Madras Murasu

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி..! இறுதிக்கட்டக் கலந்தாய்வு அறிவிப்பு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிக் காலியிடங்கள் கலந்தாய்விற்கான அறிவிக்கை வெளியாகியிருக்கிறது.

 

அதன் முழு விபரம் :

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை ஆயுஷ் (BAMS / BSMS / BUMS / BHMS) மருத்துவப் பட்டப்படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் மூன்று சுற்று இணையவழிக் கலந்தாய்வுகள் நிறைவடைந்த பின்னரும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சேர்க்கைக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

– பி.எம்.எஸ்.எஸ். / பி.எஸ்.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ். / பி.ஹெச்.எம்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டை www.tnayushselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

– இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

– தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2026-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.

– மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை www.tnayushselection.org இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

– இறுதிக் காலியிடங்களுக்கான சுற்றின் கலந்தாய்வு விவரங்கள் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

– விண்ணப்பிக்கும் முன் உரிய தகவல் தொகுப்பேட்டை முழுமையாகப் படித்து, சரியான தகவல்களைப் பதிவேற்றவும். தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவிலான நகல்களையும் பதிவேற்ற வேண்டும்.

முக்கிய அறிவுறுத்தல்கள்
  • விண்ணப்பக் கட்டணம், இணையவழிக் கலந்தாய்வுக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் இணையவழியாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • படிப்புப் பிரிவுகள்: BAMS, BSMS, BUMS, BHMS.

  • படிப்புக் காலம்: 5½ ஆண்டுகள்.

  • படிப்பிற்கான கல்வித்தகுதி: 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி).

விண்ணப்பக் கட்டணம்
இட ஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பக் கட்டணம்
OC, BC, BCM, MBC/DNC ₹500
SC, SCA, ST விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ₹1,000
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ₹1,000
முக்கிய தேதிகள்
விவரம் தேதி
இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம் 06.11.2026
இணையவழி விண்ணப்பப் பதிவு கடைசி நாள் 12.11.2026 மாலை 5.00 மணி

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tnayushselection.org

 

Scroll to Top