தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 நடத்தப்படுகின்றன. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் விளையாட்டுத் திறமை கொண்டவர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தலாம். 2026ஆம் ஆண்டில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக விளையாட்டுப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
1. பள்ளி மாணவர்கள்:
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும், 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 01.01.2008 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள்.
2. கல்லூரி மாணவர்கள்:
இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்கலாம். 01.07.2001 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள்.
3. பொதுப்பிரிவு:
15 முதல் 35 வயது வரையிலான பொதுமக்கள் பங்கேற்கலாம்.
4. மாற்றுத்திறனாளிகள்:
வயது வரம்பின்றி தகுதியான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
5. அரசு ஊழியர்கள்:
தகுதியுடைய அரசு ஊழியர்களும் போட்டிகளில் பங்கேற்கலாம்.
என்னென்ன விளையாட்டுகள்?
கடந்த ஆண்டு 38 விளையாட்டுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்யிங், கேனோயிங் உள்ளிட்ட 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 45 விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெறுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆன்லைன் பதிவு: 06.08.2026 முதல் 31.08.2026 மாலை 6.00 மணி வரை.
ஆர்வமுள்ளவர்கள் தாங்களாகவோ அல்லது பள்ளி/கல்லூரி மூலமாகவோ பதிவு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
போட்டிகள் நடைபெறும் காலம்
மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளன. மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பரிசுத் தொகை
மாவட்ட மற்றும் மண்டல அளவில் – தனிநபர் போட்டிகள்:
- முதல் பரிசு – ரூ.3,000
- இரண்டாம் பரிசு – ரூ.2,000
- மூன்றாம் பரிசு – ரூ.1,000
மாநில அளவில் – தனிநபர் போட்டிகள்:
- முதல் பரிசு – ரூ.1,00,000
- இரண்டாம் பரிசு – ரூ.75,000
- மூன்றாம் பரிசு – ரூ.50,000
குழு போட்டிகள் – மாநில அளவில்:
- முதல் பரிசு – ஒருவருக்கு ரூ.75,000
- இரண்டாம் பரிசு – ஒருவருக்கு ரூ.50,000
- மூன்றாம் பரிசு – ஒருவருக்கு ரூ.25,000
எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ Chief Minister’s Trophy 2026 பதிவு இணையதளத்தில் https://tncmtrophy.sdat.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முதலமைச்சர் கோப்பை 2026 – அதிகாரப்பூர்வ பதிவு இணையதளம்
பதிவு உதவி: “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையம் – 95140 00777. அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
விளையாட்டு ஆர்வம் கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி, மாவட்டம் முதல் மாநில அளவு வரை முன்னேறி சாதனை படைக்கலாம்.
