எப்போதும் எனக்கு கார்த்திக்கையே பிடிக்கும். அபூர்வ சகோதரர்கள் எங்களது பள்ளியின் மைதானத்தில் பிரமாண்ட வெள்ளித் திரையில் எப்போது பார்த்தேனோ அன்றிலிருந்து கமல் நமது நெஞ்சை ஊடுறுவ ஆரம்பித்தார்.
படம் அப்போதைய இருந்த இளம் பிராயத்து மனசு என்னவெல்லாமோ இருந்ததோ அப்படியே இருந்தார் கமல். அதனால் என்னவோ பிடித்துப் போனது. பொதுவாக காரத்திக் படங்கள் என்றால் வருசம் 16, பாண்டிய நாட்டுத் தங்கம், பெரியவீட்டுப் பண்ணக்காரன் இப்படியாய் ஆசைதீர பார்த்த கண்கள் கமலை ஏனோ கொண்டாடியது.
படத்தில் ரூபிணியைக் காதலிப்பார். ஆனால் அவர் வேறொரு ஆண் மகனை மணந்துவிடுவார். அந்த நேரத்தில் ஒலிக்கும் பாடல் டைமிங்கில் கமலின் முக பாவனைகள் சும்மா பிச்சு உதறுவார். அவர் அழுகையில் வரமால் இருந்து விடமா அழுகை நமக்கு…?
“ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு”
இந்தப் பாடல் வரிகளில் நம்மையே அழுக வைத்துவிடுவார். இப்படி பொன்னான நேரங்களில் எல்லாம் நம் மனசை காதலி மட்டுமல்ல கமலும் காயம் செய்துவிடுகிறார்.
படமெங்கும் மாற்றுத் திறனாளியாக (குள்ளமாக) வரும் கமல் இந்தப் படத்தையே தாங்கிப் பிடித்து இருப்பார். காதல், குரோதம், பழிக்குப்பழி, நகைச்சுவை, பஞ்ச் டயலாக் என ரவுண்டு கட்டி அடித்து இருப்பார்.
படம் முடிந்து வருகையிலும் அந்தக் கமலே நம் நெஞ்சங்களில் அனாசயம் செய்திருப்பார். அவர் ஆடும் நடனம் இன்னும் சிறப்பாக நம்மை ஆட்டிப்படைக்கும். ஒரு தசாப்த காலத்திலும் கிராமங்களின் நடுநிசியிலும் எங்குமே வியாபித்திருந்தார்.
எத்தனையோ படங்களில் விருதோ அட்டகாசமாக நடித்திருந்தாலும் அபூர்வசகோதரர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவில் முதன்முதலில் வெளி வந்த குள்ளமான தோற்றம் கொண்ட அற்புதமான படம்.
நிற்க…
இதில் எங்களது ஊரில் எங்கள் மாமா ஒருவர் ரேடியோ செட் வைத்திருந்தார். அவர் பெயர் முனியாண்டி. ஆனால் கமல்மேல் உள்ள ப்ரியத்தினால் கமலஹாசன் என்றே மாற்றிக் கொண்டார். ஊரில் திருவிழாக்களில் ரேடியோ பாடி முடித்ததும் சாந்தி இசையகம் உரிமையாளர் “கமலஹாசன்” என்றே ஒலிக்கும். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் 42 வருடங்களாக….!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்♥