Home கல்வி கல்லூரிகள் ’’5 ஆண்டு பிஎஸ்-எம்எஸ் படிப்பு நுழைவுத் தேர்வு..!’’ விண்னப்பிக்க மே 25-ம் தேதி கடைசி நாள்

’’5 ஆண்டு பிஎஸ்-எம்எஸ் படிப்பு நுழைவுத் தேர்வு..!’’ விண்னப்பிக்க மே 25-ம் தேதி கடைசி நாள்

0
’’5 ஆண்டு பிஎஸ்-எம்எஸ் படிப்பு நுழைவுத் தேர்வு..!’’ விண்னப்பிக்க மே 25-ம் தேதி கடைசி நாள்

இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வழங்கப்படும் ஐந்தாண்டு பிஎஸ்-எம்எஸ் (BS-MS) இரட்டை பட்டப்படி திட்டங்களில் மாணவர் சேர்க்கையை வழங்குவதற்காக ஐஐஎஸ்இஆர் (IISER) நுழைவுத் தேர்வை நடத்துகிறது. பெர்கம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம், மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

உயிரியல் அறிவியல், தரவு அறிவியல், பூமி மற்றும் காலநிலை அறிவியல், பொருளாதார அறிவியல், பொறியியல் அறிவியல், புவியியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல் ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு முதல், ஐஐடிஎம் (மெட்ராஸ் ஐஐடி) நிறுவனம் மருத்துவ பொறியியல் பிரிவில் பிஎஸ்-எம்எஸ் படிப்பையும் புகழ்பெற்ற பெங்களூர் ஐஐஎஸ்சி நிறுவனம் (indian institute of science), அறிவியல் பிரிவு பாடத்திற்கு சேர்க்கை நடத்துகிறது.

இந்த நிறுவனங்களில் சேர ஐஏடி 2023 (IAT) என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதற்கான நுழைவுத்தேர்வு ஜுன் 17 ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. இத்தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, தேர்வு பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ள https://iiseradmission.in/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here