இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer – SCO) பணிகளுக்கு 77 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பக் காலக்கெடு தற்போது டிசம்பர் 2, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Manager (Security) / Deputy Manager (Security) | 60 |
| Assistant Manager – Engineer (Fire) | 17 |
| மொத்தம் | 77 |
1. மேனேஜர் / துணை மேலாளர் (பாதுகாப்பு)
-
காலியிடங்கள்: 60
-
வயது வரம்பு: 25 முதல் 40 வயது வரை.
-
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
-
கூடுதல் தகுதி: ராணுவம், கடற்படை, விமானப்படை அல்லது துணை ராணுவப் படைகளில் குறிப்பிட்ட பதவி மற்றும் பணியனுபவம் அவசியம்.
2. உதவி மேலாளர் – தீயணைப்புப் பொறியாளர்
-
காலியிடங்கள்: 17
-
வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.
-
கல்வித்தகுதி: B.E./B.Tech Fire Engineering அல்லது Fire Safety தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பட்டப்படிப்பு.
-
அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொடர்புடைய தீயணைப்புப் பாதுகாப்புப் பணியில் அனுபவம் தேவை. மாற்றுத் தகுதிகளுக்கு ஏற்ப அனுபவ நிபந்தனை மாறுபடும்.
முக்கிய தேதிகள்
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பம் தொடக்கம் | 04.11.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 02.12.2026 |
| தேர்வு | டிசம்பர் 2026 / ஜனவரி 2027 (உத்தேசம்) |
தேர்வு முறை
-
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
-
நேர்முகத் தேர்வு
-
இறுதித் தகுதிப் பட்டியல்
விண்ணப்பக் கட்டணம்
-
பொதுப்பிரிவு / OBC / EWS: ரூ.750
-
SC / ST: கட்டணம் இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
SBI – Current Openings / Apply Onlineஅறிவிப்பு எண்கள்:
-
CRPD/SCO/2026-27/28 – Security
-
CRPD/SCO/2026-27/29 – Fire Engineer
முக்கியக் குறிப்பு: இது பொதுவான பட்டதாரிகளுக்கான வங்கி எழுத்தர் வேலை அல்ல. பாதுகாப்புப் பணிக்கு ராணுவம் அல்லது துணை ராணுவ அனுபவமும், தீயணைப்புப் பொறியாளர் பணிக்கு உரிய தொழில்நுட்பக் கல்வியும் அனுபவமும் தேவை.
