Madras Murasu

ONGC நிறுவனத்தில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (Oil and Natural Gas Corporation – ONGC) 2026–27ஆம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,047 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2026

 

காலியிடங்கள்: 3,047

பயிற்சிப் பிரிவுகள்:

  • Trade Apprentice
  • Technician Apprentice
  • Graduate Apprentice

கல்வித்தகுதி:

பணியின் தன்மைக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட தகுதியுடையவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 முதல் 24 வயது வரை. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். வயது கணக்கீட்டுக்கான நாள் 29.11.2026.

பயிற்சிக் காலம்: 12 மாதங்கள்.

மாதாந்திர உதவித்தொகை:

  • ₹8,200 முதல் ₹12,300 வரை (பிரிவுக்கு ஏற்ப).

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு கிடையாது. கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தரவரிசைப் பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவர். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

முக்கிய தேதிகள்:

  • அறிவிப்பு வெளியீடு: 29.10.2026
  • விண்ணப்பம் தொடக்கம்: 29.10.2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2026
  • உத்தேசத் தேர்வு முடிவு: 15.12.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையவர்கள் NAPS அல்லது NATS இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப இணையதளங்கள்:

அறிவிப்பு எண்: ONGC/APPR/1/2026

முக்கியக் குறிப்பு: இது 12 மாத காலப் பயிற்சித் திட்டமாகும். நிரந்தர அரசு வேலைவாய்ப்பு அல்ல. விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தங்களது கல்வித்தகுதி, தொழிற்பிரிவு மற்றும் பணியிடத் தகுதியைச் சரிபார்க்கவும்.

ஆதாரங்கள்: ONGC அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கான சிறப்புத் தகவல்: சென்னை, காரைக்கால் உள்ளிட்ட தெற்கு மண்டலப் பணியிடங்களும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. சென்னைப் பணியிடங்கள் 40; காரைக்கால் 98.

 

Scroll to Top