சென்னை ஐஐடி சான்சிபாரின் இரண்டாவது தொகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க 2024, ஏப்ரல் 15; எம்டெக் படிப்புக்கு விண்ணப்பிக்க 2024, மார்ச் 15 கடைசி நாளாகும்.
2024-25 கல்வியாண்டுக்கான இரண்டாவது தொகுப்பு சென்னை ஐஐடி சான்சிபார் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, எம்டெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருபாடத் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மாணவர் சமூகங்களின் அளவு கடந்த உற்சாகத்தைத் தொடர்ந்து, இருபாடத் திட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இக்கல்வி நிறுவனம் பரிசீலித்து வருகிறது. கற்பித்தல்-கற்றல் அனுபவங்களை அதிக அளவில் வழங்கவும், சந்தையின் தேவைக்கு ஏற்ப அளிக்கவும் தொழில்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. 2023-ம் ஆண்டில் ஐஐடி-களிலேயே முதன்முறையாக சென்னை ஐஐடி வெளிநாட்டில் முழுஅளவிலான கல்வி வளாகத்தை நிறுவியது.
பிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் – 15 ஏப்ரல் 2024. ஸ்கிரீனிங் தேர்வு 9 ஜூன் 2024 அன்று ( இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணிவரை). எம்டெக் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் 15 மார்ச் 2024.
தேர்வு செயல்முறையின் பல்வேறு நிலைகள், மதிப்பீட்டின் விவரங்கள், ஸ்கிரீனிங் சோதனை முறை, கட்டண அமைப்பு, முக்கிய நாட்கள், விரிவான பாடத்திட்டம், தகுதி அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பின்வரும் இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்: https://www.iitmz.ac.in/IITMZST_Information_Brochure_2024_v1.1.pdf
இந்த இருபாடப்பிரிவுகளின் தனித்துவ அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்த ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரின் (தான்சானியா) பொறியியல் -அறிவியல் பள்ளிப்பொறுப்பு இயக்குநர் மற்றும் டீன் பேராசிரியை ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, “ஐஐடி எம்சான்சிபாரில் இருந்து கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இப்பிராந்தியத்தில் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவும், திறன் அடிப்படையிலான கல்வியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். “ஐஐடி சான்சிபாரில் இரண்டாம் தொகுப்பு மாணவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதோடு, விண்ணப்பம், தேர்வு செயல்முறைகளில் அவர்கள் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2023-ல் சான்சிபார் வளாகம் தொடங்கப்பட்டபின் இந்தியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் கல்விமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தவும், திறன் அடிப்படையிலான கல்விக்கான தேடலில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதையும் இக்கல்வி நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
ஸ்கிரீனிங் தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண் 60. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.