ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக செப்டம்பர் இரண்டாம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை விடுமுறை நாளான அன்று பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அவசர அலுவல்களை கவனிக்க சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு. அருணா அறிவித்துள்ளார். மேலும் இத்தகவலை www.chennai.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
– தே. சுகன்யா