுவதற்கு அஞ்சி நடுங்கி அவர்களின் மிரட்டலுக்கு பயந்து விவாதிக்கலாம், பேசலாம் என்ற தொனியில் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அணை நீர் திறப்பு உட்பட அனைத்து நிர்வாகமும் நமது மாநில கட்டுப்பாட்டில் இருந்ததை, எம்ஜிஆர் அவர்கள் முதல்வர் ஆனதும் தமிழக காவல்துறையை வாபஸ் பெற்று, கேரள காவல்துறை பாதுகாப்புக்கு மாற்றிய நாள் முதல் இன்று வரை முல்லைப் பெரியாறு அணை சார்ந்த துன்பங்களை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறோம். அதன் தொடர்ச்சிதான் நேற்று மாநாட்டில் பேசிய கேரள முதல்வர், முல்லைப்பெரியார் அணைக்கு புதிய அணை கட்ட வேண்டும் என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதுபோல் தற்போது தமிழக நடிகர் முதல்வராகி தனது கர்நாடக நண்பர் வெங்கட் கே நாராயணாவோடு சேர்ந்து மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசுக்கு துணை நின்று, தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய நினைக்கும் உங்களை தமிழகம் மன்னிக்காது CM sir ? கலைஞர் அமைத்த “காவிரி தீர்ப்பாயம்” தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் “காவிரி மேலாண்மை வாரியமாக” தந்த தீர்ப்பை, தட்டிற்பறித்து காவிரி மேலாண்மை ஆணையமாக மாற்றி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த காங்கிரஸ் பாஜக-வோடு தமிழக முதல்வரும் சேர்ந்து மேகதாது அணை கட்டிவிடலாம் என்ற உங்கள் கனவு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது, தமிழக மக்களோடு சேர்ந்து உங்களை ஆட்சியிலிருந்தே ஓட ஓட விரட்டியடிப்பார் CM sir ?
