இந்திய ரயில்வேயின் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான சிறப்புப் பிரிவு (Isolated Categories) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 191 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியிட விவரங்கள்
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| தலைமை சட்ட உதவியாளர் (Chief Law Assistant) | 17 |
| அரசு வழக்கறிஞர் (Public Prosecutor) | 21 |
| மூத்த விளம்பர ஆய்வாளர் (Senior Publicity Inspector) | 8 |
| இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator – Hindi) | 79 |
| பணியாளர் நல ஆய்வாளர் (Staff and Welfare Inspector) | 27 |
| அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) | 3 |
| ஆய்வக உதவியாளர் (Lab Assistant Grade III) | 36 |
| மொத்தம் | 191 |
கல்வித்தகுதி
பணியிடங்களைப் பொறுத்து சட்டப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வித்தகுதிகள் தேவைப்படும்.
வயது வரம்பு
18 முதல் 40 வயது வரை. பணியிடத்தைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
சம்பளம் : 7-வது ஊதியக்குழு அடிப்படையில் மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை ஆரம்ப ஊதியம் வழங்கப்படும். இதர படிகளும் விதிகளின்படி வழங்கப்படும்.தேர்வு முறை
- கணினி வழித் தேர்வு (CBT)
- மொழிபெயர்ப்புத் தேர்வு (ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மட்டும்)
- சான்றிதழ் சரிபார்ப்பு
- மருத்துவப் பரிசோதனை
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடக்கம்: 05.11.2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2026
- தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 06.12.2026
- விண்ணப்பத் திருத்தம்: 07.12.2026 முதல் 16.12.2026 வரை
விண்ணப்பிக்கும் முறைதகுதியுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbapply.gov.in/
அறிவிப்பு எண்: CEN 09/2026 | விண்ணப்பிக்கும் முன்பு ஒவ்வொரு பணிக்குமான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.
