புதுடெல்லி,
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் இந்தியா வருகை தந்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி( சி இ ஓ )டிம் குக் திறப்பு விழாவில் பங்கேற்றார்.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.இந்த சந்திப்பு குறித்து டிம் குக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
அன்பான வரவேற்புக்கு பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் – கல்வி மற்றும் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் வரை, நாடு முழுவதும் வளரவும் முதலீடு செய்யவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். என தெரிவித்துள்ளார்.